அரசியலுக்கு வரப்போகிறாரா அந்த பிரபலம்.. சினிமாவில் இருந்து விலக அதுதான் காரணமா? உண்மை என்ன?

By Staff

சென்னை: அரசியல் கருத்துக்களை சமூக வலைதளங்களில் அதிகமாக சொல்லி வந்த நிலையில் கூடிய விரைவில் அரசியலுக்குள் நுழைய போகிறார் அந்த நடிகர் என்கிற பேச்சுக்கள் அடிபடத் தொடங்கி இருந்தன.

இந்நிலையில், சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகி அரசியல் கட்சி ஒன்றில் அந்த நடிகர் இணையப் போவதாக பேச்சுக்கள் எழுந்துள்ளன.

சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் போனதால் தான் இப்படியொரு முடிவை நடிகர் எடுத்துள்ளார் என்றும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

நல்ல நடிகர்

நல்ல நடிகர்

சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பல படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளார் அந்த சின்சியரான நடிகர். ஆனால், அதிர்ஷ்டம் அவர் பக்கம் கொஞ்சம் கூட காத்து வீசாத நிலையில், அவர் நடிக்கும் படங்கள் எல்லாம் அட்டு ஃபிளாப் ஆகி அவரை ரொம்பவே பாடாய்படுத்தி எடுக்கிறது.

ராசியே இல்லை

ராசியே இல்லை

சினிமாவில் கடின உழைப்பு போட்டாலே ஜெயிக்கலாம் என்கிற நிலையை தாண்டி சில நடிகர்கள் நட்சத்திரங்களாக மாற அவர்களுக்கு இருக்கும் நல்ல ராசி தான் காரணம் என கோடம்பாக்கத்தில் பெரும்பாலானோரால் நம்பப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஒரு சில படங்கள் ஃபிளாப் ஆனாலே அந்த நடிகரையோ, நடிகையையோ ராசி இல்லாதவர் என முத்திரை குத்தி விடுகின்றனர்.

நடிப்புக்கு முழுக்கு

நடிப்புக்கு முழுக்கு

சமீபத்தில் வெளியான படங்களும் நடிகருக்கு பெரிய தோல்வியையே கொடுத்த நிலையில், புதிய பட வாய்ப்புகளும் முழுவதுமாக குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஒட்டுமொத்தமாகவே நடிப்புக்கு முழுக்கு போட்டு கிளம்பி விடலாம் என்கிற முடிவுக்கே நடிகர் வந்து விட்டார் என்றும் எந்தவொரு புதிய படத்தின் அறிவிப்பையும் அவர் சமீபமாக வெளியிடவில்லை என்கிற நிலையில், இப்படியொரு புயல் கிளம்பி உள்ளது.

அரசியலுக்கு போகிறார்

அரசியலுக்கு போகிறார்

மேலும், சிலர் அதெல்லாம் இல்லைங்க, அவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால், அவர் தான் எதையும் கமிட் பண்ணிக்கல. தீவிர அரசியல் சிந்தனை தனக்கு இருப்பதாக ஆழமாக நம்பத் தொடங்கிய அவர், சீக்கிரமே ஒரு பெரிய கட்சியில் இணைந்து அரசியல்வாதியாக மாறப் போகிறார் என்றும் பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன.

நடிகர் அமைதி

நடிகர் அமைதி

ஆனால், இதுதொடர்பாக இதுவரை நடிகர் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக உள்ளார். நாட்டை விட்டே வெளிநாட்டுக்கு போய் செட்டில் ஆகப் போகிறார் என்றும் பேச்சுக்கள் அடிபடத் தொடங்கி உள்ளன. சீக்கிரமே இந்த வதந்திகளுக்கு எல்லாம் நடிகர் ஒரு முற்றுப்புள்ளி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X