2வது கல்யாணம் பண்ணி வச்சும் வேஸ்ட்.. பல ஆயிரம் கோடிக்கு வாரிசு வரல.. அப்செட்டில் ஹீரோவின் அம்மா?

By Staff

சென்னை: மகன் ஆசைப்படுகிறான் என்பதற்காக ஏற்கனவே சில நடிகர்களுடன் காதல் கிசுகிசுவில் சிக்கியவர் என்றாலும் பரவாயில்லை என சீனியர் நடிகர் தனது மகனுக்கு அந்த பேபி நடிகையை திருமணம் செய்து வைத்தார். ஆனால், திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் நடிகையால் தங்களுக்கு வாரிசு கொடுக்க முடியவில்லை என்கிற பஞ்சாயத்து வெடித்த நிலையில், நடிகை தனது கணவருடன் நெருங்கி பழகி தவிர்த்து விட்டு இயக்குநருடன் ஊர் சுற்ற ஆரம்பித்துவிட்டார்.

அந்த நடிகரும் இன்னொரு நடிகையை காதலிக்கத் தொடங்கிய நிலையில், இருவரையும் சுற்றி ஏகப்பட்ட பேச்சுக்கள் அவர்கள் காதுபடவே விழ தொடங்கிய நிலையில், இதற்கு மேலும், சேர்ந்து வாழ வேண்டாம் என பிரிந்து விட்டனர்.

Popular Actor Mother started gossps about her second daughter in law due to no child

மனைவியை பிரிந்த நிலையில், இதற்கு மேல் கவலையே இல்லை என காதலியை கரம்பிடித்த நடிகருக்கு தற்போது மீண்டும் குடும்பத்தில் பெரிய தலைவலி ஏற்பட்டுள்ளதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

2வது கல்யாணம் பண்ணியும் வேஸ்ட்: தனது மகனுக்கு சினிமா நடிகைகளே வேண்டாம் என அப்பா நினைத்தாலும் மகன்கள் மேக்கப் போட்ட நடிகைகள் மீது தான் காதல் வலையில் அடிக்கடி விழுந்து விடுகின்றனர். மகன் ஆசைப்பட்டு விட்டாரே என்பதற்காக அவருக்கு 2வது திருமணத்தையும் வெகு ஜோராக அந்த கோடீஸ்வர நடிகர் செய்து வைத்த நிலையில், ஒரு வருடம் ஆகவுள்ள நிலையில், இன்னமும் வீட்ல விசேஷம் இல்லையே என மாமியார்காரி சாடைப் பேச்சுகளை ஆரம்பித்து விட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

ஒரு வருஷம் ஆகிடுச்சு: இந்த நடிகையைத்தான் இரண்டாவதாக திருமணம் செய்துக் கொள்ளப் போகிறேன் என நடிகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஒரு வருடம் ஆன நிலையில், இன்னமும் குழந்தை பெற்றுக் கொள்ளும் முடிவை அவர்கள் எடுக்கவில்லையா? அல்லது ட்ரை பண்ணியும் எதுவும் வரவில்லையா என்கிற பேச்சுக்கள் குடும்பத்தில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் நல்ல நாளில் கூட கணவருடன் சந்தோஷமாக இருக்க முடியாமல் 2வது தாரமாக பணக்கார குடும்பத்திற்கு போன நடிகை ரொம்பவே மனமுடைந்து அழுது புலம்பியதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இதாவது நிலைக்குமா?: திருமணத்துக்கு முன்பு வரை நடிகையுடன் அப்படி காதல் வலையில் விழுந்துக் கிடந்த நடிகர் கடந்த சில மாதங்களாகவே தனது மனைவியை வெளியே எங்கேயும் அழைத்துச் செல்லாமல், தனது வேலையில் பிசியாக இருப்பது போல சீன் போட்டு வருகிறாராம். இந்த உறவாவது நீடித்து நிலைக்குமா? அல்லது முடிவுக்கு வந்து விடுமோ என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X