நம்பர் நடிகையுடன் சுற்றும் மாஸ் நடிகர்.. சீக்கிரமே திருமணமா.. மனைவியை விட அப்செட்டான அவார்டு நடிகை?
சென்னை: மாஸ் நடிகருக்கும் அந்த சின்ன நம்பர் நடிகைக்கும் சீக்கிரமே திருமணம் நடைபெற போவதாகவும் இருவரும் பல ஆண்டுகள் கழித்து சந்தித்த நிலையில், ஃபயர் பற்றிக் கொண்டதாக அதிர்ச்சியளிக்கும் பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.
கடந்த சில ஆண்டுகளாகவே மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து தனிமையில் நடிகர் வாழ்ந்து வருவதாக கூறுகின்றனர். முன்னதாக அவார்டு நடிகையுடன் கோர்த்து நடிகர் பேசப்பட்டு வந்த நிலையில், சமீப காலமாக அந்த நடிகையை டீலில் விட்டு விட்டாராம் நடிகர் என்கின்றனர்.

சின்ன நம்பர் நடிகையுடன் நடிகர் சுற்றி வரும் தகவலை அறிந்து அவரது மனைவியை விட அவார்டு நடிகை தான் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
விரைவில் திருமணமா?: மனைவியை விட்டு நடிகர் பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்றும் விரைவில் அவர் சின்ன நம்பர் நடிகையை திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார் என்றும் ஏகப்பட்ட கிசுகிசுக்கள் சினிமா வட்டாரத்தில் புகைந்து வருகின்றன. குடும்பத்துடன் நடிகர் வெளிநாட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டார் என்றெல்லாம் சொல்லப்பட்ட நிலையில், இதுவரை நடிகர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருப்பது போன்ற எந்தவொரு புகைப்படமும் வெளியாகாததே இப்படியொரு கிசுகிசுக்கள் கிளம்ப காரணமாக அமைந்துள்ளது என்கின்றனர்.
வெளிநாட்டில் ஒன்றாக: சின்ன நம்பர் நடிகையுடன் பல ஆண்டுகள் கழித்து நடிகர் சந்தித்த நிலையில், அந்த நடிகையும் இத்தனை ஆண்டுகள் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருக்க நடிகருடன் மனம் விட்டுப் பேசி ஒன்றாக இருக்க சம்மதித்து விட்டார் என்கின்றனர். இருவரும் வெளிநாட்டில் சுற்றித் திரிந்து வரும் போட்டோக்கள் கசிந்த நிலையில், நடிகர் தரப்பு அதிர்ச்சியடைய அதுதான் காரணம் என்றும், கடந்த படம் வெளியாவதற்கு முன்பாக எத்தனையோ ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் வீடியோக்களும் லீக் ஆகும் போது இப்படியெல்லாம் பதற்றம் அடையவில்லையே என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன.
அவார்டு நடிகை அப்செட்: நடிகருடன் ரகசிய உறவில் இருந்து வந்த அந்த அவார்டு நடிகை தான் தற்போது நடிகர் அந்த சின்ன நம்பர் நடிகையை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக கிளம்பிய கிசுகிசுவால் ரொம்பவே அப்செட் ஆகியிருக்கிறார் என்றும் சமீப காலமாக அந்த நடிகை போன் போட்டால் கூட நடிகர் அதனை எடுப்பது கூட இல்லை என்றும் கூறுகின்றனர்.
இதெல்லாமே வெறும் வதந்தி தான் என்றும் உண்மையில்லை என்றும் நடிகர் தரப்பு தொடர்ந்து பேசி வந்தாலும், நடிகரின் மனைவி மெளனம் காத்து வருவது தான் சந்தேகத்தை கிளப்பி வருகிறது என்றும் நடிகரே இதற்கு எளிதில் முடிவு கட்டி விடலாம். ஆனால், ஏன் செய்யவில்லை என்றும் சினிமா வட்டாரத்தில் கேள்விகள் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











