Don't Miss!
- News
எடப்பாடிக்கு அடி மேல் அடி.. அதிமுக அலுவலக சாவியும் கையை விட்டுப் போகுமா? - வந்த ‘நெகட்டிவ்’ சிக்னல்!
- Travel
இயற்கை ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் ஒரு புதையல் – கர்நாடகாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்!
- Finance
பள்ளி-க்கு 30 லட்சம், கல்லூரிக்கு 1 கோடி.. மிடில் கிளாஸ் பெற்றோர்கள் ஷாக்..!
- Technology
கம்மி விலையில் 50MP கேமரா, 6000mAh பேட்டரியுடன் அறிமுகமான சூப்பர் போன்.!
- Lifestyle
செவ்வாய் 66 நாட்கள் ரிஷப ராசியில் இருப்பதால் இந்த ராசிக்காரர்களின் செல்வம் பெருகப் போகுது...
- Automobiles
மோதி பாத்திருவோம்... டாடாவின் வயிற்றில் புளியை கரைக்கும் மாருதி ஆல்டோ கார்! புதிய அவதாரத்தில் நாளைக்கு லான்ச்!
- Sports
ப்ளேயிங் 11ல் 5 ஓப்பனிங் வீரர்கள்.. ஜிம்பாப்வே தொடரில் வித்தியாசமான இந்திய அணி.. இதை கவனத்தீர்களா??
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
வாய்ப்பு கொடுத்தவரிடமே வாலாட்டிய இயக்குநர்.. தலையை பிய்த்துக் கொள்ளும் பிரைட் நடிகர்!
சென்னை: ஆரம்பத்தில் நடிப்பைக் கற்றுக் கொடுத்த குரு என்கிற விஸ்வாசத்தால் 'வி' எழுத்து நடிகர் தனது மகனின் அறிமுகப் படத்தை இயக்க அந்த இயக்குநருக்கு வாய்ப்புக் கொடுத்தார்.
ஆனால், நட்பையே முறித்துவிடும் அளவுக்கு அந்த இயக்குநர் தரமான சம்பவத்தை செய்து விட்டார். அப்படி இருந்தும் பலர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் நாமளும் ஒரு வாய்ப்பை கொடுக்கலாமே என வான்டட்டாக வந்து சிக்கிக் கொண்டார் அந்த பிரைட் நடிகர்.
இயக்குநரின் வார்த்தைகளில் மயங்கி தானே நடிக்க நினைத்த அவரிடமே தற்போது தனது மொத்த வித்தையையும் காட்டி மோசம் செய்துள்ளார் இயக்குநர் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
பிரபாஸ் படத்தில் நடிக்க அந்தவொரு கண்டிஷன் மட்டும் தான் போட்டேன்.. நடிகர் பிருத்விராஜ் ஓப்பன் டாக்!

எகிறிய பட்ஜெட்
குறைவான பட்ஜெட் போதும், குறைந்த நாட்களில் தரமான படத்தை எடுத்து இந்த முறை உங்களுக்கு ஆஸ்கரையே தூக்கிக் கொடுக்க வைக்கிறேன் என பிரைட் நடிகரை வார்த்தைகளால் மயக்க, அதில் மயங்கவில்லை என்றாலும், பரவாயில்லை ஒரு படம் தானே பண்ணிட்டு போகட்டும் என நினைத்த அவருக்கு சொன்ன பட்ஜெட்டை விட பல மடங்கு செலவை இழுத்து விட்டுள்ளாராம் அந்த மார்க்கெட் போன இயக்குநர்.

மீண்டும் பிரச்சனை
பிரைட் நடிகரை எப்படி நடிக்க வைக்க வேண்டும் என்பது கூட தெரியாமல், பழி வாங்கும் நோக்கில் இயக்குநர் செய்த சில காரியங்களால் ரொம்பவே மனம் நொந்த நடிகர் படத்தையே ட்ராப் செய்து விடும் முடிவுக்கு சென்று அனைத்தையும் நிறுத்தி விட்டாராம். ஆனால், போட்ட காசு வீணாக போகக் கூடாது என நட்பு வட்டத்தில் அறிவுறுத்திய நிலையில், இயக்குநரும் இனிமேல் பார்த்து நடந்துக் கொள்கிறேன் என உத்தரவாதம் கொடுத்த நிலையில், மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமானது.

வீணான வீடு
செட் போட்டு எடுக்க வேண்டாம், ரியலாகவே கட்டிவிடுங்கள் என ஒரு வீட்டை கட்டச் சொன்ன நிலையில், கடைசி வரை அந்த வீட்டில் ஒரு ஷாட் கூட அந்த இயக்குநர் எடுக்காதது நடிகரை கடும் கோபத்திற்குள் ஆளாக்கி இருக்கிறது. இயக்குநரின் பேச்சைக் கேட்டு வீட்டை இனாமாக கொடுத்து விடவும் முடிவு செய்த நடிகரிடமே கடைசியில் இப்படி வாலாட்டி இருக்கிறாரே அந்த இயக்குநர் என நடிகரின் காதுகளுக்கு தகவல் வர இயக்குநரை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி இருக்கிறாராம்.

ஸ்ட்ரிக்ட்டான ஆர்டர்
கடைசியாக இயக்குநரிடம் இதுதான் லாஸ்ட் பட்ஜெட் இதற்குள் படத்தை முடித்துக் கொடுங்க என கறாராக சொல்லி இருக்கிறாராம். மேலும், இயக்குநர் போட்ட ஹெவி காஸ்ட் லொகேஷன் திட்டத்துக்கும் கடிவாளம் போட்டு, நான் சொல்ற இடத்துல எடுங்கன்னு பட்ஜெட்டை குறைக்கும் பணியில் தீவிரமாக நடிகரே இறங்கி செயல்பட்டுள்ளார் என்றும் கூறுகின்றனர். நடிகரின் வாரிசு படத்திற்கு ஆன நிலைமை ஆகாமல் இருந்தால் சரி!