நம்பர் நடிகையால் பிரைட் நடிகர் படத்துக்கு வந்த ஆப்பு.. இப்போதைக்கு வாயே திறக்க வேண்டாம்னு முடிவாம்?

By Staff

சென்னை: மாஸ் நடிகர் விவகாரத்தில் நம்பர் நடிகையின் தலை தான் இஷ்டத்துக்கு மாட்டிக்கொண்டு தவிக்கிறது. மாஸ் நடிகருக்கும் நம்பர் நடிகைக்கும் இடையே தான் பிரச்னை என்று பார்த்தால் செவனேன்னு இருந்த சிவனாண்டி மகன் சிக்கிட்டான் என புது பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கிறது.

ஏற்கனவே தியேட்டர்களில் பெரிதாக தனது படங்கள் ஓடுவதில்லை என்கிற விரக்தியில் பிரைட் நடிகர் எப்படியாவது எந்தவொரு சிக்கலும் இல்லாமல் பிளாக்பஸ்டர் கொடுக்க வேண்டும் என நினைத்தார்.

Popular Actor new movie release getting into big trouble after Actress controversy sparks
Photo Credit:

ஆனால், அவர் போதாத நேரம் அந்த காமெடி நடிகர் படத்தில் நடிக்க முடிவு செய்ததில் இருந்தே இடியாப்ப சிக்கல் தான் நடிகரை அப்செட் ஆக்கி வருகிறதாம். எப்படியாவது இந்த முறை படத்தை ரிலீஸ் செய்து விடலாம் என பிளான் பண்ண நடிகருக்கு பின்னாடி இருந்து இப்படியொரு ஆப்பு வரும் என சொப்பனத்திலும் கண்டில்லா என ஃபீல் பண்ணத் தொடங்கி விட்டாராம்.

நம்பிக்கையே போச்சு: நடிகருக்கு மட்டுமின்றி நடிகரின் ரசிகர்களுக்கும் அந்த கலர் படத்தின் மீதான நம்பிக்கை சுத்தமாக போய் விட்டது என்கின்றனர். நடிகரும் அடுத்தடுத்து வெற்றிக் கொடுக்க என்ன செய்யவேண்டும் என்கிற முனைப்பிலும் டாப் நடிகர், மாஸ் நடிகர் இல்லாத கேப்பை நாம ஃபில் பண்ணிட வேண்டும் இல்லை என்றால் தமாஸ் நடிகர், ஒல்லி நடிகர், சின்ன ஒல்லி நடிகர் என மற்றவர்கள் புகுந்து விடுவார்கள் என வேகம் காட்டி அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி முடித்து வருகிறாராம்.

ரிலீஸ் பிளான் வீணாப்போச்சே: எப்படி இருந்தாலும் அடுத்த மாதம் அந்த கலர் படத்தை எப்படியாவது பில்டப் ஏத்தி விட்டு அந்த மியூசிக்கை நம்பி இறக்கினால் ஓரளவுக்கு ஹிட் படமாக மாற்றிவிடலாம் என்கிற நம்பிக்கையில் அனைத்து வேலைகளையும் செய்த பிரைட் நடிகர் தற்போது அனைத்தையும் அப்படியே ஆஃப் பண்ணிவிட்டு கம்முன்னு இருக்க டைரக்டருக்கு ஆர்டர் போட்டு விட்டார் என்கின்றனர்.

நம்பர் நடிகை தான் காரணம்: இப்படி பிரைட் நடிகர் கடைசி நேரத்தில் அந்த கலர் படத்தை களமிறக்காமல் தனது அடுத்த படத்தை ரிலீஸ் செய்யும் அளவுக்கு பிசியாக மாற முக்கிய காரணமே அந்த நம்பர் நடிகையின் சமீபத்திய சர்ச்சைகள் தான் என்கின்றனர். கூடிய சீக்கிரமே ஒரு வழியாக அந்த பஞ்சாயத்து முடிவுக்கு வந்துவிடும் என்றும் அதன் பின்னர் பூனைக்குட்டியை மெல்லமாக அவிழ்த்து விடலாம் என்றும் நடிகர் பிளான் பண்ணி வருகிறார் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X