அசிங்கம்.. அந்த நடிகரின் அப்பா பண்ற வேலையா இது?.. அந்த பாட்டு நடிகை பக்கத்துல நிக்கவே பயப்படுதே!

By Staff

சென்னை: பிரபல நடிகரின் அப்பாவின் நடவடிக்கைகள் பிடிக்காமல் பாட்டு நடிகை அவர் பக்கத்தில் கூட நிற்காமல் அடிக்கடி பொதுவெளியிலேயே அவரை விட்டு விலகி நடிகர் பக்கத்தில் போய் நிற்கும் காட்சிகள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. பாட்டு நடிகையை விடாமல் டார்ச்சர் செய்து வருகிறாரா அந்த நடிகரின் அப்பா என்கிற கேள்வியை சினிமா வட்டாரத்தில் பலர் எழுப்பியுள்ளது ஷாக்கை கிளப்பியுள்ளது.

கவர்ச்சியாக கூட நடிக்காமல் நல்ல நடிப்பை மட்டுமே வெளிப்படுத்தி வரும் அந்த பாட்டு நடிகை நடித்துள்ள புதிய படத்தை தயாரித்துள்ள ஸ்டைல் நடிகரின் அப்பா இந்தளவுக்கு மோசமானவாரா என்கிற கிசுகிசுக்கள் சமீபத்தில் கிளம்பியுள்ளன.

gossip kollywood actress gossip

அதற்கு முக்கிய காரணமே படத்தின் புரமோஷனுக்காக செல்லும் இடங்களில் எல்லாம் நடிகையை உரசிக் கொண்டே இருக்கிறாராம் அந்த வயதான தயாரிப்பாளர் என்கின்றனர். அவர் செய்வது நடிகைக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக அவரை விட்டு ஒதுங்கி நடிகரின் பக்கத்தில் நடிகை சென்று நிற்கும் காட்சிகள் கசிந்து அதிர்ச்சியை கிளப்பியுள்ளன.

பாலியல் தொல்லை: சினிமாவில் பல தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களில் நடிக்கும் நடிகைகளை ரூமுக்கு அழைப்பதாகவும் நடிகைகளை மோசமான உடையில் நடிக்க வைக்க வேண்டும் என இயக்குநர்களிடம் தயாரிப்பாளர்கள் நிர்பந்தம் செய்வதாக பல புகார்கள் எழுந்துள்ளன. கேரளாவில் சில தயாரிப்பாளர்களும், நடிகர்களும் நடிகைகளை பாலியல் ரீதியாக தொல்லைக் கொடுத்ததாக கடந்த ஆண்டு பூகம்பமே வெடித்தது.

ஸ்டைல் நடிகரின் அப்பா: படத்தயாரிப்பாளராக வலம் வரும் ஸ்டைல் நடிகரின் அப்பா இந்த வயதிலும் சும்மா இருக்காமல் சில்மிஷ மன்னனாக விளங்குவதாக கிசுகிசுக்கள் சினிமா வட்டாரத்தில் கிளம்பியுள்ளன. பாட்டு நடிகையை வைத்து படமெடுத்துள்ள அவர் புரமோஷன் நிகழ்ச்சிகளில் எல்லாம் நடிகையை தொட்டுப் பேசுவது, நடிகையை கண்ட கண்ட இடத்தில் தெரியாதது போல இடிப்பது, உரசுவது என சேட்டைகளை செய்துள்ளதாக பகீர் கிளப்பியுள்ளனர்.

கடுப்பான நடிகை: தெரியாத்தனமாக செய்வது போல நடிகரின் தந்தை செய்யும் பாலியல் சீண்டல்கள் குறித்து தெளிவாக புரிந்துக் கொண்ட நடிகை பொது இடங்களில் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக அவர் பக்கத்திலேயே நிற்பது கிடையாதாம். அவர் நெருங்கி வந்தாலும் உடனடியாக பாதுகாப்பாக ஹீரோ பக்கத்தில் நடிகை சென்று நின்று கொள்வதாக கூறுகின்றனர். ஒரு சில புரமோஷன்களுக்கு தயாரிப்பாளரின் டார்ச்சர் காரணமாகவே நடிகை வருவதில்லை என்றும் கூறுகின்றனர். நேரடியாக நடிகையிடம் தவறாக அப்ரோச் செய்தால் அந்த நபரின் மரியாதை கெட்டுவிடும் என்றும் நடிகை தனது நண்பர்களிடம் பேசியுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X