அந்த நடிகருக்கு அவ்வளவு.. எனக்கு இவ்ளோ கம்மியா?.. அடம் பிடிக்கும் வம்பு நடிகர்.. அடுத்த பஞ்சாயத்து?
சென்னை: ஒல்லி நடிகரும் தமாஸ் நடிகரும் வருடம் முழுவதும் சினிமா சினிமா என பிசியாக இருந்து தங்களின் இடத்தையும் பாக்ஸ் ஆபிஸ் தரத்தையும் அடுத்த லெவலுக்கு முன்னேற்றி வரும் நிலையில், வம்பு நடிகர் நீண்ட நாட்களாக படங்களை கொடுக்காமல் ரசிகர்களை காக்க வைத்துக் கொண்டிருக்கும் சூழலில் சம்பளம் மட்டும் அந்த நடிகர்களுக்கு இணையாக கொடுத்தால் தான் நடிப்பேன் என அடம் பிடிப்பதாக சர்ச்சை வெடித்துள்ளது.
சினிமாவில் ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களுக்கு சம்பளம் எல்லாம் கொடுப்பது கிடையாது. அதற்கு காரணம் ஹீரோக்களால் தான் படத்திற்கு வசூல் வருகிறது என்கிற வியாபார கணிப்பு தான். உமன் சென்ட்ரிக் படங்களின் மூலம் தான் நடிகைகள் தங்களுக்கான சம்பளத்தை உயர்த்திக் கொள்கின்றனர்.

தொடர்ந்து படங்களை கொடுக்கவில்லை என்றால் நடிகர்கள் மற்றும் நடிகைகள் அப்படியே ஃபீல்ட் அவுட்டாகி தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்ளும் நிலையும் ஏற்படுகிறது.
அதிக சம்பளம்: கோலிவுட்டில் தற்போது நடிகர்கள் பலர் 50 கோடிக்கு குறைவாக சம்பளம் கொடுத்தால் நடிக்கவே மாட்டோம் என்கிற ரேஞ்சுக்கு உயர்ந்துவிட்டனர். ஆனால், அவர்கள் நடிக்கும் படங்களின் வசூல் எல்லாம் 50 கோடி ரூபாய் வசூல் செய்யவே ரொம்பவே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சில நடிகர்கள் பல நூறு கோடிக்கு பாக்ஸ் ஆபிஸை உயர்த்தி அதிக சம்பளத்தை அள்ளி வருகின்றனர்.
அடம் பிடிக்கும் வம்பு நடிகர்: ஆனால், இதில் எதுவுமே செய்யாமல் இந்த ஆண்டு முழுவதும் படமே கொடுக்காமல் இருக்கும் வம்பு நடிகர் திடீரென தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்த வேண்டும் என அடம்பிடிப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. ஏற்கனவே அந்த தயாரிப்பாளருக்கும் நடிகருக்கும் இடையே கோர்ட் வாசல் வரை பிரச்சனை சென்ற நிலையில், அதெல்லாம் பேசி சரி செய்துக் கொள்ளலாம் என நினைத்த நிலையில், தயாரிப்பாளருக்கு மீண்டும் தலைவலியை கொடுத்து வருகிறார் அந்த நடிகர் என பேச்சுக்கள் அடிபடத் தொடங்கியுள்ளன.
அடுத்த பஞ்சாயத்து: நடிகரின் புதிய படம் எப்போது தொடங்கப்போகிறது என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், நடிகரோ சம்பள பிரச்சனை காரணமாக அடுத்த படத்தில் அடியெடுத்து வைக்க மாட்டேன் என அலட்சியம் செய்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பேசிக் கொள்கின்றனர். ஆனால், நடிகரின் படம் வெளியானால் அவரது சம்பளம் அசால்ட்டாக அவர் எதிர்பார்ப்பதை விட பல மடங்கு உயர்ந்துவிடும் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











