மனைவியை விட்டுட்டு மலையாள நடிகையுடன் மாலத்தீவில் மஜா பண்ணும் பிரபல நடிகர்.. காட்டிக்கொடுத்த கண்ணாடி?
சென்னை: தொடர்ந்து ஷூட்டிங் இல்லாத நிலையிலும், வெளிநாட்டில் படப்பிடிப்பு உள்ளதாக கூறி மனைவிக்கு டாட்டா காட்டிவிட்டு மாலத்தீவில் நடிகையுடன் பிரபல நடிகர் ஜாலி டூர் அடித்து வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
படப்பிடிப்புகள் இல்லாத நிலையில், நடிகர் வீட்டில் ஏமாற்றிவிட்டு அந்த இளம் நடிகையுடன் நீச்சல் குளத்தில் குளித்து கும்மாளம் போட்டது மனைவிக்கு எப்படி தெரிய வந்தது என்று பார்த்தால், நடிகை போட்டிருந்த கண்ணாடி தான் காரணம் என பஞ்சாயத்து கிளம்பி உள்ளது.

ஷூட்டிங்கே இல்லையே எங்கே இருக்கீங்க என நடிகை கேட்டதும், வெளிநாட்டில் விளம்பர ஷூட்டிங் இருக்கும்மா, நான் பிஸி வந்து பேசுறேன் என கணவர் கால் கட் பண்ணிவிட்டார் என்கின்றனர்.
மாலத்தீவில் மஜா: சம்மருக்கு இந்த முறை மாலத்தீவுக்கு எப்படியாவது கூட்டிட்டுப் போ என நடிகரின் செகண்ட் சேனல் கேட்டுக் கொண்ட நிலையில், மனைவியிடம் பொய் சொல்லிவிட்டு டிக்கெட் போட்டு நடிகையுடன் கிளம்பி விட்டாராம் அந்த நடிகர். மாலத்தீவுக்கு சென்ற இடத்தில் செம மஜாவாக நடிகர் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த நிலையில், நடிகை சமூக வலைதள மோகத்தால் போட்ட போஸ்ட் ஒன்று தற்போது நடிகருக்கு எமனாக மாறிவிட்டது எனக் கூறுகின்றனர்.
கடுப்பான மனைவி: தனது கணவருடன் அந்த நடிகையை சேர்த்து வைத்து தொடர்ந்து சில கிசுகிசுக்கள் கிளம்பிய நிலையில், கணவரின் மனைவியும் வேவு பார்க்க நடிகையை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்திருக்கிறார். லேட்டஸ்ட்டாக நடிகை மாலத்தீவில் பிகினி உடையில் எடுத்துக் கொண்ட போட்டோக்களை பார்த்து நடிகரின் மனைவி செம கடுப்பாகி விட்டார் என்கின்றனர். அதற்கு காரணமே நடிகை போட்டிருந்த கண்ணாடி தானாம்.

மாட்டிவிட்ட ஜட்டி: திருமண நாளுக்கு மனைவி கணவருக்கு ஆசை ஆசையாக வாங்கிக் கொடுத்த உள்ளாடையை அணிந்துக் கொண்டு நடிகையுடன் மாலத்தீவில் குளித்து கும்மாளம் போட்டிருக்கிறாராம் அந்த பிரபல நடிகர். நடிகையின் கண்ணாடியில் நடிகரின் முகம் தெரியவில்லை என்றாலும், அந்த ஜட்டியின் ஷேடோ தெரிந்ததை மனைவி பார்த்து கணவருக்கு போன் செய்து கண்டமேனிக்கு திட்ட, நடிகர் சமாளிக்க முடியாமல் சமாளித்துள்ளார் என்கின்றனர். வீட்டுக்கு வந்தால் விவாகரத்து நோட்டீஸ் ரெடியாகி விடும் என பகீர் கிளப்புகின்றனர்.


Click it and Unblock the Notifications