மரண அடி கொடுக்கும் மாஸ் நடிகர்.. பிரைட் நடிகரிடம் அடைக்கலம் அடைந்த தமாஸ் நடிகர்.. மனைவி சப்போர்ட்!
சென்னை: மாஸ் நடிகருக்கு எதிராக தமாஸ் நடிகர் களமிறங்கியதில் இருந்தே மாஸ் நடிகர் சைடில் இருந்து மரண அடி கொடுக்கத் தொடங்கி விட்டனர் என்கின்றனர். அதன் காரணமாகவே தமாஸ் நடிகரின் கடைசி படம் சரியாக ஓடவில்லையாம். கிடைத்த மேடையை பயன்படுத்தி ஒரு அழுகாச்சி டிராமாவையும் போட்டு விட்டார்.
ஏற்கனவே தமாஸ் நடிகரின் ரசிகர்கள் பிரைட் நடிகரை வம்பிழுத்து வந்த நிலையில், இவரையும் விட்டு விட்டால் நமக்கு அடுத்தடுத்து நஷ்டம் தான் மிஞ்சும் என்பதால் அடைக்கலம் தேடி சரண்டர் ஆகிவிட்டார் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

எப்படியாவது நஷ்டம் வராமல் இருக்க வேண்டும் என்பதற்காக டாப் நடிகரின் மனைவியின் சப்போர்ட்டையும் தமாஸ் நடிகர் பெற்றுள்ளார் என்கின்றனர்.
போட்டா போட்டி: சினிமாவில் அந்த காலத்தில் இருந்தே ஒரு பெரிய நடிகர் படத்தில் நடித்த ஹீரோயினை கூட இன்னொரு போட்டி நடிகர் படத்தில் அனுமதிக்க விடாத சூழல் இருந்தது. படத்தில் கருத்துச் சுதந்திரம், வீர வசனம் எல்லாம் பேசினாலும் ரியாலிட்டியில் போட்டா போட்டி காரணமாக ஏகப்பட்ட பாலிட்டிக்ஸ் நடந்துக் கொண்டு தான் இருக்கின்றன. இன்றளவும் சினிமா துறை திறந்த புத்தகமாக இருக்காமல் பல போட்டா போட்டி சர்ச்சைகளுக்கு மத்தியில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது.
மாஸ் நடிகரால் சிக்கல்: தேவையில்லாமல் மாஸ் நடிகருக்கு எதிராக களமிறங்கியது தவறு என்பதை லேட்டாகவே தமாஸ் நடிகர் புரிந்துக் கொண்டாராம். ஆனால், மாஸ் நடிகர் சைடில் இருந்து தமாஸ் நடிகரை இனிமேல் மன்னிக்கவே முடியாது என்கிற அளவுக்கு விஷயம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், தொடர்ந்து போட்டு பொளக்க முடிவு கட்டிவிட்டனர் என்கின்றனர்.
பிரைட் நடிகரிடம் தஞ்சம்: இந்நிலையில், அந்த பெரிய நடிகரின் படையை சமாளிக்க வேண்டும் என்றால் தன்னிடம் இருக்கும் சிறு படை மட்டும் போதாது என உணர்ந்துக் கொண்ட புத்திசாலி நடிகர் சீனியர் நடிகரான பிரைட் நடிகரின் உதவியை நாடி சென்றிருக்கிறார். ஏற்கனவே பிரைட் நடிகர் மற்றும் மாஸ் நடிகர் இடையே பனிப்போர் நிலவி வரும் நிலையில், நான் இருக்கேன் பார்த்துக்கலாம் என மொத்த சப்போர்ட்டையும் பிரைட் நடிகர் கொடுத்து விட்டார் என்கின்றனர்.
டாப் நடிகரின் மனைவி: மேலும், பிரைட் நடிகரின் மனைவியும் டாப் நடிகரின் மனைவியும் கூட தங்களின் சப்போர்ட்டை ஒருமித்தமாக தமாஸ் நடிகருக்கு வழங்கியுள்ளார்களாம். தனக்கு எதிராக பெரிய கூட்டணியையே ஒன்று திரட்டி நடிகர் நிற்பதை பார்த்து மாஸ் நடிகருக்கு மேலும் கோபம் தான் ஜாஸ்தியாகி உள்ளதாக கூறுகின்றனர். இந்த பஞ்சாயத்து எப்போ எங்கே போய் முடியுமோ? அல்லது பயங்கரமாக வெடிக்குமோ தெரியவில்லை என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications











