ஃபர்ஸ்ட் சிங்கிளே சொதப்பிடுச்சு.. ஆளவிடுறா சாமி என ஓடிய பிரபல நடிகர்.. என்ன ஆகுமோ?
சென்னை: ஃபர்ஸ்ட் சிங்கிள் சொதப்பிய உடனே அந்த பிரபல நடிகர் தனது படத்தின் ரிலீஸ் தேதியையே ஒரேயடியாக தள்ளி வைத்து விட்டார்.
ஏற்கனவே அந்த நடிகருக்கு இந்த ஆண்டு திரும்பிய பக்கமெல்லாம் செமத்தியான அடி விழுந்தது குறிப்பிடத்தக்கது.
பெரிய நிறுவனத்தின் புண்ணியத்தால் தியேட்டருக்கு வந்த ஒரே ஒரு படம் மட்டுமே தப்பித்துக் கொண்டது. அதுவும் அந்த நடிகருக்காக ஓடவில்லை, படத்தில் பிரமாதமாக நடித்த நடிகைக்குத்தான் ஓடியது என்கிற விஷயமும் நடிகரை ரொம்பவே அப்செட் செய்தது.

ஏற்கனவே பெரிய அடி
இந்த ஆண்டு அந்த பிரபல நடிகரின் வாழ்க்கையில் மறக்க முடியாத பல பெரிய அடிகள் விழுந்து விட்டன. அடுத்த லெவலுக்கு செல்லலாம் என ஆசைப்பட்டு அவர் எடுத்து வைத்த அடியெல்லாம் அவருக்கு இடியாய் வந்து தலையிலேயே இறங்கி விட ரொம்பவே அவஸ்த்தை பட்டுவிட்டார் மனுஷன். இந்நிலையில், அடுத்த சிக்கல் ஆன் தி வே என்பது போல அவரது பொழப்பு ஓடிக் கொண்டிருக்கிறது.

சொதப்பிய சொந்தம்
மன்னர் பரம்பரை, மண்ணாங்கட்டி பரம்பரை, தம்பியை வைத்து அடுத்தடுத்த படங்களை பண்ணப் போகிறேன் என ஜம்பமாக பேசிய சொந்தக்காரர் கடைசியாக அப்படியொரு மொக்கைப் படத்தை கொடுத்து அந்த பிரபல நடிகருக்கு இருந்த கொஞ்ச நஞ்ச பெயரையும் டோட்டல் வாஷ் அவுட் செய்து விட்டார். இதன் பிறகு இன்னும் 2 பெரிய படங்கள் வேற அவர் இயக்கினால் எப்படி இருக்கும் அந்த நடிகரின் நிலைமை என கோடம்பாக்கமே கேலி பேசி வருகிறது.

அடிவாங்கிய ஃபர்ஸ்ட் சிங்கிள்
இந்நிலையில், அந்த டப்பிங் படத்தையாவது வெளியிடலாம் என நினைத்து அதன் முன்னோட்டமாக ஒரே ஒரு ஃபர்ஸ்ட் சிங்கிளைத்தான் அந்த நடிகர் வெளியிட்டார். ஆனால், அதற்கு கிடைத்த அமோக வரவேற்பு காரணமாக ஆள விடுங்கடா சாமி கொஞ்ச நாள் கழித்து திட்டு வாங்கிக்கிறேன். இந்த வருஷமே மொத்த ட்ரோலையும் தாங்க முடியாது என ஓடியே விட்டார்.

தள்ளிப்போன ரிலீஸ்
அதன் காரணமாகத்தான் கொஞ்சம் எல்லாம் இல்லை, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கே ஒரேயடியாக தள்ளிப் போய் விட்டார் என்றும் கூறுகின்றனர். உச்ச நடிகரின் படத்துக்கு கூடவே வம்பு நடிகர் தைரியமாக படத்தை இறக்கிய நிலையில், போட்டிக்கு இப்படி அஞ்சி நடுகிறாரே என பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











