தமாஸ் நடிகருக்கு தலைவலியாக மாறிய ஊர் படம்.. இது முதல்ல வந்தா அடுத்த படத்துக்கும் ஆப்பு கன்ஃபார்மாம்?

By Staff

சென்னை: சில முன்னணி நடிகர்களின் அரவணைப்பில் அப்படியே ஒட்டிக் கொண்டு தனது திறமையை வெளிக்காட்டி முன்னணி நடிகராகவே மாறியுள்ளார் அந்த தமாஸ் நடிகர். ஆனால், ஒவ்வொரு முறையும் தனது ஏணிகளை எட்டி உதைத்துவிட்டு சுயநலமாக மட்டுமே செயல்பட்டு வருகிறார் என்கிற குற்றச்சாட்டுகளும் அந்த நடிகர் மீது தொடர்ந்து வன்மமாக குவிந்து வருகிறது. இந்நிலையில், தேவையில்லாமல் நடிகர் அந்த இயக்குநர் இயக்கத்தில் தலை கொடுத்து தற்போது பெரிய தலைவலியை அனுபவித்து வருகிறார் என்கின்றனர்.

ஒரு படம் ஓடினால் தொடர்ந்து அந்த தமாஸ் நடிகருக்கு அடுத்த படங்கள் மரண மொக்கை படங்களாக மாறி வருகின்றன. கடைசியாக அவர் நடிப்பில் வெளியான படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்திய நிலையில், பல முன்னணி நடிகர்களே நடிகரின் வளர்ச்சியை பார்த்து அதிர்ந்து போய்விட்டனர்.

Popular Actor got tensed due to Director s bad screenplay will affect his next movie too

ஆனால், அடுத்த படம் நடிகருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையுமா என்பது சந்தேகம் தான் என்றும் அனைத்துக்கும் காரணம் அந்த நோலன் இயக்குநர் தான் என கோலிவுட் வட்டாரத்தில் பரவலான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

சொதப்பிய இயக்குநர்: ஒரு காலத்தில் மற்றவர்களின் கதைகளை ஆட்டையைப்போட்டு புதிய படம் எனக் கொடுத்து முன்னணி நடிகர்களை வைத்து கல்லா கட்டி முன்னணி இயக்குநர் வரிசையிலும் தனக்கென ஒரு சேர் போட்டு அமர்ந்துக் கொண்டார். ஆனால், கூடிய சீக்கிரமே அவரது சாயம் வெளுத்துவிட யாருமே அவரை நம்பி புதிய படங்களை கொடுக்காமல் விலக்கி வைத்தனர். கடைசியாக பெரிய நடிகர் ஒருவர் நம்பிக்கையுடன் படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்த நிலையிலும் படு சுமாரான அல்வா கிண்டிக் கொடுத்து நடிகரை அப்செட் ஆக்கிவிட்டாராம்.

தமாஸ் நடிகருக்கு தலைவலி: நடிகர்கள் தேர்வு முதல் திரைக்கதை வடிவமைப்பு என நோலன் இயக்குநர் பல விஷயங்களில் சொதப்பி வருகிறார் என்கின்றனர். மேலும், பிரம்மாண்ட இயக்குநர் ஒரே நேரத்தில் இரட்டை குதிரைகளில் சவாரி செய்து இரண்டு மொழிப் படங்களையும் சொதப்பியது போலவே இவரும் அந்த ஊர் படத்தை ஊறுகாய் போட்டு வைத்துள்ளார் என்பதை புரிந்துக் கொண்ட தமாஸ் நடிகருக்கு தலைவலி வந்துவிட்டதாக கூறுகின்றனர்.

அடுத்த படத்துக்கும் ஆப்பு: இதுவரை ரிலீஸ் தேதியை திட்டமிடாமல் நடிகர் தள்ளிப்போட காரணமே இந்த படம் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று பிசினஸில் பெரிய அடி வாங்கிவிட்டால், இதன் காரணமாக அடுத்து மாஸ் நடிகருடனே மல்லுக்கட்டும் அந்த படத்தை யாருமே வாங்க முன் வரமாட்டார்கள் என்கிற கவலையும் நடிகருக்கு அதிகம் கிளம்பி இருப்பதாக பேச்சுக்கள் பரவி வருகின்றன.

டாப் நடிகர் செய்த அதே தப்பு: சமீபத்தில் டாப் நடிகரும் இதே போன்ற தப்பைத்தான் செய்து இரண்டு படங்களின் பிசினஸுக்கும் வேட்டு வைத்துக் கொண்டார் என்கின்றனர். ஓடக்கூடிய படத்தை முதலில் வெளியிடுவது தான் புத்திசாலித்தனம் என்றும் அந்த ஃபயர் படம் வெளியான பின்னர், இந்த ஊர் படத்தை வெளியிட்டால் பிசினஸ் ரீதியாகவும் வெற்றிக் கிடைக்கும் என நடிகர் பலே பிளான் போட்டு வருவதாக கூறுகின்றனர். ஆனால், ஊர் படத்தின் தயாரிப்பாளர் இந்த வருஷமே வந்தே தீர வேண்டும் என அடம்பிடிப்பதால் தான் நடிகருக்கு ஒரே குழப்பம் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X