வேற யாரும் வேண்டாம்.. இது என் ஷோ.. மாஸ் நடிகரின் பாணியை காப்பி அடித்த வம்பு நடிகர்!
சென்னை: அந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிடலாம் என பிளான் போட்ட பாஸ் நடிகரின் பிளானை டோட்டலாக வம்பு நடிகர் காலி செய்து விட்டார் என பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.
இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிலையில், பல முன்னணி பிரபலங்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
தயாரிப்பு நிறுவனமே வேறு சில பிளான்களை போட்டிருந்த நிலையில், அத்தனைக்கும் ஆப்பு வைத்து விட்டார் வம்பு நடிகர் என்கின்றனர்.

செலவை இழுத்து விட்டு
படமே போட்ட காசை எடுக்குமா என்கிற கவலையில் தயாரிப்பாளர் முழித்துக் கொண்டிருக்கும் நிலையில், கடைசி நேரத்தில் தேவையில்லாத பில்டப்புக்காக செலவை இழுத்து விட்டு இருக்கிறாராம் அந்த வம்பு நடிகர். மேலும், நிகழ்ச்சியில் தனது அடுத்த படத்துக்கான மைலேஜை ஏற்றிவிட பக்கா பிளானை போட்டு மாஸ் காட்ட பெரும் முயற்சிகளை எடுத்திருக்கிறார் வம்பு நடிகர்.

மாஸ் நடிகரின் காப்பி
தனக்கான ரசிகர் பலத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே இப்படியொரு பிரம்மாண்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார் என்றும் வேற எந்தவொரு பெரிய நடிகரும் அந்த இடத்தில் ஸ்கோர் செய்யக் கூடாது என்பதில் ரொம்பவே குறியாக மாஸ் நடிகரை அப்படியே காப்பி அடித்து அவர் ஷோவில் என்னல்லாம் இருந்ததோ அதே போல ஒரு ஷோவை அரங்கேற்றி இருப்பதாக கூறுகின்றனர்.

பாஸ் நடிகர் அப்செட்
பிரம்மாண்ட நிகழ்ச்சியில் அப்படியே அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டு விடலாம் என பாஸ் நடிகர் யோசித்து வைத்த நிலையில், அவரையும் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டாம் என்றே வம்பு நடிகர் சொல்லி விட்டதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன. மேலும், தயாரிப்பாளர் போட்டு வைத்திருந்த சில திட்டங்களுக்கும் நோ சொல்லி விட்டாராம் அந்த நடிகர்.

கதையே மாத்திட்டாரு
இன்னொரு ஹீரோவுக்காக நாம ஏன் படம் பண்ணித் தரணும் என நினைத்த நடிகர் இயக்குநரை டார்ச்சர் செய்து ஒட்டுமொத்த கதை மற்றும் டைட்டில் உள்பட அனைத்தையுமே தன்னை ஃபோகஸ் செய்யும் விதமாக டோட்டலாக டிரான்ஸ்ஃபார்ம் பண்ணி விட்டார் என்பதை இயக்குநரே ஜாடை மாடையாக பேசியது நடிகருக்கு சுருக்கென்று நிகழ்ச்சியிலேயே பட்டு விட்டதாகவும் கூறுகின்றனர்.

அந்த இயக்குநர் மீது காண்டு
கடைசியாக வம்பு நடிகரை வச்சு செய்த அந்த இயக்குநருடன் இந்த படத்தில் நடிக்க வேண்டிய சூழ்நிலை உருவானாலும் கடைசி வரை வம்பு நடிகர் மட்டுமின்றி எந்தவொரு பிரபலமும் அவரை பற்றிய பேச்சையே எடுக்கக் கூடாது என இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கே கண்டிஷன் போட்டு நிகழ்ச்சிக்கு வர சொன்னதாகவும் பரபரப்பாக கோடம்பாக்க டீக்கடையில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











