காதலர் தினத்துக்கு போன் பண்ணாக் கூட எடுக்கலையாம்!.. கடுப்பில் கிரிஞ்ச் நடிகை.. நடிகர் செம பிஸி போல!

By Staff

சென்னை: 5 ரூபாய்க்கு நடிக்க சொன்னா 2 ரூபாய்க்கு கூட நடிக்காமல் எப்படியோ சினிமாவில் அடுத்தடுத்து பெரிய படங்களில் நடித்து வரும் கிரிஞ்ச் நடிகையை சமீப காலமாக அவருடைய காதலர் கண்டுக் கொள்வதே இல்லையாம். காதலர் தினத்தன்று போன் பண்ணால் கூட அவரது ரகசிய காதலர் போன எடுக்காத நிலையில், நடிகை ரொம்பவே அப்செட் ஆகி அப்படியொரு முடிவெடுத்து விட்டதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

சமீபத்தில் நடித்த படத்தில் மோசமான கதாபாத்திரம் என்றால் கூட பெரிய சம்பளம் வருவதால் ஓகே சொல்லி அந்த நடிகை நடித்திருந்தார். ஆனால், கடைசியில் நடிகைக்கு சம்பளத்தையே சரியாக கொடுக்காமல் தயாரிப்பு நிறுவனம் குறைத்தே கொடுத்ததால் நடிகை அப்செட் ஆகி இருந்தார். இந்நிலையில், காதலருடன் அடுத்து ஒரு படம் பண்ணி விடலாம் என நினைத்த நடிகையை தனது பக்கத்திலேயே அவர் சேர்க்கவே மாட்டேன் என்கிற முடிவுக்கே வந்து விட்டார் எனக் கூறுகின்றனர்.

Popular actor avoids that young actress on Valentines Day?

போர் அடிச்சுடுச்சு: எப்போதுமே காதலர் தினம் என்றாலே நடிகையும் அந்த நடிகரும் தனித்தனியாக ரொமான்டிக் பதிவுகளை போட்டு ரசிகர்களை ஏகப்பட்ட கெஸ்ஸிங் செய்ய வைத்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். ஆனால், தற்போது நடிகை மீது எந்தவொரு கிரஷ்ஷும் இல்லாமல் அந்த நடிகருக்கு போர் அடித்து விட்டதாகவும் அதன் காரணமாகவே நடிகை சீண்டுவதில்லை என்றும் கூறுகின்றனர்.

நடிகை பார்த்த வேலை: இந்த நடிகரையாவது எப்படியாவது திருமணம் செய்துக் கொண்டு சீக்கிரம் செட்டில் ஆகி விடலாம் என கனவு கண்டு கொண்டிருந்த நடிகைக்கு இந்த முறையும் ஆப்பு வைக்கும் அளவுக்கு காதலை வெளிப்படையாக வெளிப்படுத்தாமல் நடிகர் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார். ரகசியமாக இருவரும் காதலித்து வருகிற விஷயத்தை நடிகையின் தரப்பு அம்பலப்படுத்திய நிலையில், அப்செட்டான அந்த நடிகர் நடிகையை காதலிக்கவே இல்லை என அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு பூகம்பத்தை ஏற்படுத்தி விட்டார்.

மன்னிப்புக்கேட்ட நடிகை: நடிகரின் கோபத்தை தணிக்க அவரிடம் தனிப்பட்ட முறையில் நடிகை மன்னிப்புக் கேட்டதாகவும் ஆனால், இனிமேல் நம்ம இரண்டு பேருக்கும் செட் ஆகாது இந்த ரிலேஷன்ஷிப்பை இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என்றே நடிகர் சொல்லி விட்டு நடிகையின் போன் கால்களை கட் செய்ய ஆரம்பித்து விட்டார் என்கின்றனர்.

காதலர் தினத்தில் சோகம்: லவ்வர்ஸ் டே அதுவுமா போன் போட்டு விஷ் பண்ணி நடிகரின் கோபத்தை தணிக்கலாம் என நடிகை போட்ட திட்டமும் வேலைக்கு ஆகவில்லையாம். இதனால், நடிகை ஒரு வாரத்துக்கு நடிக்கப் போவதில்லை என புதிதாக கமிட்டாகி உள்ள படத்தின் இயக்குநரிடம் அறிவிக்க மொத்த யூனிட்டே நடிகை இல்லாமல் எப்பட் சூட்டிங் செய்வது என ஷாக் ஆகியிருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X