கல்யாணமும் வேண்டாம்.. குழந்தையும் வேண்டாம்.. கடைசி வரை ஜாலியா இருப்போம்னு சொன்ன வி நடிகர்?
சென்னை: அந்த நடிகைக்கும் அந்த நடிகருக்கும் 40 பிளஸ் வயதை கடந்த நிலையில், திருமணமே வேண்டாம் என்கிற முடிவுக்கே வந்து விட்டதாக கூறுகின்றனர். ஃபாரின் ஸ்டைல் வாழ்க்கையில் மோகம் கொண்ட அந்த நடிகரை காதலித்து வரும் வி நடிகையும் நடிகர் மேல் உள்ள காதல் காரணமாக அவர் பேச்சுக்கெல்லாம் ஆமாம் சாமி போட்டு வருகிறாராம்.
10 ஆண்டுகளாக அந்த வி நடிகரும் வி நடிகையும் காதலித்து வரும் நிலையில், எப்போது தான் திருமணம் செய்து கொள்ளப் போறீங்க என நெருங்கிய சினிமா நண்பர் சமீபத்தில் நடிகரிடம் கேட்க, திருமண எண்ணமே தங்களுக்கு இல்லை என்றும் திருமணம், குழந்தை பேறு எல்லாமே நம்முடைய வாழ்க்கையின் சந்தோஷத்தை கெடுத்து விடும் காரணிகள் தான் என்றும் இருக்கும் வரை ஹேப்பியாக இருந்து விட்டு போய் விடலாம் என்கிற பாலிசியில் வாழ்கிறேன் என ரொம்பவே கூலாக சொல்லி கேள்வி கேட்ட நபரை கலங்கடித்து விட்டாராம்.

ஆனால், அந்த நடிகைக்கு திருமணம் செய்துக் கொண்டு குழந்தை எல்லாம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிற விருப்பம் இருந்தாலும், நடிகரின் பிடிவாதம் காரணமாக தனது ஆசைகளை மறைத்து வைத்துக் கொண்டு அவருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையை அந்த நடிகரின் கண்டிஷன்களுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளன.
ஜாடை மாடையாக அந்த நடிகை தனது ஆசையை சொல்லும் போதெல்லாம் வி நடிகர் தங்களுக்குள் போட்டுக் கொண்ட அக்ரீமென்ட் பற்றி பேசி நடிகையை ஆஃப் செய்து விடுகிறாராம். இதன் காரணமாக நடிகைக்கும் அந்த நடிகருக்கும் இடையே சில மாதங்கள் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும், ஆனால், நடிகர் விடாது டார்ச்சர் செய்த நிலையில், மீண்டும் அந்த நடிகை நடிகருடன் வாழ்ந்து வருவதாக கூறுகின்றனர்.
நடிகையின் வீட்டிலும் தொடர்ந்து திருமண தொல்லை கொடுக்க இந்த வருடம், அடுத்த மாதம் என எதையாவது சொல்லி சமாளித்து வருகிறார் என நடிகையின் தோழி கசியவிட்ட தகவல்கள் தற்போது திரையுலகில் பூதாகரமாக புகையத் தொடங்கி உள்ளன. கூடிய சீக்கிரமே அந்த நடிகரை விட்டு வி நடிகை விலகி விடுவார் என்றே ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











