Don't Miss!
- News
லட்டு எல்லாம் பழசு.. பிரசாதமாக "பர்கர், சாண்ட்விச்" தரும் சென்னை கோயில் -இன்னும் பல விசயம் இருக்கு
- Sports
"ஒரே கல்லில் 2 மாங்காய்" ஒரே இன்னிங்ஸில் தோனி - சச்சின் சாதனை தகர்த்த ரிஷப் பண்ட்.. எப்படி தெரியுமா
- Finance
ஒரு கப் டீ 20, சேவை கட்டணம் ரூ.50.. மொத்த கட்டணம் ரூ.70.. சதாப்தி ரயில் பயணிகள் ஷாக்!
- Automobiles
டாடாவிற்கு பக்கத்துல கூட யாரும் வர முடியாது! மாருதிலாம் சீன்லயே இல்ல! விஷயத்தை கேக்கும்போதே ஆச்சரியமா இருக்கு!
- Lifestyle
இந்த வயசுக்கு மேல ஆண்களுக்கு இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு ரொம்ப அதிகமாம்.. ஜாக்கிரதை!
- Technology
Samsung: கொஞ்ச காசு இப்போ கட்டுங்க, மிச்சம் 12 மாசம் கழிச்சு கொடுங்க.. ஸ்மார்ட்TV மீது சலுகை!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
இதுக்கு மேல வேண்டாம்.. மனைவி போட்ட ஆர்டர்.. நடிகையை நைஸாக கழட்டி விட்டாரா இளம் மாஸ் ஹீரோ?
சென்னை: இளம் மாஸ் நடிகருக்கு ஜோடியாக அடுத்தடுத்து இரண்டு ஹிட் படங்களில் நடித்த அந்த நடிகையுடன் நெருக்கம் ஓவராகி விடப் போகுது என்பதால் உஷாரான மனைவி கணவருக்கு ஸ்ட்ரிக்ட்டான ஆர்டர் போட்டுள்ளதாக பேச்சுக்கள் எழுந்துள்ளன.
படத்தின் ரிலீசுக்கு பிறகு நடிகையை எதிலுமே இளம் மாஸ் நடிகர் கமிட் பண்ணிக் கொள்ளாததற்கு அதுதான் காரணம் என்கின்றனர்.
அடுத்த அடுத்த வெற்றி போதையால் அந்த நடிகர் தனியாக ஏதாவது பார்ட்டி கொண்டாடி விடப் போகிறார் என்கிற அச்சம் மனைவிக்கு அதிகமாகவே உள்ளதாகக் கூறப்படுகிறது.
என்னப்பா ஏகே 62 படத்தின் மொத்த கதையையும் சொல்லிட்டிங்க...அஜித்தின் ரோல் இதுதானா?

பிரியமான நடிகை
பக்கத்து தேசத்தில் இருந்து அந்த பிரியமான நடிகையை இளம் மாஸ் ஹீரோவுக்கு ஜோடியாக மாற்ற அழைத்து வந்தனர். நடித்தால் டாப் ஹீரோயின்களுடன் தான் நடிப்பேன் என ஃபிளாப் படங்களை கொடுத்து வந்த அந்த இளம் மாஸ் நடிகருக்கு பிரியமான நடிகை காலடி எடுத்து வைத்தவுடன் அடுத்தடுத்து வெற்றிகளாக குவிந்து வருகின்றன.

லக்கி சார்ம்
அந்த நடிகையுடன் இணைந்து நடித்த முதல் படமே ஹிட் அடித்த நிலையில், அடுத்த படத்திலும் அதே ஹீரோயினை புக் பண்ணி விட்டார் இளம் மாஸ் நடிகர். நடிகையும் ஷூட்டிங் மற்றும் நிகழ்ச்சிகள் என பல இடங்களில் நடிகருடன் ரொம்பவே நெருக்கம் காட்ட ஆரம்பித்து விட்டாராம். இந்த தகவல்களை கூடவே இருக்கும் சிலர் நடிகரின் மனைவியின் காதுகளில் போட பிரச்சனை கிளம்பி விட்டதாம்.

பரவும் கிசுகிசு
மேலும், நடிகருடன் தனியாக பல பார்ட்டிகளுக்கும் நடிகை சென்று வருகிறார் என்றும் ஏகப்பட்ட கிசுகிசுக்கள் கிளம்பிய நிலையில், அனைத்தையும் கவனித்த நடிகரின் மனைவி, இப்படியெல்லாம் தேவையில்லாத பஞ்சாயத்தில் தனது கணவர் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக அதிரடியாக ஒரு முடிவை எடுத்துள்ளாராம்.

மனைவியின் ஆர்டர்
இந்நிலையில், இனிமேல் அந்த நடிகையுடன் ஜோடி போட்டு நடிக்க வேண்டாம் என்றும், நடிகையை எந்த விழாவுக்கும் அழைக்க வேண்டாம் என்றும் மனைவி அதிரடியாக போட்ட ஆர்டரை நடிகர் பின் பற்றி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஏற்கனவே அந்த விருது நடிகை உடன் தொடர்ந்து நடித்த படங்கள் ஹிட்டான போதும் இதே வேலையை தான் அவரது மனைவி பார்த்தார் என்றும் கூறப்படுகிறது.

முக்கியத்துவம் இல்லை
இப்படியொரு பேச்சு போய்க் கொண்டிருக்க இன்னொரு புறம் படத்துக்கு முந்தைய விழாவில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அந்த இளம் நடிகைக்கு அதிக முக்கியத்துவத்தை அந்த ஹீரோ கொடுத்தது தான் நடிகையை கோபமடைய செய்ததாகவும், அதன் காரணமாக அவராகவே பட ரிலீஸ் மற்றும் படத்தின் வெற்றி விழா உள்ளிட்டவற்றில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.