விவாகரத்துக்குப் பிறகு ஒல்லி நடிகர் பார்த்த மோசமான வேலை.. இதெல்லாம் எங்கே போய் முடியப்போகுதோ?
சென்னை: விவாகரத்துக்குப் பிறகு ஏகப்பட்ட கடனில் மாட்டிக் கொண்டார் ஒல்லி நடிகர் என தகவல்கள் கசிந்துள்ளன. அதன் காரணமாகத்தான் பல இயக்குநர்களிடம் கதை கேட்டு தயாரிப்பாளர்களிடம் படம் பண்ணுகிறேன் என அவசர அவசரமாக அட்வான்ஸ் வாங்கி பலரை லைனில் காக்க வைத்து வருகிறார் என கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.
உச்ச நட்சத்திரத்தின் மருமகனாக வலம் வந்த நிலையில், நடிகர் தனது கனவு வீட்டை பல கோடிகளுக்கு கட்டுவதற்காக பண்ண அலப்பறை தான் அவரை இந்தளவுக்கு கடனாளியாக மாற்றியதாகவும் கூறுகின்றனர்.

படங்களில் நடிப்பது, இயக்குவது என இரவு பகல் பாராமல் நடிகர் உழைத்து வரக் காரணமே வரிசையாக வாங்கிப் போட்டு வைத்திருக்கும் அட்வான்ஸ்களுக்காகத்தான் என்று சினிமா வட்டாரத்தில் பேசத் தொடங்கியுள்ளனர்.
விவாகரத்துக்குப் பின்னர் சிக்கல்: தனது மகளுக்காக மருமகன் பேனரில் பணமே வாங்காமல் உச்ச நடிகர் நடித்தார் என்றும் அந்த படம் படுதோல்வியை சந்தித்த போது கூட மருமகனிடம் எந்தவொரு வார்த்தையும் நடிகர் சொல்லவில்லை என்றும் கூறுகின்றனர். மகளை நடிகர் பிரிவதாக அறிவித்த பின்னர் கூட தனது சம்பளம் பற்றியெல்லாம் உச்ச நடிகர் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லையாம். அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் முடிவு என விட்டு விட்டார் என்கின்றனர்.
அகல கால் வைத்ததால் வந்த வினை: உச்ச நடிகருக்கு போட்டியாக அதே இடத்தில் பெரிய பங்களா கட்டுகிறேன் என பல கோடி ரூபாயை கடனாக பெற்று ஒல்லி நடிகர் பார்த்த வேலை தான் அவருக்கு இப்போ தலைமேல் பெரிய பாரமாக வந்து இறங்கியிருப்பதாக கூறுகின்றனர். முன்பெல்லாம் உச்ச நடிகரின் சப்போர்ட் இருந்த நிலையில், நடிகருக்கு தாராளமாக பணம் கிடைத்து வந்தது என்றும் இப்போ கடன்காரர்கள் கழுத்தை நெறிக்க ஆரம்பித்துவிட்டதாகவும் பேச்சுக்கள் புகையத் தொடங்கியுள்ளன.
ஏகப்பட்ட தயாரிப்பு நிறுவனங்களிடம் அட்வான்ஸ்: பல இயக்குநர்களை சில ஆண்டுகளாக லைனில் காக்க வைத்து வருவது மட்டுமின்றி ஒவ்வொருத்தரையும் ஒரு பேனரில் கமிட் செய்தவுடனே அட்வான்ஸாக பாதி சம்பளத்தை வாங்கிவிடுகிறார் நடிகர் என்கின்றனர். 3 மாதத்தில் ஆரம்பித்து விடலாம், ஆறு மாதத்தில் வந்து விடுகிறேன் என வாக்கு கொடுத்துவிட்டு நடிகர் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே முதலில் கால்ஷீட் ஒதுக்கி வருகிறார் என்றும் ஹீரோ மற்றும் இயக்குநர் என டபுள் வேலையை பார்த்தால் டபுள் சம்பளம் கிடைக்கும் என்பதால் தான் சமீப காலமாக இப்படியொரு ரூட்டில் அவர் சென்றுக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.
எங்கே போய் முடியப்போகுதோ?: உள்ளூர் மட்டுமின்றி பக்கத்து ஸ்டேட்களிலும் சென்று படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துக் கொண்டே இருக்கிறாராம். நல்ல படங்களை கொடுத்த இயக்குநர்களும் ஒல்லி நடிகரை வைத்து அடுத்த படத்தை நாம் தான் செய்யப் போகிறோம் என சில ஆண்டுகளையே வீணடிக்க ஆரம்பித்துவிட்டது தான் இதில் வேதனை என்கின்றனர். தயாரிப்பாளர்கள் வட்டிக்கு கடன் வாங்கி அட்வான்ஸ் பணம் கொடுத்த நிலையில், அவர்களும் நிதி நெருக்கடிக்கு ஆளாகி இருப்பதாகவும், பலரும் நடிகர் மீது பயங்கர கோபத்தில் இருப்பதாகவும் கூறுகின்றனர். இதெல்லாம் எங்கே போய் முடியப் போகுதோ தெரியல என நடிகருக்கு ரொம்பவே வேண்டப்பட்ட ஒருவரே புலம்பியது தான் கோடம்பாக்கத்தை உலுக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











