அடுத்தடுத்து பெரிய இயக்குநர்கள் தலையையும் தடவும் ஒல்லி நடிகர்.. பெரிய சிக்கலில் மாட்டப்போவது உறுதி?
சென்னை: இதுவரை இளம் இயக்குநர்கள் தலையை மட்டுமே தடவி அடுத்தடுத்து படங்களில் அவர்களை ஒப்பந்தம் செய்து வைத்து லைனில் காக்க வைத்து வரும் ஒல்லி நடிகர் அடுத்ததாக சில பெரிய இயக்குநர்கள் படங்களிலும் நடிக்க தயார் என அவர்கள் மூலம் தயாரிப்பாளர்களை பிடித்து அட்வான்ஸ் வாங்கி வருவதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.
சினிமாத்துறை முன்பை போல இல்லாத நிலையில், சில பெரிய தயாரிப்பாளர்களும் 10 கோடிகளுக்குள் குறைவாக படங்களை எடுக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெரிய நடிகர்கள் இஷ்டத்துக்கு சம்பளம் கேட்டால், ஷேர் அடிப்படையில், படத்தின் லாபத்தில் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்றும் ஓபனாக கூறி வருகிறார்களாம்.

இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்ட ஒல்லி நடிகர் காற்றுள்ள போதே கடனை அடைக்க வழியை தூற்றிக்கொள் என்பது போல செம ஷார்ப்பாக தனது பணியை செய்து வருகிறார் என்றும் எப்படியாவது சினிமாவில் அடுத்தடுத்து சாதிக்க துடிக்கும் இயக்குநர்களும் அந்த நடிகரின் நடிப்புத் திறமையை நம்பி களமிறங்கி வருவதாக கூறுகின்றனர்.
வரிசை கட்டும் இயக்குநர்கள்: ஒரு நாளில் பல மணி நேரங்களை ஒதுக்கி இளம் இயக்குநர்களிடமும் பெரிய இயக்குநர்களிடமும் கதை கேட்டும் சில பெரிய நடிகர்களுக்கு தன்னுடைய கதையை சொல்லியும் வருகிறாராம் அந்த ஒல்லி நடிகர். சினிமா பிசினஸ் பலத்த அடிவாங்குவதற்கு முன்னாடி நாம பெரிய தொகையை சம்பாதித்து விட வேண்டும் என்கிற மனக் கணக்குடன் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு வேலை பார்த்து வருகிறாராம். அவரை நம்பி பல இயக்குநர்கள் வரிசை கட்டி அண்ணா நகரில் பிரியாணி வாங்குவதை போல க்யூவில் நின்றுக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.
பாதி சம்பளம் அட்வான்ஸ்: இதுவரை 10க்கும் மேற்பட்ட படங்களை தனது கைவசமாக நடிகர் வைத்திருக்கிறார் என்றும் பாதி சம்பளத்தை அட்வான்ஸாக பல தயாரிப்பாளர்களிடம் கேட்டு வருவதாகவும் கூறுகின்றனர். மாஸ் நடிகர், டாப் நடிகர் பெரிதாக சினிமாவில் ஆர்வம் காட்டாத நிலையில், ஒல்லி நடிகரை பலரும் நம்பி புதிய படங்களை ஒப்பந்தம் செய்து வருவதை தனக்கு சாதகமாக அந்த நடிகர் பயன்படுத்தி வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
பிரச்னை வெடிக்கும்: இளம் இயக்குநர்கள் எல்லாம் நடிகரை நம்பி எதிர்காலம் இருக்கிறது என்பதால் அமைதியாக இருப்பார்கள். ஆனால், சமீப காலமாக பெரிய இயக்குநர்கள் படங்களிலும் நடித்துக் கொடுக்கிறேன் என நடிகர் ஒப்பந்தம் போட்டு வரும் நிலையில், சரியான நேரத்தில் நடிகர் கால்ஷீட் கொடுக்காமல் சில வருடங்கல் கால தாமதம் செய்தால், கண்டிப்பாக ஏற்கனவே ஏற்பட்டதை விட பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை மணியும் அடிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











