ஓட்டை வண்டியை ஏன் உருட்டிக்கிட்டு.. ஓடுற வண்டியை மட்டும் ஓட்டலாம்னு அந்த பாஸ் நடிகர் முடிவாம்!

By Staff

சென்னை: எதை செய்தாலும் சரியாக செய்யணும்னு நினைக்கும் அந்த பிரபல பாஸ் நடிகர் தனது இரண்டாவது ரூட்டையும் சரியாக செய்து விட முடியும் என நம்பி அதற்குள் கால் வைத்தார்.

ஆனால், ஆழம் தெரியாமல் காலை விடாதே என்கிற பழமொழிக்கு உதாராணமாக தானும் சிக்கிக் கொண்டோமே என ரொம்பவும் வேதனைப்பட்டுள்ளார்.

மேலும், ஓடாத வண்டியை ஏன் கஷ்டப்படுத்தி ரிப்பேர் செய்யணும் என நினைத்த அவர் நல்லா ஓடுற வண்டி மேல் ஏறி வேறலெவல் சவாரி செய்ய ஏகப்பட்ட திட்டங்களை வகுத்துள்ளாராம்.

பெரிய நம்பிக்கை

பெரிய நம்பிக்கை

விரைவில் வரப்போகும் தனது படத்தின் மேக்கிங் மற்றும் திரைக்கதை மீது அபாராமான நம்பிக்கை கொண்டு இருக்கிறார் பாஸ் நடிகர்.எதிர்பாராத அளவுக்கு படத்தையும் அந்த சிஷ்ய புள்ளை உருவாக்கி கொடுத்திருப்பதால், எவ்வளவு செய்து புரமோஷன் செய்தாலும், ரிலீசான ஒரே வாரத்தில் அத்தனையையும் அள்ளி விடலாம் என்கிற பெரிய நம்பிக்கை பாஸ் நடிகருக்கு ஏற்பட்டு இருக்கிறது.

இளம் நடிகர்களின் பிசினஸ்

இளம் நடிகர்களின் பிசினஸ்

பல காலமாக தனது கம்பெனியை வைத்துக் கொண்டு தனது படங்களை மட்டுமே உருவாக்குவேன் என காலத்தையும் நேரத்தையும் வீணடித்து விட்டதை நன்றாகவே புரிந்து கொண்டுள்ளார். பிரைட் நடிகர் மற்றும் இளம் மாஸ் ஹீரோவின் கம்பெனிகள் எப்படி அபார லாபம் அடைகின்றன என்கிற வியாபார யுக்தியை அறிந்து கொண்ட அவர் தற்போது தனது முழு கவனத்தையும் பிசினஸில் செலுத்த திட்டமிட்டு இருக்கிறாராம்.

வரிசை கட்டப்போகுது

வரிசை கட்டப்போகுது

மற்ற கம்பெனிகளுக்கு கடும் போட்டியை கொடுக்கும் விதமாக ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் படங்களை தனது கம்பெனி மூலம் தயாரித்து வெளியிடும் முடிவுக்கு வந்திருக்கிறாராம் அந்த பாஸ் நடிகர். சீக்கிரமே மாஸ் ஹீரோ, பிரைட் ஹீரோ படங்களையும் இளம் மாஸ் நடிகரின் படத்திற்கு பிறகு தயாரிக்க ரெடியாகி விட்டாராம்.

ஓடாத வண்டி

ஓடாத வண்டி

அதே நேரத்தில் ஓடாத வண்டியை இனியும் ஓட வைக்கிறேன் பாரு என ரிப்பேர் செய்து நேரத்தையும் பணத்தையும் விரையம் ஆக்காமல், நன்றாக ஓடக் கூடிய வண்டியின் மீது சவாரி செய்து, அதனை அடுத்த அடுத்த கட்டங்களுக்கு கொண்டு செல்லவும் பலே திட்டங்களை பாஸ் நடிகர் போட்டு வருவதாகவும் கோடம்பாக்கம் முதல் கோட்டை வரை ஒரே பேச்சாக அடிபட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X