காதலை அம்பலப்படுத்த தயங்கும் நடிகர்.. சண்டையிட்ட நடிகை.. நைஸாக கழட்டி விட திட்டமா?

By Staff

சென்னை: கோலிவுட்டின் இளம் காதல் ஜோடிகள் ஒன்று ரகசியமாக சுற்றித் திரிந்து வரும் நிலையில், இருவருக்கும் இடையே சமீபத்தில் சண்டை ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த காதலர் தினத்துக்காகவது காதலை வெளிப்படுத்தி விடலாம் என நடிகை கேட்க, அந்த நடிகர் நோ சொல்லி விட்டாராம். அதன் வெளிப்பாடாகவே இன்னொரு மூத்த நடிகருக்கு நடிகை காதலை சொல்லும் படியான போட்டோவை பகிர்ந்தார் எனக் கூறப்படுகிறது.

மேலும், சமீபத்தில் வெளியே சுற்றும் போது இருவரும் மீடியாவிடம் சிக்கிய நிலையில், நடிகை மட்டும் முகத்தைக் காட்டி சென்றதும், நடிகர் தன்னை மறைத்துக் கொண்டு சென்றதும் இருவருக்கும் இடையே சண்டை ஏற்படக் காரணம் என்கின்றனர்.

ஏகப்பட்ட நடிகைகளுடன் காதல்

ஏகப்பட்ட நடிகைகளுடன் காதல்

அந்த நடிகர் ரொம்பவே சாக்லெட் பாய் போல இருப்பதால் நடிகைகள் எளிதில் அந்த நடிகரின் அழகில் மயங்கி விழுந்து விடுகின்றனர். நடிகர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து சொதப்பினாலும், காதல் மேட்டரில் நடிகர் எப்பவுமே கில்லியாக செயல்பட்டு வருகிறார் என கோடம்பாக்கத்தில் பெரும் பேச்சுக்கள் நிலவி வருகின்றன.

புதுசு கண்ணா புதுசு

புதுசு கண்ணா புதுசு

நடிகரின் வலையில் பல முன்னணி நடிகைகள் சிக்கி காதலித்து விட்டு, பின்னர் நடிகரை விட்டு இன்னொரு நடிகரை திருமணம் செய்து கொள்வதை வாடிக்கையாக கொண்டு வரும் நிலையில், புதிதாக அந்த நடிகருடன் அழகான நடிகை ஒருவர் காதலில் விழுந்துள்ளார்.

இதுக்கு பேரு தான் சீக்ரெட்

இதுக்கு பேரு தான் சீக்ரெட்

நடிகையும் அந்த நடிகரும் பல இடங்களுக்கு ஒன்றாக சென்று வருவதுமாக இருந்தாலும், இதுவரை இருவருமே தங்கள் காதலை வெளிப்படுத்தவே இல்லை. ஆனால், இருவரும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்து வருகின்றனர் என பலரும் பேசி வருவதை அறிந்த பின்னரும் தங்களின் காதலை ரகசியமாகவே பாதுகாத்து வருகின்றனர்.

காதலர் தினத்துக்கு சொல்லிவிட

காதலர் தினத்துக்கு சொல்லிவிட

சமீபத்தில் கடந்து சென்ற காதலர் தினத்தில் நம்முடைய காதலை வெளிப்படுத்தி விடலாம் என்றும் சமீப காலமாக முன்னணி நடிகைகள் திருமணம் செய்து கொள்வதை போலவே நாமும் ராயல் வெட்டிங் செய்து கொள்ளலாம் என நடிகை ஆசைப்பட்டு தனது காதலரிடம் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால், நடிகர் அதற்கு இப்போ வேணாமே.. அடுத்த வருஷம் கண்டிப்பா சொல்லிடலாம் என தள்ளிப் போட்டு நடிகையை டென்ஷன் ஆக்கி உள்ளார்.

வெடித்த சண்டை

வெடித்த சண்டை

இந்நிலையில், சமீபத்தில் இருவரும் வெளியே சென்ற தகவல் நடிகை தரப்பு மூலமாக மீடியாவுக்கு வெளிச்சப்படுத்தப்பட்ட நிலையில், நடிகை ரொம்பவே கூலாக தைரியமாக வந்து போஸ் கொடுத்திருக்கிறார். ஆனால், இந்த காதல் விவகாரத்தை வெளியே தெரிய விடாமல் இதுவரை பார்த்துக் கொண்ட நடிகர் தனது முகத்தை மறைத்துக் கொண்டு வந்ததை அறிந்த நடிகை, ஏன் அப்படி பண்ண என கேட்க, இருவருக்கும் இடையே சண்டை ஸ்டார்ட் ஆகி உள்ளது என பகீர் கிளப்பும் தகவல்கள் லீக் ஆகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X