அரசியல் பிரபலத்தை காப்பாற்ற பாஸ் நடிகர் பண்ண தில்லாலங்கடி.. திட்டமிட்டே தோல்விப் படம் கொடுத்தாரா?

By Staff

சென்னை: முன்னணி நடிகர்கள் ஒரு படத்தை வெற்றியடைய செய்வதும் அடுத்த படத்தை தோல்விப் படமாக கொடுப்பதும் இயல்பாக நடக்கும் விஷயம் இல்லை என்றும் திட்டமிட்டே ஹீரோக்களின் கதையை கொடுத்து படம் பண்ண சொல்லப் போவதெல்லாம் திரை மறைவில் மிகப்பெரிய அரசியல் நடைபெறுகிறது என பகீர் தகவல்கள் கசிந்துள்ளன.

சினிமா நட்சத்திரங்கள் கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றத்தான் இந்த திட்டமிட்டே தோல்விப் படங்களை கொடுத்து வருகின்றனர் என்றும் சாதாரண தயாரிப்பாளர்கள் இளம் இயக்குநர்கள் எல்லாம் தரமான படங்களை கொடுத்து வரும் நிலையில், புகழ்பெற்ற ஜாம்பவான்கள் இப்படி தொடர்ந்து சொதப்ப காரணமே மக்களுக்குத் தெரியாமல் வேறலெவல் சூதாட்ட கேமை அவர்கள் ஆடுவதாக சில கிசுகிசுக்கள் கோடம்பாக்கத்தில் கிளம்பத் தொடங்கியுள்ளன.

Popular Actor gives planned flop movie due to this political reason gossip talks circulates in industry

சமீபத்தில் நடைபெற்ற சோதனை காரணமாக அரசியல் பிரபலம் ரவுண்டு கட்டப்பட்ட நிலையில், அவரை காப்பாற்றவே பாஸ் நடிகர் இப்படியொரு வேலையை பார்த்துள்ளார் என்றும் ரசிகர்கள் எப்படியும் அடுத்து ஹிட் கொடுத்தால், இதையெல்லாம் மறந்து விடுவார்கள் என்பதை பயன்படுத்தி இப்படியொரு டிராமா நடைபெற்று வருவதாக பிரபலம் ஒருவர் பகிர்ந்த தகவல் பதற வைக்கிறது.

தமாஸ் நடிகரை டாப் ஹீரோவாக்க தெரிந்தவர்: எப்படி வெற்றிப் படத்தை கொடுக்க வேண்டும் என்றும் எப்படி ஒரு படத்தை ஹிட் படமாக மாற்ற என்னவெல்லாம் செய்ய வேண்டும் என அனைத்தையும் கற்றுக் குடித்தவர் தான் பாஸ் நடிகர். தொடர்ந்து சொதப்பிக் கொண்டிருந்த தமாஸ் நடிகரையே பாக்ஸ் ஆபீஸ் நாயகனாக மாற்றிய பாஸ் நடிகர் தனது படங்களை தொடர்ந்து இப்படி கோட்டை விட என்ன காரணம் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

அரசியல் பிரபலத்தை காப்பாற்ற: முழ்கிப் போன கப்பல் என தெரிந்துமே அந்த அரசியல் பிரபலம் தொடர்ந்து பாஸ் நடிகர் படங்களுடன் தொடர்பு படுத்திக் கொண்டு வரும் நிலையில், சமீபத்தில், அரசியல் பிரபலத்தை மடக்க மிகப்பெரிய வலை விரிக்கப்பட்ட நிலையில், அதிலிருந்து அவரை மீட்கவே பாஸ் நடிகர் அடுத்தடுத்து தோல்விப் படங்களை கொடுத்து நஷ்டக் கணக்கை காட்டி காப்பாற்றும் முயற்சியில் களமிறங்கி உள்ளார் என்றும் இது முழுக்க முழுக்க திட்டமிட்ட தோல்வி தான் என்றும் இதன் மூலம் நடிகருக்கு நஷ்டம் எல்லாம் இல்லை அதை தாண்டிய லாபம் தான் வரப்போகிறது என்கின்றனர்.

எல்லாமே சால்வ் ஆகிடும்: அரசியல் பிரபலத்தையும் அவரை சுற்றியுள்ள நபர்களுக்கும் எதிராக வீசப்பட்டுள்ள அத்தனை வலைகளையும் சமாளிக்கவே இப்படியொரு டிராமாவை நிகழ்த்தியுள்ளனர் என்றும் ட்ரோல் செய்யப்பட்டாலும், கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும், அதையெல்லாம் சீக்கிரமே சரி செய்து விடும் மந்திரம் அறிந்து வைத்திருக்கும் நடிகர் இப்படியொரு தில்லாலங்கடி வேலையை பார்த்திருக்கிறார் என எதிர் தரப்பினர் கிசுகிசுக்களை கிளப்பியுள்ளனர். இதெல்லாம் எந்தளவுக்கு உண்மை அல்லது எதிர்ப்பு காரணமாக கிளப்பபடுகிறதா என்பது தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X