சுத்துப் போட்டு அடிக்கிறாங்க.. சோலோ ரிலீஸுக்கு பிளான் பண்ணும் பிரைட் நடிகர்.. கடைசி நேர ட்விஸ்ட்?
சென்னை: பிரைட் நடிகர் அவசர அவசரமாக படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டால் நமக்குப் போட்டியாக யாரும் வர மாட்டார்கள் என்றும் இந்த படத்துக்குப் போட்டியாக வந்தாலும், இதன் வெற்றியை பார்த்து விட்டு அடுத்த படத்துக்கு யாருமே போட்டிக்கு வரமாட்டார்கள் என்றெல்லாம் பிரைட் நடிகர் படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினர் பேசி பில்டப் பண்ணாலும், அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் உச்ச நடிகர் ஒரு கை பார்த்து விடலாம் என்கிற முடிவுடன் களத்தில் குதித்து விட்டதும் கதி கலங்கி போய் விட்டார்களாம் பிரைட் நடிகர் தரப்பு.
கிளாஷ் விட்டால் நினைத்த லாபம் வராதே என நினைத்து பெரிய விடுமுறையை பக்காவாக டார்கெட் செய்து படத்தை வெளியிட போட்ட திட்டமெல்லாம் தற்போது புஸ்ஸென போய் விட்டதே என புலம்பி வருவதாக பேச்சுக்கள் கசியத் தொடங்கி உள்ளன.

மோதி பார்த்து விடலாமா? என்கிற எண்ணம் ஒரு பக்கம் இருந்தாலும், மோதினால் நஷ்டம் நமக்குத் தானே அதிகம் என்கிற சிந்தனையும் அந்த நடிகரை ரொம்பவே சிந்திக்க வைத்துள்ளதாக கூறுகின்றனர்.
கோப குமுறல்கள்: உச்ச நடிகரின் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே பிரைட் நடிகரின் ரசிகர்கள் கோபத்தின் உச்சிக்கே சென்று குமுற ஆரம்பித்து விட்டனர். தேவையில்லாமல் உச்ச நடிகர் சீண்டிப் பார்க்கிறார் என பொங்கி வரும் நிலையில், தயாரிப்பு நிறுவனமே ரிலீஸ் தேதியில் மாற்றத்தைக் கொண்டு வரலாமா? வேண்டாமா? என்கிற தயக்கத்திற்கு வந்துள்ளதாக கூறுகின்றனர்.
ஒரே முடிவு: ஏற்கனவே வசூலில் பலத்த அடி வாங்கிய அந்த தயாரிப்பு நிறுவனம் அடுத்தடுத்து 2 பெரிய படங்களை மட்டுமே நம்பிக் கொண்டிருக்கும் நிலையில், பெரிய விடுமுறையில் படத்தை வெளியிட்டு கல்லா கட்டினால் தான் உண்டு என்பதால், இந்த முடிவை அதிரடியாக எடுத்துள்ளதாகவும், குறுக்கே எந்த கெளஷிக் வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்றும் தீர்மானித்து விட்டதாக கூறுகின்றனர்.
பின் வாங்கும் பிரைட் நடிகர்?: உச்ச நடிகருடன் மோதினால் சரியாக வராது என்கிற முடிவுடன் பிரைட் நடிகர் பின் வாங்கி விடலாம் என்கிற முடிவுக்கே வந்து விட்டதாக கோடம்பாக்கத்தில் பரபரப்பான பேச்சுக்கள் புகையத் தொடங்கியுள்ளன. கூடிய சீக்கிரமே மேக்கிங்கில் தாமதம் என பின் வாங்க வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர். ஆனால், அதையும் தாண்டி போட்டியிட்டால் கண்டிப்பாக துணிச்சலான முடிவாகவே பார்க்கப்படும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











