கொடுத்த வாய்ப்பை கோட்டை விட்ட இயக்குநர்.. அடுத்த வாய்ப்புக்கு ஆப்பு வைத்த நடிகர்.. என்ன ஆச்சு?

சென்னை: தொடர்ந்து தோல்வி படங்களை அந்த இயக்குநர் கொடுத்து வந்தாலும், சொந்தம் என்பதால் வேறு வழியில்லாமல் கடைசியாக அந்த இயக்குநர் கொடுத்த டார்ச்சர் காரணமாக அவர் இயக்கத்தில் நடிக்க அந்த நடிகர் ஒப்புக் கொண்டார்.

ஆனால், நடிகருக்கு வாக்கு கொடுத்தது போல அந்த இயக்குநர் கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்டு விட்டார். இதனால் இயக்குநருக்கும் நடிகருக்கும் இடையே பெரிய மனஸ்தாபமே ஏற்பட்டு இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

Popular actor avoids flop Director for already committed movie?

மேலும், இயக்கும் வாய்ப்பு கிடைக்காத நிலையில், நடித்து வந்த அந்த இயக்குநருக்கு சமீபத்தில் நடிக்கவும் வாய்ப்புகள் கிடைக்காமல் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

அப்போ அப்படி: ஒரு காலத்தில் அந்த இயக்குநர் இயக்கும் படங்கள் என்றாலே இளைஞர்கள் தியேட்டருக்கு அலைமோதிக் கொண்டிருந்தனர். அந்த இயக்குநர் இயக்கத்தில் வெளியான படங்களின் காட்சிகளும், பாடல்களும் அந்த அளவுக்கு இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது.

ஆனால், அதன் பின்னர் இயக்குநரிடம் சுத்தமாக சரக்கு தீர்ந்த நிலையில், சமீப காலமாக படம் இயக்குகிறேன் என தயாரிப்பாளர் காசை கரியாக்கி வருவது தான் மிச்சம் என்கிற நிலைக்கு அந்த இயக்குநர் வந்து விட்டார்.

மறுத்து வந்த நடிகர்: சில படங்களை அந்த இயக்குநர் சொந்த நடிகரை வைத்தே இயக்கலாம் என ஷூட்டிங் எல்லாம் சென்றாலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநர் செய்யும் சொதப்பல்கள் காரணமாக ஆளை விடுறா சாமி என சில படங்களில் இருந்து நடிகர் ஒரே ஓட்டமாக ஓட்டம் எடுத்த கதைகளும் நிறையவே இருக்கு.

அப்படி இருந்தும் புதுசா கதை எழுதியிருக்கேன். இந்த முறை வேறமாதிரி படம் எடுக்கப் போகிறேன் என அந்த நடிகரை மூளைச் சலவை செய்து ஒரு வழியாக சில படங்களை அவருடன் இயக்கப் போவதாகவே அந்த இயக்குநர் அறிவித்து விட்டார். மேலும், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த சில படங்களின் பார்ட் 2 படங்களும் அதில் இடம்பெற்றிருந்தன.

கோட்டை விட்ட இயக்குநர்: இதுதான் உனக்கு கடைசி வாய்ப்பு, இந்த படம் ஹிட் அடித்தால் தொடர்ந்து உன் படத்தில் நடிப்பேன். இல்லையென்றால், இதற்கு மேல் டார்ச்சர் செய்யாதே என்றே அந்த இயக்குநருக்கு வார்னிங் கொடுத்தே அந்த நடிகர் அந்த படத்தில் நடித்துள்ளார்.

ஆனால், வழக்கம் போல ஒரு கட்டத்துக்கு மேலே, இயக்குநர் படத்தை சொதப்ப ஆரம்பித்த நிலையில், படம் வெளியாகி அட்டு ஃபிளாப் ஆகி விட்டது. அத்துடன் அந்த இயக்குநருக்கு பெரிய கும்பிடுப் போட்டு, உன்னை நம்பி அந்த பிரம்மாண்ட படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்றே சொல்லி விட்டாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X