திடீரென கணவருடன் வேறு நகரத்தில் புது வீடு வாங்க காரணமே இதுதானாம்.. மனைவியின் அந்த ஆசை எடுபடுமா?

சென்னை: பிரைட் நடிகர் தனது மனைவியுடன் திடீரென குடும்பத்தையே பிரிந்து வேறு ஒரு நகரத்துக்கு குடிபுக இதுதான் காரணம் என பரபரப்பு பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

இதுவரை கூட்டுக் குடும்பமாக இருந்த வந்த அந்த பிரைட் நடிகர் திடீரென குடும்பத்தை பிரிய மனைவி காரணம் என பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், குடும்பத்துக்குள் எந்தவொரு சண்டையும் ஏற்படவில்லை என்கின்றனர்.

அதற்கு மாற்றாக இன்னொரு பெரிய விஷயம் அரங்கேறிய நிலையில் தான் இப்படியொரு திடீர் முடிவை நடிகர் எடுத்துள்ளார் என்கின்றனர்.

மாமியார் வீட்டுப் பக்கம்

மாமியார் வீட்டுப் பக்கம்


இதுவரை அப்பா அம்மா உடன் இருந்து வந்த பிரைட் நடிகர் திடீரென மாமியாரின் சொந்த ஊரில் ஒரு புதிய வீட்டை வாங்கி குடி புகுந்திருப்பது ஒட்டுமொத்த திரைத்துறையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. என்ன பிரச்சனை ஆனது என்றும் அப்பா அம்மாவை நடிகர் ஏன் தனிமையில் தவிக்க விட்டுவிட்டார் என்றும் பேச்சுக்கள் திட்டுக்கள் பரவி வரும் நிலையில், அப்பாவின் சம்மதத்துடனே நடிகர் வேறு நகரத்திற்கு சென்று இருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரம்மாண்ட வீடு

பிரம்மாண்ட வீடு

பாலிவுட் நடிகர்கள் பலர் ஆச்சர்யப்படும் விதமாக கோலிவுட்டில் இருந்து சென்று அங்கே மிகப்பெரிய பங்களா வீட்டை நடிகர் வாங்கி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அந்த வீட்டின் விலையை கேட்டாலே பலருக்கும் தலையே சுற்றிவிடும் அளவுக்கு இருக்கிறதாம். திடீரென இப்படி நடிகர் வீடு மாறி உள்ள நிலையில், நடிகர் பாலிவுட் படங்களில் நடிக்கப் போகிறாரா? என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன.

அங்கு தான் ட்விஸ்ட்

அங்கு தான் ட்விஸ்ட்

ஆனால், இந்த திடீர் ஊர் மாற்றத்துக்கான காரணம் நடிகரின் திட்டம் இல்லை என்றும் ஒட்டுமொத்த திட்டமும் அவரது மனைவியின் திட்டம் என்றே கூறுகின்றனர். பக்கத்து ஸ்டேட் நடிகர்களுடன் படங்களில் நடிக்க ஆரம்பித்த நடிகை பாலிவுட் பக்கம் தனது பார்வையை திருப்பியதன் விளைவு தான் இந்த டோட்டல் சேஞ்ச் ஓவர் எனக் கூறுகின்றனர்.

பாலிவுட்டில் ஒரு படம்

பாலிவுட்டில் ஒரு படம்

சமீபத்தில் பாலிவுட்டில் ஒரு படத்தில் அந்த நடிகை நடித்துள்ள நிலையில், நடிகையின் நடிப்பை பலரும் வெகுவாக பாராட்டி உள்ளனர். மேலும், பாலிவுட்டில் வயதான நடிகைகளுக்கு தொடர்ந்து மார்க்கெட் இருந்து வரும் நிலையில், அங்கே சென்று செட்டில் ஆனால், பல படங்களில் கமிட் ஆகி நடிக்கலாம் என்கிற மாஸ்டர் பிளான் தான் இப்படியொரு திடீர் வீடு வாங்கி செட்டில் ஆகும் பிளானே என்கின்றனர்.

தயாரிப்பு பணிகளும்

தயாரிப்பு பணிகளும்

நடிப்பு ஒரு பக்கமும் சிறு சிறு பட்ஜெட்டில் பல படங்களை பாலிவுட்டில் தயாரிக்கும் பணிகள் ஒரு பக்கத்திலும் நடத்த நடிகரும் நடிகரின் மனைவியும் முடிவு செய்து போட்ட பலே திட்டத்திற்கு நடிகரின் குடும்பமும் எந்தவொரு தடையும் விதிக்காமல், இது உங்க வாழ்க்கை உங்க இஷ்டம் போல வாழுங்க என அனுமதியும் வழங்கி விட்ட பின்னர் தான் நடிகர் வீட்டை விட்டே கிளம்பினார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

சவுத்துக்கு மதிப்பு

சவுத்துக்கு மதிப்பு

சமீப காலமாக தென்னிந்திய படங்களை பாலிவுட்டில் ரீமேக் செய்து வருவது மட்டுமின்றி தென்னிந்திய நடிகர்களை தங்கள் படங்களிலும் நடிக்க வைத்து வருகின்றனர். சவுத்துக்கு தற்போது நார்த்தில் ஏகப்பட்ட மரியாதை உள்ளதை அறிந்து கொண்டு தான் பல நடிகைகளும் பாலிவுட் பக்கம் நகர்ந்து கொண்டே அங்கேயும் ஒரு வீட்டை கட்டி வசித்து வருவதாகவும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X