படம் தயாரிக்கிறேன்னு ஓட்டாண்டியாகும் தமாஸ் நடிகர்.. நஷ்டத்தால் ஏற்பட்ட கடன் கழுத்தை நெரிக்குதாம்!

By Staff

சென்னை: சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் படம் தயாரிக்கிறேன் என நடிகர் வீணாக செலவு செய்து வருவது அவரது குடும்பத்தினருக்கே சுத்தமாக பிடிக்கவில்லை எனக் கூறுகின்றனர். ஏற்கனவே நடிகர் நடிக்கும் படங்களுக்கும் அவரே ஃபைனான்ஸ் செய்து செமத்தியாக கடனில் சிக்கி இருப்பதாகவும் கூறுகின்றனர்.

இந்த ஆண்டு தமாஸ் நடிகர் அடுத்தடுத்து தயாரித்த படங்கள் எல்லாம் தியேட்டரில் சுத்தமாக ஓடவே இல்லாத நிலையில், நடிகருக்கு ஏகப்பட்ட சிக்கல்கள் உருவாகியிருப்பதாக பேச்சுக்கள் கசியத் தொடங்கியுள்ளன.

gossip kollywood

தியேட்டரில் ரிலீஸ் செய்து எப்படியாவது லாபத்தை ஈட்டி விட மாட்டோமா என நினைத்து நடிகர் செலவு செய்தது எல்லாம் கடைசியில் அவருக்கு கஷ்டத்தையே கொடுத்து விட்டதாகவும் கூறுகின்றனர்.

பேராசை பெருநஷ்டம்: ஹீரோவாக இருக்கும் பல முன்னணி நடிகர்களே தயாரிப்பு பணிகளில் தலையிடாமல் இன்னமும் 100 கோடி, 200 கோடி என அடுத்த தயாரிப்பாளர்கள் தலையிலேயே தபேலா வாசித்து வரும் நிலையில், வளர்ந்து வரும் அந்த தமாஸ் நடிகருக்கு அதற்குள் இந்தளவுக்கு பேராசை இருக்கக் கூடாது என்றும் அதனால் தான் பெரும் நஷ்டத்தை அவர் சந்தித்து வருவதாக சினிமாவில் உள்ள சில சீனியர் பிரபலங்களே நடிகருக்கு நெருக்கமானவர்களிடம் அட்வைஸாக கூறி வருவதாக பேச்சுக்கள் கசிந்துள்ளன.

கடன் நெருக்கடி: காமெடி நடிகர் நடித்த படம் சமீபத்தில் மிகப்பெரிய கலெக்‌ஷனை அள்ளிய நிலையில், கண்டிப்பாக இவரது படத்தை தியேட்டரில் வெளியிட்டால் கல்லா கட்டி விடுவோம் என நினைத்த நிலையில், அவரது கனவுக்கு மொத்தமும் சமீபத்தில் வெளியான படம் சங்கடத்தை உருவாக்கி தந்து விட்டதாக கூறுகின்றனர். முன்னதாக நடிகர் தயாரித்த மங்கி படமும் மல்லாக்க படுத்த நிலையில், அடுத்தடுத்த தோல்விகளால் கடன் நெருக்கடியில் நடிகர் சிக்கியிருப்பதாக கூறுகின்றனர்.

கடைசி நம்பிக்கை: இந்த ஆண்டு வெளியான அந்த அறிவியல் படமும் நடிகருக்கு அல்வா கொடுத்த நிலையில், அந்த படம் வெளி வருவதற்காக நடிகர் தனது பாக்கெட்டில் இருந்து செலவு செய்த பணமும் வீணாகி போனது என்கின்றனர். ராணுவ வீரன் தான் கடைசியாக இந்த ஆண்டு அந்த நடிகரை காப்பாற்ற வேண்டும் என்றும் அதற்கும் செக் வைக்கும் விதமாக சில படங்கள் வெளியாக காத்திருப்பதாகவும் இந்த படம் மட்டும் சொதப்பி விட்டால் பெரும் நெருக்கடிக்கு ஆளாவார் அந்த நடிகர் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X