இந்த இயக்குநருக்கும் டார்ச்சர் கொடுக்கும் டாப் நடிகர்.. அப்செட்டான தயாரிப்பு நிறுவனம்.. என்ன ஆகுமோ?

By Staff

சென்னை: மாஸ் நடிகருடனான போட்டியில் தோற்று விட்டோம் என்பதை டாப் நடிகரால் கொஞ்சம் கூட தாங்கிக் கொள்ள முடியவில்லையாம். புதிதாக ஒப்பந்தம் ஆகி உள்ள இயக்குநரையும் போட்டு டார்ச்சர் செய்து வருகிறார் என புதிய புயல் ஒன்று கோடம்பாக்கத்தை தாக்கி இருக்கிறது.

முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார் அந்த டாப் நடிகர், என் இஷ்டத்துக்கு படம் பண்ண அனுமதித்துள்ளார் ரொம்ப தங்கமான மனுஷன் என புகழ்ந்து தள்ளிய இயக்குநரை, படத்தில் வருவதை போல காரில் இருந்து தள்ளி விடுவதை போல கழுத்தை பிடித்து கடைசி நேரத்தில் தள்ளி விட்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கணவருக்காக நடிகையே நடிகரை சந்தித்து பேசிப் பார்த்தும் நடிகர் மனம் இறங்கவே இல்லை என்கின்றனர்.

ஈகோ கிளாஷ்

ஈகோ கிளாஷ்

சமீபத்தில் டாப் நடிகரையும் மாஸ் நடிகரையும் அந்த தயாரிப்பு நிறுவனம் ஒரே ரேஸில் ஓட விட்டுப் பார்த்த நிலையில், ஆக்‌ஷன் படமான நம்ம படம் தான் பந்தயம் அடிக்கும் என டாப் நடிகரும் இந்த முறை போட்டிக்கு ரொம்பவே குஷியாக சம்மதம் தெரிவித்து இருந்தார். ஆனால், பெரிய வித்தியாசத்தில் டாப் நடிகரின் படம் தோல்வியை தழுவிய நிலையில், நடிகருக்கு ஈகோ கிளாஷ் வந்து விட்டதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

அதனால் தான் அந்த மாற்றம்

அதனால் தான் அந்த மாற்றம்

இதுவரை எந்த படம் ஓடினால் என்ன ஓடாவிட்டால் என்ன என தொடர்ந்து சில இயக்குநர்களுடன் பயணித்து வந்த அந்த நடிகரை வேண்டுமென்றே அந்த தயாரிப்பு நிறுவனம் உசுப்பேற்றி விட்ட நிலையில், அடுத்த முறையாவது அந்த மாஸ் நடிகரின் படத்தை வீழ்த்தும் அளவுக்கு படத்தை கொடுக்க வேண்டும் என்கிற வெறியில் தான் இயக்குநரையே அதிரடியாக நடிகர் மாற்றினார் எனக் கூறுகின்றனர்.

அறிவிப்பு இன்னும் வரல

அறிவிப்பு இன்னும் வரல

இயக்குநரை மாற்றிய நிலையில், அடுத்ததாக அவரது படத்தை யார் இயக்கப் போகிறார் என்கிற தகவல் கசிந்த நிலையிலும், அந்த அறிவிப்பை கூட இன்னும் அறிவிக்காமல் தயாரிப்பு நிறுவனம் தயங்கி வருவதற்கு காரணமே நடிகர் போட்டுள்ள கட்டை தான் காரணம் என பரபரப்பு தகவல்கள் பூகம்பமாக தற்போது கிளம்பி உள்ளன.

இந்த இயக்குநருக்கும் சிக்கல்

இந்த இயக்குநருக்கும் சிக்கல்

ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட இயக்குநரை வெளியேற்றிய நிலையில், பல இயக்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் ஒருத்தரும் உடனடியாக அந்த நடிகர் படத்தை இயக்க வர முடியாது என தயக்கம் காட்டிய நிலையில், கடைசியாக ஒரே ஒரு இயக்குநர் மட்டும் கிடைத்த நிலையில், தற்போது அந்த இயக்குநருக்கும் பெரும் சிக்கல் என பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

முழு கதையும் சொல்லணும்

முழு கதையும் சொல்லணும்

இதுவரை அந்த டாப் நடிகர் நடித்த படங்களின் கதையையே கேட்க மாட்டார் என இயக்குநர்கள் கடைசி நேரத்தில் கதையளந்து விட்டு வந்த நிலையில், புதிய இயக்குநரின் ஒன் லைனுக்கு ஓகே சொன்ன அந்த நடிகர், முழு ஸ்க்ரிப்டையும் பார்த்த பின்னரே அதிகாரப்பூர்வ அறிவிப்பை சொல்லலாம் என முடிவு செய்து விட்டாராம். அவசர அவசரமாக மொத்த கதையையும் இயக்குநர் தயார் செய்து வருவதாகவும், ஏகப்பட்ட கரெக்‌ஷன்களையும் ஒரு டீம் வைத்து டாப் நடிகர் செய்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X