ஓவர் பில்டப் கொடுக்கும் தயாரிப்பாளர்.. அடக்கி வாசிக்க சொல்லாமல் அசால்ட்டா விட்ட பிரைட் நடிகர்.. ஏன்?
சென்னை: பிரைட் நடிகரின் அந்த பிரம்மாண்ட படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அதை வைத்து ஒரே படத்தில் ஓவர்நைட் ஒபாமாவாக மாறிவிடலாம் என்கிற கனவில் இருக்கிறாராம் பிரைட் நடிகர். கடந்த சில மாதங்களாகவே இந்தி ரசிகர்களுடன் ஒன்றாக இணைந்து வாழ காரணமே அவர்களுடைய பல்ஸை பிடிக்கத்தான் என்கின்றனர்.
டோலிவுட் படங்கள் இந்தி ரசிகர்களை எப்படி கவர்ந்தது. கோலிவுட் படங்கள் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டு யோசித்து தான் பக்காவாக காய் நகர்த்தி வருகிறார் என்கின்றனர்.

சமீபத்தில் வெளியான சில தமிழ் படங்கள் இந்தியில் பெரிதாக புரமோசன் செய்து பில்டப் கொடுக்காத நிலையில், தான் அந்த பிரம்மாண்ட இயக்குநரின் பில்டப் வித்தையை கற்றுக் கொண்டு தனது தயாரிப்பாளருக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார் பிரைட் நடிகர் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
பில்டப் முக்கியம் பிகிலு: இந்த ஆண்டு இந்தி மற்றும் தெலுங்கில் வெளியான சில படங்கள் இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்க காரணமே ஹெவி பில்டப் தானாம். அந்த பில்டப்பை சரியாக இந்தி ரசிகர்கள் மத்தியில் கடத்தி விட்டாலே பெரிய வசூல் வேட்டையை பார்த்து விடலாம் என பிரைட் நடிகர் மும்பையிலேயே டேரா போட்டு விட்டார் என்கின்றனர்.
இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா?: சில நூறு கோடி வசூல் செய்யவே தத்தளிக்கும் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வசூலை எதிர்பார்க்கிறோம் என தயாரிப்பாளர் மனசாட்சியே இல்லாமல் ஓவர் பில்டப் கொடுத்துள்ளாரே இதையெல்லாம் உடம்பு தாங்குமா என்றும் உருட்டினாலும் ஒரு நியாயம் வேண்டாமா? என பலரும் கிண்டல் செய்து வந்த நிலையில், பெரிதாக பில்டப் கொடுத்தால் தான் அதில் பாதியாவது வரும் என்கிற கணிப்புடன் தான் ஸ்கெட்ச் போட்டு படக்குழு பில்டப் புரமோஷனை ஆரம்பித்து இருப்பதாக கூறுகின்றனர்.
அது மட்டும் நடந்தா?: இந்தியில் மட்டும் கோடிக் கணக்கில் கொட்டி புரமோஷன் செய்து வரும் நிலையில், அவர்கள் நினைத்ததை போலவே இந்த படம் அந்த ரசிகர்களை கவர்ந்து விட்டால் அதன் பின்னர் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் அடிப்பதை யாராலும் தடுக்கவே முடியாது என மலைபோல் நம்பி காத்துக் கொண்டிருக்கின்றனர். நினைத்ததை நடத்தி முடிப்பாரா பிரைட் நடிகர் என்கிற கேள்விகளும் அடுத்தடுத்து பாலிவுட் படங்களை குறி வைத்து வரும் அவர் எளிதில் இந்தி ரசிகர்கள் மத்தியில் பாப்புலர் ஆகிவிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











