அந்த பிட்டு சீன் வந்தா நம்ம படம் ஓடாது.. ஹீரோயினுக்காக இறங்கி வேலை செய்த ஒல்லி நடிகர்.. செம ஷாக்?
சென்னை: ஒல்லி நடிகரின் படத்தில் உருப்படியான ரோலில் நடித்திருக்கும் அந்த பால் டப்பா நடிகை ஏற்கனவே ஆரம்பத்தில் நடித்த பலான படத்தின் காட்சிகள் தற்போது வெளியானால் தனக்குத் தான் பிரச்சனை என நினைத்துக் கொண்டிருக்கையில், உன் பிரச்சனை உனக்கு, இப்போ என் பிரச்சனை எனக்கு என நடிகர் களமிறங்கி செம சம்பவத்தை செய்து விட்டார் என பகீர் கிளப்பி உள்ளனர்.
ஹீரோயின்கள் ஆரம்பத்தில் வாய்ப்புக் கிடைக்க ஏகப்பட்ட வேலைகளை பார்ப்பது வழக்கம் தான். ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் முன்னணி நடிகையாக மாறிவிட்டால் தங்கள் இமேஜ் பற்றி யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். தான் நடித்த படம் கடைசி வரை ரிலீஸ் ஆகக் கூடாது என வேண்டிக் கொண்டிருந்த நடிகைக்கு திடீரென ஷாக் கொடுக்கும் விதமாக அவரது பெரிய படம் வெளியாகும் முன்னதாக அதிர்ச்சி வைத்தியம் காத்திருந்தது.

அழுது புலம்பிய நடிகை: அதனால், என்ன செய்வது என்றே தெரியாமல் நடிகை அழுது புலம்பி அனைத்து விஷயத்தையும் அந்த நடிகரிடம் சொல்லி விட்டாராம். பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த படம் இப்போதைக்கு வெளியாக வேண்டாம் என்றும் நடிகை அந்த படத்தின் தயாரிப்பாளரிடம் கெஞ்சி கேட்டும் அதெல்லாம் முடியாது என படத்தையே நடிகையின் பெயரில் புரமோட் செய்துள்ளனர்.
உஷாரான ஒல்லி நடிகர்: நடிகையின் பிரச்சனையை விட இந்த விவகாரத்தில் தனக்குத் தான் பெரிய ஆப்பு காத்திருக்கிறது என நினைத்த அந்த ஒல்லி நடிகர் தனக்கு இருக்கும் பெரிய செல்வாக்கை பயன்படுத்தி எவிடென்ஸே இல்லாமல் படக்குழுவினருக்கு பலத்த அடி கொடுத்து நடிகையையும் காப்பாற்றி விட்டு இருக்கிறார் என திடீரென கோடம்பாக்கம் முழுவதும் தீயாக இந்த கிசுகிசு பரவி வருகிறது.
பெரிய சம்பவம்: நடிகைக்கு எந்தவொரு பாதிப்பும் வந்து விடாமல் பார்த்துக் கொண்டதோடு கடைசி நேரத்தில் தன்னுடைய படத்துக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் நடிகர் பெரிய சம்பவம் செய்திருக்கிறார் என்றும் அதே நேரத்தில் தற்போது அந்த பிரச்சனை நடிகையின் தலைமீது விழுந்திருப்பது தான் அடுத்த அதிர்ச்சியான செய்தி என்றும் எதுவும் தெரியாமல் சிக்கித் தவிக்கும் நடிகை என்ன செய்வதென்றே தெரியாமல் இருக்கிறார் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











