டாப் நடிகரின் படத்தை பிடிக்க போட்டிப் போடும் வாரிசு நடிகை.. தயாரிப்பு தரப்பிடமே டைரக்ட் டீல்?
சென்னை: டாப் நடிகரின் அடுத்த பட அறிவிப்பு வெளியாக தாமதம் ஆக காரணமே அதன் நடிகர்களே இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என்பது தான் என்கின்றனர்.
இயக்குநர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் சிக்கிய நிலையில், நடிகர்களை தயாரிப்பு தரப்பு வலை வீசி தேடி வருகிறதாம்.
நடிகைக்கான ஸ்பேஸ் இருப்பதை அறிந்து கொண்ட வாரிசு நடிகை இந்த வாய்ப்பை நழுவ விட்டு விடக் கூடாது என தயாரிப்பு தரப்பிடமே நேரடியாக டீல் பேசி உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரபலத்தின் வாரிசு
பிரபல நடிகரின் மகளான அந்த வாரிசு நடிகை சமீபத்தில் பிரம்மாண்ட ஹீரோ படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் இப்படித்தான் சிபாரிசு மூலமாக பெற்றார் எனக் கூறுகின்றனர். இந்நிலையில், டாப் நடிகரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பை எப்படியாவது கைவசப்படுத்த வாரிசு நடிகை வேறலெவலில் இறங்கி வேலை பார்த்து வருவதாக கூறுகின்றனர்.

சின்ன நம்பர் நடிகை
மாஸ் நடிகருடனான படத்தின் ஷூட்டிங்கே இன்னும் சில மாதங்களில் முடிவடைய உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே தனது போர்ஷன் முடிந்து விடும் என்றும் அந்த இயக்குநர் தான் இப்போ இல்லையே, நான் நடிக்கிறேன் என நடிகர் தரப்பிலும் அணுகி வருகிறாராம். ஆனால், அதற்கு போட்டியாக வாரிசு நடிகை தயாரிப்பு தரப்பிடம் தற்போது நடிகருக்கு ஜோடியாக தான் நடிக்க ரெடி என்கிற விஷயத்தை சொல்லி வாய்ப்புக் கேட்டு இருப்பதாக பேச்சுக்கள் கசிந்துள்ளன.

வயதான நடிகர்களுடன்
சமீப காலமாக அப்பாவுக்கு போட்டியாக நடித்து வரும் வயதான நடிகர்களுடன் ஜோடி போட்டு கூச்சமே இல்லாமல் எல்லை மீறிய கவர்ச்சி குலுக்கல் ஆட்டத்தை அந்த நடிகை போட்டு வருவதாக கடும் விமர்சனங்கள் கிளம்பி உள்ளன. இந்நிலையில், எப்படியாவது அந்த பெயரை மாற்ற வேண்டும் என்பதற்காகவும் மீண்டும் கோலிவுட்டில் தனது இடத்தை பிடிக்க வேண்டும் என நினைத்து தான் நடிகை இப்படியொரு விஷயத்தை செய்து வருகிறார் என்கின்றனர்.

தயாரிப்பு தரப்பிடமே டீல்
ஏற்கனவே அந்த டாப் நடிகருடன் ஒரு படத்தில் நடிகை நடித்துள்ளார். ஆனால், அந்த படம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு செல்லவில்லை. ஆனாலும், இந்த முறை வாய்ப்பை நழுவ விட்டு விடக் கூடாது என்கிற முடிவில் இருக்கும் வாரிசு நடிகை தயாரிப்பு தரப்பிடமே டைரக்ட்டாக போன் போட்டு டீல் பேசி வருகிறாராம்.

சம்பள விஷயத்தில் தாராளம்
மற்ற ஹீரோயின்களுக்கு கொடுக்கும் சம்பளத்தில் பாதியை தனக்கு கொடுத்தால் கூட போதும் என்றும் இந்த படம் தனக்கு ரொம்பவே அவசியமானது என தயாரிப்பு தரப்பினரிடம் நடிகை பேசி வருவதாக கூறுகின்றனர். ஏற்கனவே அப்பா நடிகரை வைத்து தயாரிப்பு நிறுவனம் பெரிய படத்தை உருவாக்கி வரும் நிலையில், நடிகையின் டீலுக்கு சம்மதம் தெரிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கோடம்பாக்கத்தில் ஹெவியான பேச்சுக்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

இயக்குநர் சாய்ஸ்
ஆனால், இதற்கிடையே இந்த படத்தில் டாப் நடிகருக்கு ஜோடியே இல்லாமல் படத்தை இயக்கலாமா என்கிற திட்டத்தில் இயக்குநர் இருப்பதாகவும் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. இரு முன்னணி நாயகிகள் போட்டி போட்டு வரும் நிலையில், இறுதியில் என்ன ஆகப் போகிறது என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











