சொன்ன நேரத்தில் நடக்காத செட்டில்மென்ட்.. கடைசி நேரத்தில் கழுத்தை பிடித்த நபர்.. அதுதான் காரணமா?

By Staff

சென்னை: வம்பு நடிகரின் அந்த படம் தள்ளிப் போக சொன்ன நேரத்தில் நடக்காத செட்டில்மென்ட் தான் காரணம் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

தடை நீக்க பிரச்சனையை பைசல் செய்த போதே ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட நேரத்தில் செட்டில்மென்ட் செய்துவிடுகிறோம் என நடிகர் தரப்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி தான் பஞ்சாயத்தையே முடித்து வைத்தது.

அப்போது கூட பிரச்சனைக்கு காரணமான அந்த ஒரு நபர் உடன் என்ன மாதிரியான பேச்சுவார்த்தை நடந்தது என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

பெரும் நஷ்டம்

பெரும் நஷ்டம்

அந்த நடிகரை வைத்து படம் இயக்கிய தயாரிப்பாளர்களுக்கு அவரது படங்கள் தொடர் தோல்வியை சந்தித்த நிலையில், பெரும் நஷ்டம் ஏற்பட்டது. மேலும், படத்தை எடுக்கும் போதே நடிகர் பண்ண ஏகப்பட்ட அலம்பல்கள் காரணமாக ஏகப்பட்ட லாஸ் ஏற்பட்டதாக நடிகர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டு அவருக்கு தடை போடப்பட்டது.

பேச்சுவார்த்தை நடத்திய அம்மா

பேச்சுவார்த்தை நடத்திய அம்மா

நடிகரின் அம்மா இந்த விவகாரத்தில் தலையிட்டு அனைத்து தரப்பினருடன் கலந்து ஆலோசித்து சுமூக பேச்சுவார்த்தை நடத்த நடிகர் மீது போடப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. படமாகவோ பணமாகவோ செட்டில்மென்ட்டை முடித்துக் கொள்வோம் என வாக்குறுதியும் கொடுத்திருந்தனர்.

ரிலீஸ் அறிவிப்பு

ரிலீஸ் அறிவிப்பு

எல்லாம் சுமூகமாக செல்ல நடிகரின் அப்கமிங் படத்திற்கான ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டு உச்ச நடிகருடன் நேரடியாக மோதவும் தயார் ஆகி விட்டார் அந்த வம்பு நடிகர். ஆனால், திடீரென மீண்டும் மிரட்டல்கள் மற்றும் பிரச்சனைகள் கிளம்பி அந்த நடிகரின் படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

போட்டிக்கு பயந்து

போட்டிக்கு பயந்து

திடீரென ரேஸில் இருந்து நடிகரின் படம் பின் வாங்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் உச்ச நடிகருடன் போட்டிக்கு பயந்து தான் அந்த வம்பு நடிகர் ஓடி விட்டார் என ஏகப்பட்ட ட்ரோல்கள் சமூக வலைதளங்களில் குவியத் தொடங்கின. இந்நிலையில், சம்பந்தப்பட்ட நடிகரின் பெற்றோர்கள் கொடுத்துள்ள ஸ்டேட்மென்ட்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன.

மிரட்டுறாங்க

மிரட்டுறாங்க

சொன்ன தேதியில் மகனின் படம் வெளியாகாமல் போனதற்கு உச்ச நடிகர் படம் காரணம் இல்லை என்றும், அதற்கு பதிலாக சிலர் அந்த நடிகருக்கு போன் செய்து மிரட்டல் விடுத்தது தான் காரணம் என்றும், படத்தை ரிலீஸ் செய்யவே விட மாட்டோம் என்றும் பிரச்சனை செய்வதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

செட்டில்மென்ட் பண்ணல

செட்டில்மென்ட் பண்ணல

என்ன தான் பிரச்சனை எல்லாம் சரியாகத்தானே போய்க் கொண்டிருந்தது என்று விசாரித்தால், சொன்னபடி செட்டில்மென்ட்டை நடிகரின் தரப்பு செய்யாதது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என தகவல்கள் கசிந்து வருகின்றன. அப்போதைக்கு ஷூட்டிங் நடக்க எல்லாவற்றுக்கும் ஒப்புக் கொண்டு இப்போ முரண்டு பிடிப்பதாக கூறுகின்றனர்.

படம் வரட்டும்

படம் வரட்டும்

காசு கேட்டு கழுத்தை பிடித்த அந்த நபருக்கு படம் வரட்டும் படத்தின் ரிலீசுக்கு பிறகு உங்களுக்கான செட்டில்மென்ட்டை செய்து விடுகிறோம் என மழுப்பலாக பதில் சொல்ல ஆரம்பித்தது தான் இந்த பிரச்சனை உருவாக காரணம் என கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன. அவருக்கான செட்டில்மென்ட்டை சொன்னபடி செய்து முடித்து இருந்தால் இந்த பிரச்சனைக்கு வேலையே இல்லை என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X