அப்பா டாபிக் மட்டும் வேண்டாம்.. ஆரம்பத்திலேயே எண்ட் கார்டு போடும் வாரிசு.. ரொம்ப அப்செட்?
சென்னை: சீக்கிரமே சினிமாவில் மாஸ் நடிகரின் வாரிசு என்ட்ரி ஆகவுள்ள நிலையில், தனது படத்துக்கான புரமோஷன் வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார். ஆனால், அவருக்கு பெரிய தலைவலியாக வந்து நிற்பதே அவரது அப்பா டாபிக் தான் என்கின்றனர்.
சிறு வயது முதலே இன்ஸ்பிரேஷனாக இருந்த அப்பாவை சமீப காலமாக சுத்தமாக பிடிக்காத மன நிலையில் தான் மகன் உள்ளார் என்கின்றனர். அதற்கு காரணம் அம்மாவுக்கு அப்பா செய்த மிகப்பெரிய துரோகம் தான் எனக் கூறுகின்றனர்.

அப்பா - அம்மா பஞ்சாயத்து தனது சினிமா வாழ்க்கையை பாதித்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் வாரிசு தனது படத்தை புரமோட் செய்தாக வேண்டிய சூழலிலும் உள்ளார் என்பதால் ஆரம்பத்திலேயே அப்பா டாபிக்கை அவாய்ட் செய்ய ஆரம்பித்து விட்டார் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
சினிமாவில் என்ட்ரி: சிறு வயதிலேயே சினிமா பிரபலத்தை ருசித்த நிலையில், குடும்பம் மொத்தமும் சினிமா பிரபலங்கள் என்பதால் வாரிசுக்கும் சினிமா வாடை ஹெவியாக அடிக்க அவரும் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்துள்ளார். தயாரிப்பு நிறுவனத்துக்கு இருந்த பண நெருக்கடி காரணமாக ரொம்பவே கால தாமதமாக முதல் படத்தை பல தடைகளை கடந்து எடுத்து முடித்து ரிலீஸுக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் வாரிசு.
அப்பாவால் பிரச்னை: அப்பாவின் தயவுடன் சினிமாவுக்கு வரக்கூடாது என்கிற முடிவில் தீவிரமாக இருந்து வரும் வாரிசு தொடர்ந்து அப்பாவின் மிகப்பெரிய வளர்ச்சி குறித்தோ, அவருடனோ இருப்பதை தவிர்த்து வருகிறார். தனது அம்மாவையும் குடும்பத்தையும் தான் காப்பாற்ற வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் வாரிசு தனது முதல் படத்தை எப்படியாவது வெற்றிப் படமாக மாற்ற வேண்டும் என்றும் போராடி வருகிறார். ஆனால், அவருக்கு பெரிய தலைவலியாக அப்பாவே மாறியுள்ளார் என்றும் எங்கே போனாலும், முதல் கேள்வியே அப்பா பற்றி வருவதால் ரொம்பவே அப்செட்டில் உள்ளார் என்கின்றனர்.
அவர பத்தி மட்டும் கேட்காதீங்க: தனது படத்தை புரமோட் செய்ய முடிவெடுத்துள்ள வாரிசு புரமோஷன் நிகழ்ச்சிகளில் கண்டிப்பா யாருமே அவரை பத்தி மட்டும் கேட்காதீங்க, பேசாதீங்க என்பதை ரெக்வஸ்ட்டாக வைத்து வருகிறார் என பேச்சுக்கள் புகையத் தொடங்கியுள்ளன. ஆனால், அனைவரும் வாரிசுக்கு முன்பாக நீட்டும் முதல் கேள்வியே அவர் அப்பா பற்றித்தான் என்பதால் எப்படி இதை சமாளிக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications