சொந்த காசுல சூனியம் வச்சுக்கிட்ட பிரைட் நடிகர்.. கொஞ்சம் கொஞ்சமாக ஏமாற்றிய அனிமல் இயக்குநர்?
சென்னை: ரசிகர்கள் நல்ல படத்தையா பார்க்கிறாங்க பாஸ் பிரம்மாண்ட படம் எடுத்தால் தியேட்டருக்கு முதல் நாளே குடும்பம் குடும்பமா போறாங்க என்றும் அந்த தெலுங்கு டைரக்டர் படம் ஒன்றாவது நல்லா இருக்கா? அதையே பார்ப்பவர்கள் இதை பார்க்க மாட்டார்களா என பிரைட் நடிகரின் மண்டையை அந்த அனிமல் இயக்குநர் நல்லாவே கழுவியதன் விளைவு தன்னுடைய கை காசை எல்லாம் கோடிக் கணக்கில் பிரைட் நடிகர் கொட்டி வீணடித்துள்ளதாக கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன.
போதாக்குறைக்கு இந்த படத்துக்காக சில நல்ல படங்களையும் தியாகம் செய்து இருந்தார் பிரைட் நடிகர். ஆனால், கடைசியில் சைலன்ட்டாக சிரித்துக் கொண்டே சம்பவம் பண்ணிவிட்டார் அந்த இயக்குநர் எனக் கூறுகின்றனர்.

தயாரிப்பாளர் ஏற்கனவே பண நெருக்கடியில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், பிரைட் நடிகர் தேவையில்லாமல் உதவி செய்கிறேன் என்கிற பெயரில் தலையிட்டு சொந்த காசுலயே சூனியம் வைத்துக் கொண்டதாக கோடம்பாக்கத்தில் பகீர் பேச்சுக்கள் எல்லாம் கிளம்பியுள்ளன.
கடன் மேல் கடன்: அந்த கலர் தயாரிப்பாளர் எல்லாம் பல நூறு கோடிகளை சேர்த்து வைத்துக் கொண்டு இந்த படத்தை தன் சொந்த காசுலயே எடுக்கவில்லையாம். ஒவ்வொரு பைனான்ஸியரிடமும் கடன் வாங்கித்தான் இந்த படத்தை பெரிய நம்பிக்கையோடு எடுத்திருக்கிறார். அந்தளவுக்கு தயாரிப்பாளரையும் நடிகரையும் பேசியே மயக்கி விட்டாராம் அந்த டைரக்டர்.
இந்த முறை மிஸ் ஆகாது: போன முறை உச்ச நடிகரின் படமே பெரியளவில் மிஸ் ஆன நிலையில், ஆரம்பத்தில் பிரைட் நடிகர் மற்றும் அவரது மனைவி ரொம்பவே பயந்துள்ளனர். ஆனால், இந்த முறை மிஸ் ஆகாது என்றும் தரமான சம்பவமாக இருக்கப் போகிறது. படத்தை பார்த்து விட்டு எக்கச்சக்கமாக பாலிவுட் வாய்ப்புகளும் குவியும் என ஓவர் பில்டப் கொடுத்ததை ஒரு கட்டத்துக்கு மேல் சதுரங்க வேட்டை படத்தில் நம்பும் அரசியல்வாதி போல நம்பி விட்டாராம் அந்த பிரைட் நடிகர்.
நம்பி போட்ட காசுக்கு நாமம்: எப்படியாவது இந்த படம் வெளியே வரவேண்டும் என கடைசி நேரத்தில் கடன் பிரச்சனையால் கம்பியை தயாரிப்பாளர் நீட்ட, பல சிக்கல்களையும் வழக்குகளையும் தீர்த்து வைத்து தனது படத்தை ரிலீஸ் செய்து பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக வேண்டும் என்கிற பேராசையால் பிரைட் நடிகர் தன்னுடைய சொந்த சில கோடிகளை எடுத்து கொடுத்து படத்தை வெளியிட உதவியிருக்கிறாராம். ஆனால், தற்போது அந்த பணமெல்லாம் திரும்புமா? என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக மாறியுள்ள நிலையில், அப்செட் ஆகி வீட்டை விட்டே வெளியேறாமல் அமைதியாகி விட்டார் என்கின்றனர்.
சிக்கினால் அனிமல் காலி: இது எல்லாத்துக்கும் காரணம் அந்த டைரக்டர் தானாம். ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு சத்தம் கூட வராமல் படப்பிடிப்பை நடத்திய அவரது படத்தில் எப்படி இவ்வளவு சத்தம் என பலரும் காதை பொத்திக் கொள்கின்றனர் என்பதே பெரிய கேள்வியாக உள்ளது. பிரைட் நடிகரிடம் அந்த டைரக்டர் சிக்கினால் காலி என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசிக் கொள்கின்றனர். சில நாட்களுக்குப் பிறகு தான் விசாரணை மற்றும் பனிஷ்மென்ட் பணிகள் நடக்கும் என்றும் பகீர் கிளப்புகின்றனர். என்ன செய்து என்ன பிரயோஜனம் அடுத்து அந்த டைரக்டரிடம் டாப் நடிகர் சிக்கப் போவதாகவும் செய்திகள் புகையத் தொடங்கியுள்ளன.


Click it and Unblock the Notifications











