இந்த படமும் ஊத்திக்கிச்சு.. மனசு கஷ்டப்பட்டு அழுத விருது நடிகை.. ஆறுதல் படுத்திய மாஸ் ஹீரோ?

By Staff

சென்னை: அந்த விருது நடிகை நடிப்பில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் எல்லாம் தோல்வியை தழுவி வரும் நிலையில், விடாமுயற்சியாக ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடித்து ஹிட் கொடுத்தே தீருவேன் என அடம்பிடித்து வருகிறாராம். சமீபத்தில், வெளியான நடிகையின் படத்தை தியேட்டருக்குச் சென்று பார்க்க ஒருத்தரும் வராத நிலையில், படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியாமல் போய் விட்டது என்கின்றனர்.

நடிகை சோலோ ரிலீஸ் அல்லது சிறு பட்ஜெட் படங்களுடன் படத்தை வெளியிட்டு இருந்தால் கூட ஓரளவுக்கு நடிகையின் படத்தை ரசிகர்கள் பார்த்திருப்பார்கள் என்கின்றனர். ஆனால், அந்த பெரிய படத்துடன் மோதிய நிலையில், தான் இந்தளவுக்கு வசூலில் சரியான அடி விழுந்து இருப்பதாக கூறுகின்றனர்.

gossip kollywood actress gossip

ஃபீல்ட் அவுட் நடிகர்கள் மீண்டும் கம்பேக் கொடுத்து நடித்த படங்கள் கூட இந்த ஆண்டு அதிக வசூல் செய்ததாகவும் பல கோடி சம்பளம் வாங்கும் நடிகையின் படம் சில லட்சங்கள் கூட வசூல் செய்யவில்லையே என பலரும் கிண்டல் செய்து வரும் நிலையில், அப்செட்டான நடிகைக்கு மாஸ் ஹீரோ ஆறுதல் கூறியுள்ளதாகவும் தகவல்கள் லீக் ஆகியுள்ளன.

தன் தலையில் தானே மண்: படத்தில் பயங்கரமான போராளியாக நடித்து புரமோஷன் எல்லாம் செய்துவிட்டு, அதன் பின்னர், பாலிவுட் பக்கம் பம்மிய நடிகை படம் வெளியாகும் போது அடித்த பல்டி தான் இந்த படத்திற்கு பெரும் பின்னடைவாக மாறிவிட்டதாக கூறுகின்றனர். தொடர்ந்து ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் அந்த நடிகை நடித்து வந்தாலும், அவருக்காக எல்லாம் தியேட்டருக்கு செலவு செய்துக் கொண்டு படத்தை பார்க்க ரசிகர்கள் விரும்பவில்லை என்கின்றனர்.

இந்த படமும் காலி: எப்படி நடித்தாலும் முதல் நாளிலேயே படத்தை டோட்டல் டேமேஜ் செய்து விடுகிறார்களே என நடிகை ரொம்பவே அப்செட் ஆகி அழுது புலம்ப ஆரம்பித்து விட்டாராம். அந்த மாஸ் ஹீரோவின் நெருங்கிய தோழி என்பதால், அவரிடமே போன் போட்டு தனது புலம்பலை கொட்டித் தீர்த்து இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

மாஸ் நடிகர் ஆறுதல்: மாஸ் நடிகருக்கு மிகவும் வேண்டியப்பட்டவரின் படத்தில் அடுத்து அந்த நடிகை நடித்து வரும் நிலையில், அடுத்த படத்துக்கும் இதே நிலைமைதான் ஆகப் போகுது என்பதால் இப்படி அழுது சீன் போட, அதெல்லாம் ஒன்றும் பரவாயில்லை, பார்த்துக் கொள்ளலாம் என போனில் நடிகர் ஆறுதல் கூறியதாக காத்து வாக்குல செய்திகள் கசிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X