அக்காவுக்கு கிடைக்குது.. நமக்கு ஒண்ணும் செட் ஆகலையே.. விரக்தியில் அந்த முடிவை எடுத்தாரா நடிகை?

By Staff

சென்னை: அக்கா நடிகைக்கு கிடைப்பது போல நமக்கு ஒன்றும் செட் ஆகவில்லையே என ரொம்பவே விரக்தியில் உள்ளாராம் அந்த வாரிசு நடிகை.

பெரிய நடிகரின் மகள்கள் இருவருமே சினிமாவில் நடிகைகளாக அறிமுகமாகி உள்ளனர்.

முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து அக்கா நடிகை பல படங்களில் நடித்து வருகிறார். அதே போல காதல் வாழ்க்கையும் ஒன்றுக்கு இரண்டாக அவருக்கு அமைந்துள்ளது.

தங்கை நடிகை

தங்கை நடிகை

பெரிய பொண்ணை போலவே அடுத்த பொண்ணையும் பெரிய நடிகர் படத்தில் அறிமுகம் செய்து வைத்தார் அந்த பிரபல நடிகர். ஆனால், தங்கச்சிக்கு நடிப்பும் சரியாக வரவில்லை என்றும் அவர் நடிக்கும் படங்களும் ஓட மாட்டேங்கிறது என்றும் ஏகப்பட்ட புகார்கள் குவிந்த நிலையில், அதிக அளவில் அவரை யாரும் புக் செய்ய மறுத்து வருகின்றனர்.

அந்த கெத்து வேறு

அந்த கெத்து வேறு

எங்கே சென்றாலும், நான் யாரு தெரியுமா? யாரோட பொண்ணு தெரியுமா என அதிகாரத்தை பறக்கவிட்டு நடிகை கெத்துக் காட்டி வருவதால், பல இயக்குநர்களே கடுப்பாகி உள்ளனர். அதன் காரணமாக கூட அய்யோ, அந்த நடிகையா வேண்டாம்பா என ஒதுக்கி விடுகின்றனர். முடிந்தவரை தனக்கு செட் ஆகும் சர்க்கிளிலேயே கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார் தங்கை நடிகை.

காதலும் அக்காவுக்கு டபுள்

காதலும் அக்காவுக்கு டபுள்

சினிமாவில் மட்டுமின்றி காதல் வாழ்க்கையிலும் ஒன்று போனால் இன்னொன்று உடனே வரும் அளவிற்கு அக்காவின் இமேஜ் உச்சத்தில் இருக்கிறது. பெரிய நடிகரின் படத்திலும் தற்போது நடித்து வருகிறார். அந்த படம் வெளியானால், அவரது ரேஞ்சே வேறலெவலில் மாறிவிடும் என்கின்றனர்.

எதுவுமே ஓடவில்லை

எதுவுமே ஓடவில்லை

கம்மி பட்ஜெட்டில் ஓடிடிக்கு நடித்துக் கொடுத்தாலும், நடிகையின் படங்கள், வெப்சீரிஸ் என்று எதுவுமே ஓடாததால் ரொம்பவே விரக்தி அடைந்துள்ளாராம் தங்கை நடிகை. புதிதாகவும் படங்கள் ஏதும் அவரை தேடி வராத நிலையில், அப்படியொரு முடிவை எடுத்து விட்டதாக பரபரப்பு பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

நடிப்புக்கு முழுக்கு

நடிப்புக்கு முழுக்கு

தானாக வாய்ப்புத் தேடி எங்கும் செல்லும் மனநிலையில், இல்லாத அந்த நடிகை இனிமேல் நடிக்கவே போவதில்லை என்கிற முடிவுக்கே வந்து விட்டதாக திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன. சமீபத்தில், நடிகையை அணுகி சின்ன பட்ஜெட்டில் படம் ஒன்று பண்ணுகிறோம். நல்ல சப்ஜெக்ட் என ஒரு இயக்குநர் அணுகிய நிலையில், இப்போதைக்கு நடிப்பதில்லை எனக் கூறி விட்டாராம். பெரிய படங்கள் மட்டும் வந்தால் தான் நடிப்பேன் என்கிற முடிவில் உள்ளாரா? அல்லது நடிப்பையே விட்டு விடப் போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X