ஆளையே காணோமே.. எங்கே போனார் அந்த ஒல்லி நடிகர்.. மகன்களும் இந்த முறை கண்டுக்கலையா?

By Staff

சென்னை: பெரிய பண்டிகையை முன்னிட்டு ஏகப்பட்ட நடிகர்கள் போட்டோக்களை மாறி மாறி போட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து சொல்லி வரும் நிலையில், சமீபத்திய தோல்வியால் மனுஷன் அப்படியே சைலன்ட் ஆகிவிட்டாராம்.

அடுத்த படத்தையும் உடனடியாக வெளியிட வேண்டாம், பொறுமையாக நல்ல நாள் எல்லாம் பார்த்து வெளியிடலாம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறாராம்.

நடிகரை எங்கே ஆளையே காணோம் என சில பிரபலங்களே போன் போட்டு பார்த்தும் மனுஷன் சிக்கவில்லை என்கிற தகவல்கள் பரவி வருகின்றன.

மனைவியை பிரிந்து

மனைவியை பிரிந்து

கடந்த ஆண்டெல்லாம் மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோலாகலமாக பெரிய வீட்டில் பண்டிகையை கொண்டாடிய அந்த ஒல்லி நடிகர் இந்த முறை மனைவியை பிரிந்த நிலையில், கொண்டாட்டங்களில் இருந்து முழுவதுமாக ஒதுங்கி விட்டார் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

வெற்றியும் தோல்வியும்

வெற்றியும் தோல்வியும்

இந்த ஆண்டு ஏகப்பட்ட படங்களை தொடர்ந்து வெளியிட்டு வந்த அந்த ஒல்லி நடிகர் ஒரே ஒரு வெற்றியை மட்டும் ருசித்த நிலையில், ஏகப்பட்ட தோல்விகளால் ரொம்பவே மன வேதனையில் ஆழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. தனது அடுத்த படத்தை கூட இப்போதைக்கு வேண்டாம் இந்த வருஷம் இந்த அடியே போதும் என்று சொல்லி விட்டதாக செய்திகள் கசியத் தொடங்கி உள்ளன.

களைகட்டிய கொண்டாட்டம்

களைகட்டிய கொண்டாட்டம்

கணவரை பிரிந்து வாடினாலும், தனது அப்பா வீட்டில் இந்த முறை மகன்களுடன் கோலாகலமாக அந்த பெரிய பண்டிகையை பிரபல இயக்குநர் கொண்டாடி தீர்த்துள்ளார். அந்த புகைப்படங்கள் வெளியான நிலையில், தனது குடும்பத்துடனாவது நடிகர் பண்டிகையை கொண்டாடினாரா என்று பார்த்தால் அப்படியும் எதுவுமில்லை என்பது தான் பலரையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஆள் மிஸ்ஸிங்

ஆள் மிஸ்ஸிங்

ரொம்பவே எதிர்பார்த்து வாய்ப்பு கொடுத்த நிலையில், அந்த நெருங்கிய சொந்தம் முதலுக்கே மோசம் பண்ண நிலையில், அவருடனும் இந்த பண்டிகையை கொண்டாட வில்லையாம். படப்பிடிப்புகளுக்கு எல்லாம் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், மனுஷனை எங்கே காணோம் என ஒரு தனிப்படையையே அமைத்து அவரது நண்பர்கள் தேடி உள்ளதாக பரபரப்பு பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

வர மறுத்த மகன்கள்

வர மறுத்த மகன்கள்

மகன்களை பாசத்தோடு அழைத்து அவர்களுடனாவது பண்டிகையை கொண்டாடலாம் என நடிகர் ரொம்பவே ஆசைப்பட்டதாகவும், ஆனால், அம்மாவின் ஆணையை மீறி இந்த முறை மகன்கள் வரமுடியாத நிலை ஏற்பட்டது தான் நடிகர் நிம்மதியை தேடி தனிமையான ஓரிடத்துக்கு சென்று விடக் காரணம் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X