மனைவிக்கு துரோகம்.. அந்த நடிகருடனான நட்பு தான் விவாகரத்துக்கு காரணமா?.. லீக்கான ரகசியம்?

By Staff

சென்னை: பிரபல நடிகர் திடீரென தனது மனைவியை பிரிய காரணமே இன்னொரு பிரபல நடிகருடனான நட்பு தான் காரணம் என திடுக்கிடும் தகவல்கள் கசியத் தொடங்கி உள்ளன. ஏற்கனவே அந்த நடிகருடன் இணைந்துக் கொண்டு பல மோசமான செயல்களில் கணவர் ஈடுபட்டு வருவதை மனைவி கண்டித்த நிலையில், அந்த நடிகரை விட்டே பிரிந்து விட்டார்.

ஆனால், பல வருடங்கள் கழித்து மீண்டும் அந்த நடிகருடனான நட்பு தொடங்கியது தான் இளம் நடிகரின் வீட்டில் விவாகரத்து பஞ்சாயத்து வெடிக்கவே காரணம் எனக் கூறுகின்றனர். சினிமாவில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் வீட்டில் விவாகரத்து பிரச்சனை வெடிக்க காரணமாகவே அந்த பிரபல நடிகர் மற்றும் அவரது மோசமான நட்பு வட்டம் தான் காரணம் எனக் கூறுகின்றனர்.

Popular actor friendship is the main reason behind Young actor divorce

சினிமா பிரபலங்கள் தொடர்ந்து திடீர் திடீரென சோஷியல் மீடியாவில் விவாகரத்து போஸ்ட்டுகளை வெளியிட்டு ரசிகர்களையும் சினிமா உலகத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர்.

அதிகரிக்கும் விவாகரத்து வழக்குகள்: சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி சமீப காலமாக இளைஞர்கள் மத்தியில் விவாகரத்து எண்ணம் அதிகளவில் ஏற்பட்டு வருகின்றன. விவாகரத்து தொடர்பான படங்களில் அதிகம் நடிக்கும் நடிகர்களுக்கும் சீக்கிரமே அதுபோன்ற எண்ணங்கள் தோன்றி வருவதாகவும் அதிர்ச்சியை கிளப்புகின்றனர். சைக்கோ படங்களை இயக்கினால் சைக்கோவாக மாறிவிடுவாங்களா? என கேள்வி எழுப்பினாலும் தொடர்ந்து சைக்கோ படங்களை எடுக்கும் நபர்களின் புத்தி மாறத்தான் செய்யும் என்கின்றனர்.

மீண்டும் நடிகருடன் நட்பு: ஆரம்ப காலக்கட்டத்தில் அந்த நடிகருடன் நட்பு இருந்து வந்த நிலையில், மனைவி சொன்னதன் காரணமாகவே அவருடன் பேச்சுவார்த்தையை அந்த இளம் நடிகர் நிறுத்திக் கொண்டார் என்று கூறுகின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக மீண்டும் அந்த நடிகருடன் நட்பாக பழக ஆரம்பித்தது மனைவிக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை என்பதால் தான் சண்டை வெடித்தது என கிசுகிசுக்கள் கிளம்பி வருகின்றன.

பலரது விவாகரத்துக்கு காரணம்: சில நடிகைகள் தொடர்ந்து சில நடிகர்கள் என பலரது வாழ்க்கையில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற விவாகரத்து பஞ்சாயத்துக்கு பின்னணியில் அந்த பிரபல நடிகர் தான் உள்ளார் என்றும் அவரது கேங்கில் இணைந்து விட்டால் குடும்பத்தில் ஏகப்பட்ட சிக்கல்களும் சண்டைகளும் வெடிக்கும் என்றும் பகீர் கிளப்புகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X