சொந்த காசுல சூனியம்.. வம்பு நடிகருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை.. கம்பி நீட்டிய பாஸ் நடிகர்!

By Staff

சென்னை: பல கோடி பட்ஜெட்டில் உருவான தன்னுடைய படமே ஓடாமல் உதை வாங்கிய நிலையில், பெரிய பட்ஜெட் படங்கள் மீதிருந்த நம்பிக்கையையே அந்த பாஸ் நடிகர் இழந்து விட்டாராம். அடுத்தவர் பணமாக இருந்தால் கூட ஈஸியா எஸ்கேப் ஆகி விடலாம் என்றும் சொந்த காசுல சூனியம் வைத்துக் கொள்ளத் தான் தயாராக இல்லை என்கிற முடிவுக்கே நடிகர் வந்து விட்டதாக கூறுகின்றனர்.

பாஸ் நடிகரை நம்பி பல மாதங்கள் இயக்குநரும் நடிகரும் காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி என பாடிக் கொண்டிருந்த நிலையில், ஒரு கட்டத்தில் என்ன விட்ருங்க என கதற ஆரம்பித்து அவர்களாகவே கழண்டு கொண்டதாக இண்டஸ்ட்ரியில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

gossip kollywood tamil cinema gossip

இந்த படம் தனக்கு எப்படியும் பெரிய மார்க்கெட்டை கொண்டு வந்து சேர்க்கும் என முழுமையாக நம்பும் வம்பு நடிகர் அந்த படத்தை தானே தயாரிக்க முடிவு செய்து விட்டதாக பரபரப்பான பேச்சுகள் புகைந்து வருகின்றன.

டாட்டா காட்டிய பாஸ்: பெரிய பட்ஜெட் படங்களை தியேட்டருக்கு வந்து பார்த்து பல கோடி லாபத்தை மக்கள் கொடுத்த காலம் எல்லாம் மலையேறி விட்டது என்கின்றனர். ஹாலிவுட் படங்களே ஆயிரம் கோடி பட்ஜெட்டுக்கே கோடி கும்பிடு போட்டு வருகிறதாம். பாலிவுட்டில் பல படங்கள் கார்ப்பரேட் புக்கிங்கை வைத்தே பாக்ஸ் ஆபிஸ் வெற்றி என ஏமாற்றி வருவதாக கூறுகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் செமத்தியாக அடிவாங்கிய பாஸ் நடிகர் பெரிய பட்ஜெட் படத்தை தனது தயாரிப்பில் தயாரிக்க வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்து விட்டாராம்.

சொந்த காசுல படம்: பாஸ் நடிகர் கை விட்டாலும் தன்னை நம்பி வந்த இயக்குநரை தான் கை விட மாட்டேன் என்கிற முடிவில் இருக்கும் நடிகர் தனது சொந்தக் காசையே போட்டு படம் எடுக்கப் போவதாக கூறுகின்றனர். ஆனால், நடிகருக்கு மறைமுகமாக ஃபைனான்ஸ் பண்ண வெளிநாட்டு நபர் ஒருவர் சிக்கியிருப்பதால் தான் இறங்குகின்றார் என்கிற ரகசிய பேச்சுகளும் அடிபட்டு வருவது தனிக்கதை.

என்ன ஆகுமோ?: இதுவரை அந்த நடிகர் நடித்த படங்களே அடுத்த படத்தின் பட்ஜெட் அளவுக்கு வசூல் செய்யவில்லை என்கின்றனர். இந்நிலையில், நடிகர் தேவையில்லாமல் அகலக்கால் வைக்கிறாரோ என்கிற கேள்வி கிளம்பியிருக்கிறது. நடிகரும் அந்த இயக்குநரை நம்ப வைத்து ஏமாற்றாமல் இருந்தால் சரி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X