கண்டமான காமெடி நடிகர் இமேஜ்.. படத்துக்காக பஞ்சர் ஒட்டும் பணியில் அந்த பெரிய இடத்து வாரிசு!

By Staff

சென்னை: கருமி, கஞ்சன், யாருக்கும் உதவுவதில்லை, பெண் நடிகைகளுடன் நெருக்கம் என சமீபத்தில் அந்த பிரபல காமெடி நடிகரின் பெயர் டோட்டல் டேமேஜ் ஆனது.

கூட நடிக்கும் நடிகைகளையே சும்மா விடாமல் பதம் பார்த்தவர் என பேச்சுக்கள் கிளம்பிய நிலையில், உடன் நடித்த நடிகைகளை கண்ட இடங்களில் தொட்டுத் தூக்கும் வீடியோ காட்சிகளும் வெளியாகி அந்த நடிகரின் இமேஜை டோட்டல் டேமேஜ் செய்தது.

இந்நிலையில், அந்த நடிகர் நடிப்பில் உருவாகி உள்ள அந்த ராஜா படத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக காமெடி நடிகரின் பெயரில் விழுந்துள்ள டேமேஜ்களுக்கு பேட்ச் போட பெரிய இடத்து வாரிசு ஒரு பக்கா பிளான் போட்டிருப்பதாக தகவல்கள் லீக் ஆகி உள்ளன.

Popular actor plans for a big thing to cover up the Comedy actor spoiled image

கடைந்தெடுத்த கஞ்சன்: சக நடிகர்கள் கஷ்டத்தில் இருந்தால் கூட ஒரு பைசா உதவி கூட செய்ய மாட்டார் அந்த காமெடி நடிகர் என விமர்சனங்கள் அந்த நடிகர் மீது சமீபத்தில் மிகப்பெரிய அளவில் எழுந்தது.

மேலும், மூத்த நகைச்சுவை நடிகர்களுக்கு செலுத்த வேண்டிய மரியாதையை கூட செலுத்த அவர் தவறி விட்டார் என்றும் அவர் வெறும் கஞ்சன் அல்ல கடைந்தெடுத்த கஞ்சன் என கோலிவுட்டில் அந்த காமெடி நடிகரை பலரும் விளாசி வருகின்றனர்.

முன்னணி நடிகைகளுக்கே ரூட்: முன்னணி நடிகைகளை ஹீரோயின் ஆக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு ரொம்பவே டார்ச்சர் கொடுத்துள்ளார் என ஏகப்பட்ட கில்மா புகார்களும் அந்த காமெடி நடிகர் மீது குவிந்துள்ளன.

அந்த நடிகருடன் நடித்த பல சக நடிகைகளை அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு அழைத்து செருப்படி வாங்கி உள்ளார் என்றும் பரபரப்பான தகவல்களை சினிமா பிரபலங்களே சிலர் சமீபத்தில் கூறிய நிலையில், அந்த காமெடி நடிகரின் பெயர் மொத்தமாக டேமேஜ் ஆகி உள்ளதாக கூறுகின்றனர்.

பஞ்சர் போடும் பெரிய இடத்து பிள்ளை: அந்த பெரிய இடத்து வாரிசு நடிப்பில் உருவாகி உள்ள அந்த ராஜா பெயர் கொண்ட படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இயக்குநர் மொத்தமாக அந்த நடிகருக்கே அதிக முக்கியத்துவத்தை கொடுத்து படத்தை எடுத்து வைத்துள்ளார்.

ஆனால், சினிமாவில் இப்படி அவர் பெயர் சீரழியும் என கொஞ்சமும் படக்குழு எதிர்பார்க்கவே இல்லையாம். இந்நிலையில், தனது படம் எப்படியாவது ஹிட் அடிக்க வேண்டும் என்பதற்காக காமெடி நடிகரின் பெயருக்கு ஏற்பட்டுள்ள கலங்கத்தை துடைக்கும் வண்ணம் ஒரு சூப்பரான பிளான் ஒன்றை விரைவில் அமல்படுத்த போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

அந்த நடிகருக்கு உள்ள ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரட்டும் விதத்தில் பிரம்மாண்டமான ஒரு ப்ரமோஷன் ஏற்பாட்டை தன்னை முன்னிலை படுத்தாமல் அந்த காமெடி நடிகரையே முன்னிலைப்படுத்தி செய்ய அந்த வாரிசு திட்டமிட்டு இருப்பதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X