அச்சச்சோ அவரா பயங்கரமான இயக்குநராச்சே..நம்ம தலைவருக்கு இப்பத்தான் நேரம் நல்லாருக்கு!அலறும் ரசிகர்கள்

By Staff

அந்த இயக்குநர் பலரை முடிச்சு விட்டவர், அவர் படத்தில் நம்ம தலைவரா என அவரது ரசிகர்கள் அலறுகிறார்களாம்.

அந்த இயக்குநர் நன்றாகத்தான் படம் எடுப்பார் ஆனால் நம்ப முடியாத காட்சிகளை வைத்து சலிப்படைய வைப்பார், சின்னதலயே காலியாச்சு அவரால் என அலறுகின்றனர் ரசிகர்கள்.

தங்கள் தலைவர் இப்பத்தான் விருது எல்லாம் வாங்கி நல்ல படியா முன்னுக்கு வர்றாரு இப்ப போய் இவரா பயங்கரமான இயக்குநர் ஆச்சேன்னு அலறுகிறார்கள் அந்த நடிகரின் ரசிகர்கள்.

 சாக்லெட் பாய்- ரக்கட் பாய்

சாக்லெட் பாய்- ரக்கட் பாய்


அந்த நடிகர் அறிமுகமாகி ஆரம்பத்தில் சாக்லேட் பாயாக ஒன்றுமில்லாமல் இருந்து பிறகு லாபா இயக்குநர் படத்தில் நடித்து ரக்கட் பாயாக மாறினார். அடுத்தடுத்து ரக்கட் பாய் வேடத்தில் நடிச்சதால 10 வருடத்தில் அவருக்கும் உரிய இடம் கிடைச்சது. மற்ற நடிகர்கள் நடிக்க பயந்த ரோல்களை எடுத்து நடிச்சு சாதிச்சு காட்டினார். நான் கூட என்னமோன்னு நினைச்சேம்பா ஆனா தம்பி சூப்பரு என்று பாராட்டினார் உச்ச நடிகர்.

 என்னென்ன மாதிரியான ரோல் எல்லாம் செய்து கலக்கியவர் நம்ம தலைவர்

என்னென்ன மாதிரியான ரோல் எல்லாம் செய்து கலக்கியவர் நம்ம தலைவர்

தம்பி இப்படி பாராட்டு வாங்கி நடிக்கும்போதே சொந்தமாகவே படமும் தயாரிச்சு நடிக்கவும் ஆரம்பிச்சார். பொது சேவையிலும் நாட்டம் காட்ட ஆரம்பிச்ச அவருக்கு மேலும் பாராட்டு குவிய ஆரம்பிச்சது. காட்டுராஜா பேரில் அவர் நடிச்ச 3 பாகங்கள் சிறப்பாக போனது வானூர்தி படமும் பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்து விருதையும் வாங்கி கொடுத்தது. ஜெய்யின்னு ஜெயமான படம் அவர் மதிப்பை மேலும் உயர்த்துச்சு. அப்பப்ப மண்ணின் மனம் வீசும் படத்திலும் நடித்த அவர் வெற்றியானவர் இயக்கத்தில் காளையாக பாய இருக்கிறார். கடைசியாக வாட்ச் பேரில் நடிச்ச ரோலு பெயர் வாங்கி கொடுத்தாலும் பல ரசிகர்கள் என்ன நம்ம தலைவர் இப்படி நெகட்டிவ்வா நடிக்கிறாரேன்னு வருத்ததில் இருக்காங்க.

 என்னன்ன மாதிரி காட்சிகள் எல்லாம் வச்ச டைரக்டர் அவரு

என்னன்ன மாதிரி காட்சிகள் எல்லாம் வச்ச டைரக்டர் அவரு

சிலர் அவரிடமே சொல்லியிருக்காங்க. ஆனால் அதையும் தாண்டி இப்ப அவர் திடீரென அந்த வாசி டைரக்டரை அப்பாயிண்ட் பண்ணியதும் அச்சச்சோ இவரா பயங்கரமான இயக்குநராச்சே நம்ம தலைவரை என்ன செய்யப்போகிறாரோ என கலங்கினார்களாம். ஏற்கெனவே ரேஸ் நடிகர் மோட்டார் பைக்கில் துப்பாக்கி குண்டுகள் இடையே தடுமாறும்போது கர்ப்பிணி மனைவி போனை எடுத்து பேசுவதுபோல் காட்சி வச்சவர், தங்கச்சி, தங்கச்சின்னு காட்சி வச்சு உச்ச நடிகர் படத்தில் வைத்த செயற்கை வசனத்தால் மிரண்டு போனார்கள். தம்பிக்கு வேணா சரியா இருக்கும் அண்ணன் வேற லெவல் அவரு போய் இவர் படத்திலா அச்சச்சோ என உச்சு கொட்டி வருகின்றனர்.

 போஸ்டர பார்த்து அலறும் ரசிகர்கள்

போஸ்டர பார்த்து அலறும் ரசிகர்கள்

இந்நிலையில் அந்த பட போஸ்டர பார்த்து இன்னும் மிரண்டு போய்ட்டாங்களாம் ரசிகர்கள். தலைவருக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி இவரு நம்ப முடியாத காட்சியெல்லாம் வைப்பாரே, இதுல மன்னர் கால படமா, பான் இந்தியாவா? அச்சச்சோ என அலறுகிறார்களாம். தலைஅவரு வேற மாதிரி எஸ்டாபிளிஷ் ஆயிட்டு திடீர்னு வாட்ச் ரோல் பண்ணினதே ஜீரணிக்க முடியல இதுல மிருக இயக்குநரா அச்சச்சோ பயங்கரமான ஆளு நம்ம தலைவரை எங்காவது கொண்டுபோய் நிறுத்திட போறாருன்னு பேசிக்கிறாங்க.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X