வாய்க்கொழுப்பால் சிக்கிய பிரபல நடிகர்.. அப்பாவால் தேவையில்லாமல் அடிவாங்கும் மகன்.. என்ன ஆச்சு?
சென்னை: மாஸ் நடிகரை கலாய்ப்பதாக நினைத்துக் கொண்டு காமெடி நடிகரை கலாய்த்து பிரபல நடிகர் சமீபத்தில் நடந்த தனது நிகழ்ச்சியில் பேசிய காட்சிகளை ஷேர் செய்து தற்போது மாஸ் நடிகரின் வாரியர்ஸ் ரவுண்டு கட்டி நடிகரை மட்டுமின்றி அவரது மகனையும் சேர்த்து அடி பொளந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே அந்த ரியாலிட்டி ஷோ பிரபலம் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கி அழுது புலம்ப ஆரம்பித்த நிலையில், அந்த நிகழ்ச்சியை நடத்தும் தொகுப்பாளரும் தற்போது தொக்காக மாட்டிக்கொண்டாரே என ரசிகர்களும் புலம்ப ஆரம்பித்துவிட்டனர்.

நடிகர் ஏதோ ஜாலியாக கலாய்த்து தனிப்பட்ட முறையில் பேசியது வீடியோவில் சிக்கிய நிலையில், தற்போது இதனால் தங்களது படம் பாதிக்குமா? என தயாரிப்பு நடிகை தவித்து வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
நடுவுல ஒரு படம் தான் ஓடுச்சு: தமாஸ் நடிகர் தொடர்ந்து வெற்றிப் படங்களையும் பல நூறு கோடி வசூல் படங்களையும் கொடுத்து டாப்பில் இருக்கிறார். ஆனால், இன்னமும் தொடர்ந்து தோல்விப் படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் அந்த பிரபல ஹீரோவின் சம்பளமும் பெரிதாக உயரவில்லை என்கின்றனர். வரிசையாக 10 தோல்வியை சந்தித்த நடிகருக்கு நடுவில் ஒரே ஒரு படம் மட்டுமே அத்தி பூத்தது போல வெற்றிப் பெற்ற நிலையில், ஓவர் ஆட்டம் போட அதன் பின்னர் வரிசையாக 2 படங்கள் ஃப்ளாப் ஆகியும் இன்னும் திருந்தவில்லையா? என கலாய்த்து வருகின்றனர்.
மாட்டிக்கொண்ட மகன்: இந்த நடிகரை வச்சு செய்தால் கூட பரவாயில்லை. ஆனால், மாஸ் நடிகரின் வாரியர்கள் நடிகரை தாண்டி வாரிசு நடிகரான மகனையும் போட்டு ஆன்லைனில் அந்த அடி அடிக்க ஆரம்பித்தது தான் பெரிய பஞ்சாயத்தை கிளப்பியது என்கின்றனர். ஏற்கனவே நண்பர் என சொல்லிக் கொண்டு மாஸ் நடிகரை பற்றிய மோசமான படத்தில் நடித்த நிலையில், அந்த கேமராமேன் சிக்கிக் கொண்டு தவித்து வரும் நிலையில், அதே நிலைமை தான் இந்த நடிகருக்கும் நேரும் என்கின்றனர்.
காப்பி பேஸ்ட்: ஒல்லி நடிகர் நடித்த பெக்கர் படத்தின் காப்பி தான் இவரது அடுத்த படமும் என்றும் அந்த படமே ஓடல. இந்த படம் என்ன ஆகப்போகுதுன்னு பார்க்கத்தானே போகிறோம் என தொடர்ந்து ட்ரோல் செய்ய ஆரம்பித்த நிலையில், பெத்த தொகையை போட்டுள்ள நடிகைக்கு வயிற்றில் புளி கரைத்து வருகிறதாம்.


Click it and Unblock the Notifications