மூஞ்சி மட்டும் தான் அவரோடது.. மத்ததெல்லாம் டூப்பா பாஸ்? இதுல அந்த கனவுப் பட ஆசை வேற!

By Staff

சென்னை: சினிமாவில் நடிக்கும் நடிகர்களுக்கு ஃபேஸ் வேல்யூ என்பது ரொம்பவே முக்கியமான ஒன்று.

மத்த ஸ்பேர் பார்ட்ஸ் எல்லாம் பழுதாகி போனாலும் டூப் போட்டு சரி செய்து கொள்ள முடியும் என்பதற்கு அந்த பாஸ் நடிகரும் தற்போது ஒரு உதாராணமாகி விட்டார் என்கிற தகவல் கோலிவுட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இந்நிலையில், அந்த மெகா பட்ஜெட் கனவு படத்தையும் இப்படியே செய்து விடலாம் என அவர் எப்படி நினைத்தார் என்கிற கேள்வியை சில நெருங்கிய பிரபலங்களே கேட்டு கலாய்த்துள்ள தகவல் தான் கோடம்பாக்கத்தையே ஷாக் ஆக்கி உள்ளது.

டூப் போட பிடிக்காது

டூப் போட பிடிக்காது

ஆரம்பத்தில் இருந்தே அந்த பாஸ் நடிகருக்கு ஸ்டன்ட் காட்சிகளில் எல்லாம் டூப் போட்டு நடிக்கவே பிடிக்காது. ஏகப்பட்ட ரிஸ்க் காட்சிகளில் சம்மர் சால்ட் அடித்து உடல் முழுக்க காயங்களும் ரணங்களும் கொண்ட சிங்கமாகவே நடமாடி வருகிறார். இந்நிலையில், அவருக்கே டூப் போடும் நிலை உருவாகி விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

நண்பர் வழியில்

நண்பர் வழியில்

தொழில் ரீதியாக இரு நடிகர்களுக்கும் இடையே பெரும் போட்டி இருந்து வந்தாலும், இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஏற்கனவே பல ஆண்டுகளாக டூப் உதவியால் ஆக்‌ஷனில் அமர்க்களப்படுத்தி வரும் அந்த உச்ச நடிகரை தற்போது பாஸ் நடிகரும் பின்பற்ற தொடங்கி உள்ளாராம்.

வெறித்தனமான சண்டை

வெறித்தனமான சண்டை

அந்த இளம் இயக்குநர் படத்தில் சண்டை காட்சிகள் எல்லாம் அப்படியே லைவாகவும் வெறித்தனமாகவும் எடுக்கப்பட்டு வரும் நிலையில், பாஸ் நடிகரை வைத்து அவர் உருவாக்கி வரும் அந்த பழைய டைட்டில் படத்திலும் ஏகப்பட்ட சண்டைக் காட்சிகள் இருப்பதால் வேறு வழியில்லாமல் இந்த படத்திற்கு டூப்பை வைத்து படப்பிடிப்புகளை நடத்தி வருகிறார்களாம்.

முகம் மட்டுமே

முகம் மட்டுமே

வெறும் மூன்று மணி நேரம் தான் அந்த பாஸ் நடிகர் ஒரு நாளைக்கான கால்ஷீட் கொடுக்கிறாராம். உடல் ஒத்துழைக்காத நிலை மற்றும் பல விஷயங்களில் செலுத்தும் ஈடுபாடுகள் காரணமாக முகத்தை காட்டும் க்ளோஸ் அப் காட்சிகளில் மட்டும் நடித்து கொடுத்து விட்டு கிளம்பி விடுகிறாராம். சஜஸெஷன் மற்றும் லாங் ஷாட்களில் எல்லாம் அவரை போலவே உருவம் கொண்ட ஒருவரை வைத்து இயக்குநர் படத்தை எடுத்து வருகிறாராம்.

அந்த ஆசை வேற இருக்கே

அந்த ஆசை வேற இருக்கே

இந்த விவரத்தை அறிந்த அந்த நடிகரின் நண்பர் ஒருவர், இந்த சாதாரண படத்தில் நடிக்கவே இப்படி போராட வேண்டியதாக இருக்கிறது. இந்நிலையில், அந்த கனவுப் படத்தில் வேற எப்படி மனுஷன் நடிக்க ஆசைப்படுகிறார். ஒருவேளை இந்த டெக்னிக் நல்லா இருக்குன்னு புரிந்து கொண்டதால் தான் அந்த படத்திற்கான முயற்சியையே ஆரம்பித்துள்ளாரா என்றும் பேசிய தகவல்கள் கோடம்பாக்கத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X