பிரைட் நடிகர் குடும்பம் விட்ட சாபம்.. அந்த குற்ற வழக்கில் கொத்தாக சிக்கப் போறாராம் அந்த இயக்குநர்?
சென்னை: பல வருடங்களாக பிரைட் நடிகரின் தம்பிக்கும் அவரது அப்பாவுக்கும் தலைவலியாக இருந்த அந்த இயக்குநர் சமீபத்தில் மீண்டும் அந்த பிரச்சனையை வேண்டுமென்றே பெரிதுபடுத்தி தனது படத்தின் புரமோஷனுக்கு பயன்படுத்த நினைத்தார்.
அதன் காரணமாக மறுபடியும் பிரைட் நடிகரின் குடும்பத்தை சோஷியல் மீடியாவில் சந்தி சிரிக்க வைத்தார். ஒட்டுமொத்த குடும்பமே வயிறு எரிந்து அந்த இயக்குநர் மீது சாபம் விட்ட நிலையில், அவ்வளவு வேகமாக அவர் பெரிய விவகாரத்தில் சிக்குவார் என எதிர்பார்க்கவே இல்லையே என கோலிவுட்டில் பல பிரபலங்கள் தற்போது அந்த இயக்குநருக்கு எதிராக அப்படியே பிளேட்டை திருப்பி பேச ஆரம்பித்து விட்டார்களாம்.

ஆதரவுக்கு யாரும் வரல: பிரைட் நடிகரின் விவகாரம் என்றதும் தக்காளி தொக்கு போல நினைத்து இயக்குநருக்கு ஆதரவாக பல நடிகர்கள் வாய் திறந்து பேச ஆரம்பித்தனர். ஆனால், சமீபத்தில் பெரிய குற்ற வழக்கில் அந்த இயக்குநர் சிக்கிய நிலையில், அவருக்கு ஆதரவு கொடுத்த நெருங்கிய நண்பர்கள் முதல் சினிமா பிரபலங்கள் பலரும் அவரது நம்பரையே பிளாக் செய்து டெலிட் செய்து விட்டார்கள் என ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.
நடிகர் குடும்பத்தின் சாபம்: பல ஆண்டுகளாக அந்த ஒரு பிரச்சனையை வைத்துக் கொண்டு எப்படியாவது பணத்தை பறிக்கும் முயற்சியில் தான் அந்த இயக்குநர் செயல்பட்டார் என்றும் பிரைட் நடிகரின் குடும்பத்தை அசிங்கப்படுத்தினால் தனது புதிய படத்துக்கு புரமோஷனாக அமையும் என எதிர்பார்த்தார்.
படமே காலி: ஆனால், உள்ளதும் போச்சு நொல்லக் கண்ணா என்கிற ரீதியில், இறைவன் சரியான நேரம் பார்த்து ஆப்படித்து விட்டார் என இயக்குநருக்கு எதிராக பேசி வந்த தயாரிப்பாளர் தற்போது சினிமா பிரபலம் ஒருவரிடம் பேசியதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் சினிமா வட்டாரத்தில் பற்றிக் கொண்டு எரிகிறது.
மாட்டிக்கின்னாரு ஒருத்தர்: ஏகப்பட்ட தில்லாலங்கடி வேலை செய்து வந்து தான் சினிமாவில் பெரிதாக அந்த இயக்குநர் ஷைன் ஆகாமல் இருந்து வந்தார் என்றும் தற்போது அவர் வசமாக சிக்கிக் கொண்டார். இனிமேல், அவரையும் அவரது சினிமா வாழ்க்கையையும் காப்பாற்றுவது ரொம்பவே கஷ்டம் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











