Don't Miss!
- News
என்ன ஆணவம்! ஆண்டாள் கோயில் ஊழியரை எட்டி உதைக்கும் அதிகாரி.. பரபர வீடியோ! பொங்கி எழும் நெட்டிசன்கள்
- Automobiles
350 சிசி பைக்கில் சம்பவம் செய்த ராயல் என்ஃபீல்டு... போட்டிக்கு யாருமே இல்ல...
- Lifestyle
உங்க காலில் இந்த அறிகுறிகள் இருந்தா...அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கணைய புற்றுநோயோட அறிகுறியாம்!
- Finance
இன்றைய தங்கம் விலை எப்படியிருக்கு.. சென்னையில் என்ன நிலவரம்?
- Sports
மோடி மைதானத்திற்கு கிடைத்தது மோட்சம்.. ஒரு வழியாக ஆசை நிறைவேற போகுது.. பிசிசிஐ தந்த அப்பேட்
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் சாதனம் வாங்க சரியான நேரம்- அமேசானில் வழங்கப்படும் அதிரடி தள்ளுபடி!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
யூடியூப் நடிகையையும் படுக்கைக்கு அழைத்த பிரபல நடிகர்.. கனவுகளை நொறுக்கிட்டாருன்னு வேதனை!
சென்னை: சினிமாவில் தரமான படங்கள் வருகிறதோ இல்லையோ, ஆஃப் ஸ்க்ரீனில் பல தரமான சம்பவங்களை பிரபல நடிகர்களே செய்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன.
மீடூ உள்ளிட்ட பிரச்சனைகள் கிளம்பியும் பல நடிகர்கள் திருந்துவதாக தெரியவே இல்லை என கோடம்பாக்கத்தில் பலமாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
இந்நிலையில், பிரபலமான யூடியூப் சேனலில் நடித்து வரும் ஒரு இளம் பெண்ணை பிரபல நடிகர் ஒருவரே படுக்கைக்கு அழைத்ததாக அவர் கண்ணீருடன் பேசியிருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.
இதுக்கு மட்டும் தான் நான் அடிக்ட்...சிவகார்த்திகேயன் சொன்ன சீக்ரெட்

வாய்ப்பு தருவதாக
பிரபல யூடியூப் சேனலில் ஒளிபரப்பாகி வரும் வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து இளைஞர்களின் மனதை அந்த 'ச' எழுத்து நடிகை கவர்ந்து வருகிறார். அவருக்கு பிரபல நடிகரின் ஒருவரின் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக வந்த அழைப்பை சந்தோஷமாக எடுத்து பேசியுள்ளார். ஆனால், கடைசியில் அவருக்கு நடந்த கொடுமையான விஷயம் முன்னணி நடிகர்களே ஏன் இப்படி வெறிபிடித்து அலைகின்றனர் என்கிற கேள்வியை எழுப்பி உள்ளது.

கனவுகளை நொறுக்கிட்டாரு
தனக்கு ரொம்பவே பிடித்த பிரபலமான நடிகரின் படத்தில் நடிக்க ஒருவழியாக வாய்ப்பு கிடைத்து விட்டது. இதுவரை யூடியூப் சேனலில் கடுமையாக உழைத்து நடித்ததற்கு கிடைத்த வாய்ப்பு என அந்த நடிகருடன் நடிக்கப் போகிறோமே என்கிற கனவுகளுடன் அந்த போன் காலில் பேசிக் கொண்டிருந்த நடிகைக்கு கடைசியாக சொன்ன அந்த வார்த்தை ஒட்டுமொத்த கனவுகளையும் அப்படியே நொறுக்கி விட்டதாக புலம்பித் தள்ளி உள்ளார்.

படுக்கைக்கு அழைத்த நடிகர்
அந்த இளம் நடிகையுடன் போனில் பேசிய அந்த பிரபல நடிகர் நடிப்பு தொடர்பாக அனைத்தையும் பேசி முடித்து விட்டு கடைசியாக, தனது கெஸ்ட் ஹவுஸுக்கு படுக்க வர அழைத்துள்ளாராம். இதனால், பதறிப்போன அந்த இளம் நடிகை அந்த போன் காலை உடனடியாக கட் செய்து விட்டாராம். அந்த நடிகர் மீது இத்தனை நாட்களாக வைத்திருந்த மதிப்பு மரியாதை எல்லாம் இப்படி ஒரு நொடியில் நொறுங்கிடுச்சே என்றும் இவ்வளவு கீழ்த்தரமாகவா முன்னணி நடிகர்கள் இன்னும் இருக்கின்றனர் என கதறி அழுது விட்டாராம்.

யார் அந்த நடிகர்
மனைவியை பிரிந்து தனிமையில் வாடி வரும் அந்த பிரபல நடிகர் தான் இளம் நடிகை என்று கூட பார்க்காமல் இப்படியொரு அட்ஜெஸ்ட்மென்ட் டீலிங் பற்றி பேசி அந்த நடிகையின் மனதையே சுக்கு நூறாக உடைத்துள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளன. இதுதொடர்பாக புகார் கொடுத்தால் தனக்குத் தான் பிரச்சனை வரும் என அந்த இளம் நடிகையும் அமைதி காத்து வருகிறாராம்.