அண்ணன் மீது அப்படியொரு கோபம்.. பிரம்மாண்ட வீட்டு விசேஷத்துக்கு கூட கூப்டலையாம்.. அதுதான் காரணமா?

By Staff

சென்னை: ஆசை ஆசையாக மனைவி மற்றும் மகன்களுடன் மாமனார் வீட்டுக்கு பக்கத்திலேயே இருக்கலாம் என நினைத்து அந்த பிரபல நடிகர் கட்டிய பிரம்மாண்ட வீட்டு விசேஷம் கடைசியில் எளிமையான ரெஜிஸ்டர் மேரேஜ் போல நடைபெற்றது.

மகன்களை அம்மா அனுப்பாத நிலையில், இன்னொரு பெரிய சொந்தமும் வீட்டு விழாவில் பங்கெடுக்கவில்லையே ஏன் என்கிற கேள்வி கோடம்பாக்கத்தில் கிளம்பி உள்ளது.

சமீபத்தில் அண்ணனும் தம்பியும் நேருக்கு நேர் சினிமாவிலும் மோதிக் கொண்ட நிலையில், இருவருக்கும் இடையே அந்த பிரச்சனை தான் காரணமா? என்கிற பேச்சும் புகையத் தொடங்கி உள்ளது.

நடிகரின் பிரம்மாண்ட வீடு

நடிகரின் பிரம்மாண்ட வீடு

கோலிவுட்டே திரும்பி பார்க்கும் அளவுக்கு உச்ச நடிகரை வைத்து பூஜை நடத்தி பிரம்மாண்ட வீட்டை கட்ட ஆரம்பித்து முடிக்கும் போது யாருமே கண்டு கொள்ளாத நிலையில், சமீபத்தில் நடிகரின் புது மனை புகு விழா நடைபெற்றது. குடும்பத்தில் விரிசல் விழுந்த காரணத்தினால் மனைவி மற்றும் மகன்கள் கலந்து கொள்ளவில்லை.

மன வேதனையில் உச்ச நடிகர்

மன வேதனையில் உச்ச நடிகர்


தனது மகளுடன் அந்த நடிகர் இந்த பிரம்மாண்ட வீட்டில் குடியேறுவார் என கனவு கண்ட உச்ச நடிகருக்கு தற்போது நடிகரை பிரிந்து வாழ்ந்து வரும் மகளால் பெரும் மன வேதனை ஏற்பட்டுள்ளது. பக்கத்திலேயே இப்படி வந்து உட்கார்ந்து கொண்டானே என்றும் நடிகர் அப்செட் ஆகி உள்ளாராம்.

மிஸ்ஸான அண்ணன்

மிஸ்ஸான அண்ணன்

ரொம்பவே எளிமையாக சில ஆட்கள் மட்டுமே பங்கேற்று நடைபெற்ற விழாவில் நடிகரின் அண்ணனையும் அவரது குடும்பத்தினரையும் எங்கே காணவில்லையே என சினிமா வட்டாரத்தில் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால், இதுதொடர்பாக எந்தவொரு சத்தமும் காட்டாமல் நடிகர் தரப்பு உள்ளது.

அழைக்கவே இல்லையாம்

அழைக்கவே இல்லையாம்

பிரம்மாண்ட வீடு கட்டிய நிலையில், அண்ணனை நடிகர் அழைக்கவே இல்லை என பரபரப்பு பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. சமீபத்தில், அண்ணன் மற்றும் தம்பி இடையே கருத்து வேறுபாடு கிளம்பி உள்ளதாகவும், அதன் காரணமாகவே அண்ணனை வீட்டு விசேஷத்திற்கு தம்பி நடிகர் அழைக்கவில்லை என்கின்றனர்.

நேரடி மோதல்

நேரடி மோதல்

சமீபத்தில் தம்பியின் படம் வெளியான போதும் கூட, தனது படத்தையும் வம்படியாக அண்ணன் வெளியிட்டு இருந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எல்லாத்துக்கும் காரணம் கடந்த ஆண்டு நடந்த அந்த சம்பவம் தான் என கோடம்பாக்கத்தில் புகையத் தொடங்கி உள்ளன.

படு தோல்வி

படு தோல்வி

தம்பியின் கால்ஷீட்டை ஏகப்பட்ட பில்டப் கொடுத்து வாங்கிய அண்ணன் கடைசியில் ஹிட் கொடுக்க தவறியது தான் இருவருக்கும் இடையே இப்படியொரு பிரச்சனை ஏற்படக் காரணமே என்கின்றனர். என் நேரத்தை வீணடிக்காதே என்றும் உன் லைனை பார்த்துக் கொண்டு நீ போய்விடு என தம்பி ஆத்திரத்தில் கத்தியதால் தான் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X