மீண்டும் மீண்டும் மூக்குடைப்பா?.. நம்பர் நடிகைக்கு நோ சொன்ன பாஸ் நடிகர்.. இப்படி ஆகிடுச்சே!

By Staff

சென்னை: டாப் நடிகரிடம் சமீபத்தில் உடைந்த மூக்கே இன்னமும் சரியாகாத நிலையில், பாஸ் நடிகரிடம் மீண்டும் சென்று மூக்கை உடைத்துக் கொண்டார் நம்பர் நடிகை என பரபரப்பு பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

உச்ச நடிகரின் ஜோடியாக நம்பர் நடிகை நடிக்க ஆரம்பித்த நிலையில், பாஸ் நடிகர் படத்தில் நடிக்க அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால், அப்போது அந்த நடிகருடன் நடிக்க முடியாது என வாய்ப்பை வேண்டாம் என உதறித்தள்ளி உள்ளாராம் நம்பர் நடிகை.

Popular actor rejects Number actress due to Tit for Tat?

திரும்பும் பக்கம் எல்லாம் அடி: நம்பர் நடிகைக்கு திருமணத்திற்கு பிறகு லைஃபே வேறலெவலில் மாறும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், திரும்பிய பக்கம் எல்லாம் மரண அடி விழுவதாக புலம்பி வருகிறார்.

வயதான நிலையில், அவர் நடிக்கும் படங்கள் எல்லாம் தொடர்ந்து ஃபிளாப் ஆகி வருகின்றன. மேலும், கோலிவுட்டில் எந்தவொரு முன்னணி நடிகரும் அந்த நடிகையை ஜோடியாக்க சமீப காலமாக விருப்பம் தெரிவிக்காதது நடிகையை வெகுவாக பாதித்துள்ளது.

டாட்டா காட்டிய டாப் நடிகர்: கணவரை வைத்து பெரிய முதலையை மடக்கி விடலாம் என நினைத்த அந்த நடிகைக்கு உனக்கும் டாட்டா உன் புருஷனுக்கும் டாட்டா என சொல்லி விட்டு விருட்டென வண்டியை எடுத்துக் கிளம்பி விட்ட டாப் நடிகரால் ஏற்கனவே மூக்கு பலமாக உடைந்துள்ளது.

Popular actor rejects Number actress due to Tit for Tat?

இந்நிலையில், எப்படியாவது பெரிய நடிகர் ஒருவரின் படத்தையாவது பிடித்து விட வேண்டும் என்கிற வெறியில் ஏகப்பட்ட வேலைகளை செய்து வந்தார் நடிகை.

முதலிடத்தை பறித்த போட்டி நடிகை: நம்பர் நடிகைக்கு போட்டியாக இருந்த சின்ன நம்பர் நடிகை பல ஆண்டுகளாக தனது முதலிடத்தை அந்த நடிகையிடம் விட்டுக் கொடுத்த நிலையில், தற்போது மீண்டும் தனது பொஷிஷனை சில பெரிய படங்களில் நடித்து பெற்று விட்டார்.

தனது முதலிடம் பறிபோன நிலையில், பயங்கர கடுப்பில் இருக்கும் நம்பர் நடிகை பிரம்மாண்ட இயக்குநரின் காலில் விழுந்தாவது வாய்ப்பை பெற்று விட முடிவெடுத்து விட்டார்.

சம்மதித்த இயக்குநர்: இப்படி அந்த நடிகை இதுவரை யார் காலிலும் விழுந்து வாய்ப்பு கேட்காத நிலையில், நம்மிடம் கேட்டு விட்டாரே என அந்த இயக்குநரும் அந்த நடிகையையே தனது அடுத்த படத்தில் நடிக்க வைத்து விடலாம் என்கிற முடிவுக்கே வந்து விட்டாராம்.

ஆனால், நடிகைக்கு இன்னொரு இடத்தில் இருந்து வந்த பெரிய சிக்கல் காரணமாக இந்த வாய்ப்பும் அதிரடியாக பறிபோகும் நிலை உள்ளதாக கூறுகின்றனர்.

Popular actor rejects Number actress due to Tit for Tat?

அப்போ வேணாம்னு சொன்னாரே: நடிகரிடம் இவரை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யலாமா என இயக்குநர் லேசாக காது கடிக்க பாஸ் நடிகர் கடுப்பாகி விட்டார் என்கின்றனர்.

உச்ச நடிகருக்கு ஜோடியாக நடித்த அடுத்த நொடியே என் படத்தில் நடிக்க வாங்கன்னு கூப்பிட்டேன். அப்போ வேணாம்னு சொல்லிட்டு இப்போ இப்படி கெஞ்சுறாரா அதுவும் என்னிடம் கேட்காமல், உங்களிடமே முறையிட்டு இருக்காரே அப்போ நீங்களே முடிவு செஞ்சுக்கோங்க என நடிகர் இயக்குநரிடம் சொல்லிவிட இயக்குநர் தர்ம சங்கடத்தில் ஆழ்ந்து விட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.

நடிகர் இப்படி சொன்ன பிறகும் அந்த நடிகையை ஹீரோயினாக ஒப்பந்தம் பண்ணினால் சரி வராது என நினைத்த இயக்குநர் வேறு சில நடிகைகளை தேர்வு செய்யும் முடிவில் உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X