மனைவியை பிரிந்தால் தான் வெற்றி கிடைக்கும்.. சாமியார் சொன்ன பரிகாரம்.. பிரைட் நடிகர் பார்த்த வேலை!

By Staff

சென்னை: தொடர்ந்து தோல்விகளை பிரைட் நடிகர் சந்தித்து வரக் காரணமே அவரது மனைவியின் சில செயல்கள் தான் என்றும் ஒரு மண்டலத்துக்கு மனைவியை பிரிந்து இருந்தால் நிச்சயம் வெற்றிக் கிடைக்கும் என சாமியார் ஒருவர் பரிகாரம் சொன்ன நிலையில் தான் அந்த விவாகரத்து வதந்திகள் எல்லாம் பரவியது என்று திடுக்கிடும் கிசுகிசுக்கள் கோடம்பாக்கத்தில் கிளம்பி வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாகவே மனைவியின் சொல்லே மந்திரம் என அடுத்தடுத்து பிரைட் நடிகர் செய்து வரும் செயல்களில் எல்லாம் அவர் தொடர் தோல்வியை சந்தித்து வருவதால், மனைவியை பிரிந்தால் நல்லது என சாமியார் ஒருவர் சொல்ல திடுக்கிட்டு போய்விட்டாராம் பிரைட் நடிகர்.

gossip kollywood actors gossip

அதெல்லாம் முடியவே முடியாது வேறு ஏதாவது பரிகாரம் சொல்லுங்கள் செய்கிறேன் என நடிகர் சொல்ல, உடனடியாக ஒரு மண்டலத்துக்கு மனைவியை பிரிந்து இருக்க வேண்டும் என்றும் சில பூஜைகளையும் செய்தால் வெற்றி உறுதி என சிக்கிய நடிகரிடம் எக்கச்சக்கமாக பில் போட்டு விட்டு அவர் கிளம்பி விட்டாராம்.

ஒரு மண்டலம் பிரிவு: அதன் காரணமாகவே மனைவியை விட்டு ஒரு மண்டலம் பிரிந்து இருந்து தனது படம் வெற்றியடைய வேண்டும் என விரதம் எல்லாம் இருந்து வந்தாராம் அந்த நடிகர். ஆனால், கடைசியில் அந்த சாமியார் சொன்ன எந்தவொரு வார்த்தையும் பலிக்காத நிலையில், செம கடுப்பாகி டோஸ் விட்டுள்ளார் என ஏகப்பட்ட கிசுகிசுக்கள் கிளம்பி வருகின்றன.

உன் பேச்சை முழுசா கேட்டிருந்தா: மனைவியை மொத்தமாக பிரிய முன்னதாக சாமியார் சொன்ன நிலையில், உன் பேச்சை முழுசா கேட்டிருந்தா என் வாழ்க்கையில் மேலும், கஷ்டங்கள் தான் வந்திருக்கும். மனைவி வந்த பிறகு தான் எனக்கு வெற்றிகளே வரத் தொடங்கின என நினைத்த நடிகர் வேறு சில சாமியார்களிடம் ஆலோசனை கேட்க, இருவரும் ஒன்றாக இருந்தால் எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்றும் தொழிலில் அதிக கவனத்தை செலுத்தினாலே வெற்றிக் கிடைக்கும் என சொல்லிவிட்டாராம்.

அதிரடி மாற்றம்: நடிகர் தற்போது தனக்கு கடந்த சில ஆண்டுகளாக ஆலோசகர்களாக இருந்த சிலரை அதிரடியாக மாற்றிவிட்டு நல்ல ஐடியா தெரிந்த அனுபவம் கொண்ட நபர்களை ஆலோசகர்களாக மாற்றியிருக்கிறார் என்றும் சீக்கிரமே அவருக்கு வெற்றிக் கிடைக்கும் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X