ஓவர் வாய்க்கொழுப்பு.. வி நடிகருக்கு கிடைக்கவிருந்த பெரிய சான்ஸ் கோயிந்தாவாம்.. என்ன ஆச்சு?
சென்னை: தொடர்ந்து 6 படம் அவுட்டான போது அடக்கி வாசித்து வந்த அந்த வி நடிகர் தற்போது வடக்கு வாசல் செட் ஆனதும் ஓவராக ஆட்டம் போட்டு வருகிறார் என்கின்றனர். உள்ளூரில் அவர் ஹீரோவாக நடித்த படங்கள் சரியாக ஓடாத நிலையில், அவருக்கு கை கொடுத்த கதாபாத்திரத்தையே தற்போது தலைகனத்தால் வேண்டாம் என உதறி தள்ளியதால் பெரிய பட வாய்ப்பை சமீபத்தில் இழந்து விட்டதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.
நடித்தால் இனிமேல் ஹீரோவாகத்தான் நடிக்கப் போகிறேன் என முடிவெடுத்துள்ள வி நடிகரின் முடிவு சரியான விஷயம் இல்லை. மீண்டும் அவர் பட்டுத்தான் திருந்துவார் என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. நடிகரை நம்பி படங்களை எடுக்க முடிவு செய்த சில சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு கொடுத்த வாக்குகளையும் நடிகர் மீறி விட்டார் என்றும் அதிர வைக்கின்றனர்.

அந்த நடிகையுடன் நெருக்கம்: தொடர்ந்து தனது படங்களில் டபரா செட் போல அந்த நடிகைக்கு வாய்ப்புகளை கொடுத்து வருகிறார் வி நடிகர். இருவரும் ரொம்பவே க்ளோஸ் ஆக இருந்து வருகின்றனர் என்றும் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. நடிகைக்கு மற்ற படங்களில் வாய்ப்புகளே கிடைக்காத நிலையில், தொடர்ந்து நடிகைக்கு வாய்ப்புக் கொடுத்து வருவதே அந்த நடிகர் தான் என்கின்றனர்.
தலைகனம் ஏறிடுச்சு: கடந்த சில ஆண்டுகளாக அந்த வி நடிகர் நடித்த எந்தவொரு படமும் ஓடவில்லை. தொடர்ந்து நடிகர் படங்கள் தோல்வியடைந்த நிலையில், அழுது புலம்பி வந்த நிலையில், சில இயக்குநர்கள் அவரது நடிப்புத் திறமை வீணாகி விடக் கூடாது என வேறு சில கதாபாத்திரங்களை கொடுக்க அந்த படங்கள் ஹிட் அடித்தன. அதன் தாக்கம் அவருக்கு வடக்கிலும் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கி உள்ளன.
அங்கேயே செட்டில்: கோலிவுட்டில் இருந்து சமீப காலமாக நடிகைகள் வடக்கிற்கு செல்வதை போல சில இயக்குநர்கள் மற்றும் நடிகர்களும் வடக்கில் சென்று செட்டில் ஆகி வருகின்றனர். பெரிய சினிமா உலகம், பெரிய சம்பளம் என்கிற மோகத்தால் தற்போது அந்த வி நடிகரும் அங்கேயே செட்டில் ஆகும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறாராம்.
பெரிய வாய்ப்பு போச்சு: ஹீரோவாக சில பட வாய்ப்புகள் குவிந்த நிலையில், தொடர்ந்து அதே ரூட்டில் பயனிப்போம் என்கிற முடிவுக்கு நடிகர் வந்து விட்ட நிலையில், அந்த நடிகரை தனது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என மற்றொரு பிரபல நடிகர் முடிவெடுத்து வைத்திருந்த நிலையில், சமீபத்தில் நடிகர் பேசிய ஓவர் பேச்சைக் கேட்டு அந்த நடிகர் வேண்டாம் என்றே சொல்லி விட்டாராம். அதுமட்டுமின்றி நடிகரின் புதிய படம் ஓடவில்லை என்றால் மீண்டும் பழைய நிலைமைக்கு வந்து விடுவார் என்றும் சினிமா வட்டாரத்தில் பேசத் தொடங்கி விட்டனர்.


Click it and Unblock the Notifications