தேவையில்லாத பேச்சு.. இயக்குநரை வெச்சு விளாசிய நடிகர்.. எல்லை மீறி போனா யார் தான் பொறுத்துக்குவாங்க?

By Staff

சென்னை: இந்த நடிகரை ஒரு காலத்தில் அந்த இயக்குநர் மிகவும் மோசமாக விமர்சித்துள்ளார். இதை எல்லாம் கொஞ்சம் கூட மனதில் வைத்துக் கொள்ளாமல், இயக்குநருடன் இணைந்து படம் செய்ய ஒப்புக் கொண்டார் நடிகர். தயாரிப்பாளரும் நடிகருக்கு மிகவும் வேண்டப்பட்டவர் தான் என்பதால், நடிகர் மீது இருக்கும் நம்பிக்கையில் படத்திற்காக பணத்தை வாரி இரைத்துள்ளார். இப்படி இருக்கையில், இயக்குநர் தற்போது நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என இருவரையும் உச்சகட்ட கோபத்திற்கு ஆளாக்கி வருகிறாராம்.

இயக்குநரின் நடவடிக்கைகளில் முதலில் அதிக அளவில் டென்ஷன் ஆனது தயாரிப்பாளர்தானாம். அதாவது சில காட்சிகளுக்கு இயக்குநர் 300 பேர் வேண்டும் என்றால் தயாரிப்பாளரோ 150 பேரை மட்டும் ஏற்பாடு செய்து அனுப்புவாராம். அதேபோல் படப்பிடிப்புக்காக அமைக்கப்படும் செட்களில், இயக்குநர் சொல்வதை கேட்டு விட்டு, என்னையும் ஆலோசித்துவிட்டு அதன் பின்னர் செட் அமைக்கும் வேலைகளைத் தொடங்குகள் என்று ஆர்ட் டைரக்டருக்கு மிகவும் ஸ்ட்ரிக்ட்டான உத்தரவைப் பிறப்பித்து விட்டாராம்.

Popular Actor Furious With Director Over Controversial Interviews and On-Set Issues Kollywood Buzz Turns Explosive

டென்ஷனான இயக்குநர்: இப்படியான உத்தரவுகள் சஜகம் தான் என்றாலும் சின்ன சின்ன மாற்றங்களுக்கு கூட தயாரிப்பாளிடம் போய் நிற்க வேண்டி உள்ளது, சுதந்திரமாக படத்தை எடுக்க முடியவில்லை என்று தனது உதவியாளர்களிடம் தினமும் புலம்பித் தள்ளுவாராம்.

வாக்கு வாதம்: இப்படி இருக்கையில் தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் ஒரு கட்டத்தில் ஏற்பட்ட வாக்கு வாதத்தால், படப்பிடிப்பு அடுத்து தொடருமா தொடராதா என்று யோசிக்கும் அளவுக்கு படத்தின் நிலை இருந்துள்ளது. அதேபோல் படத்தை புரோமோசன் செய்வதிலும் இயக்குநர் மட்டும் தனி ஒருவனாக யூடியூப் சேனல்களுக்கு தொண்டை கிழிய பேட்டி கொடுக்கிறாராம். படத்தை தென்னிந்திய மொழிகளில் ரிலீஸ் செய்வதால், எங்கு சென்றாலும் தனது படத்தில் நடித்த நடிகர் குறித்து பெரிய அளவில் பில்டப் கொடுக்காமல், அவருக்கு போட்டி நடிகராக உள்ள நடிகருக்கு ஓவர் பில்டப் கொடுத்து வருகிறாராம்.

விளாசிய நடிகர்: அதற்கு காரணம் படத்தின் தயாரிப்பாளருக்கும் இயக்குநர் புகழ்ந்து கொண்டு இருக்கும் நடிகருக்கும் ஆகவே ஆகாதாம், அதனால் தான் தயாரிப்பாளரை வேண்டும் என்றே கடுப்பேற்ற இயக்குநர் இப்படி பேசி வருகிறாராம். இது நடிகர் காதுகளுக்குப் போக, நடிகரோ இயக்குநரை கூப்பிட்டு லெஃப்ட் - ரைட் வாங்கி விட்டதாக தகவல் கோலிவுட்டில் பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X