நடிகையுடன் ஜாலியாக சம்மர் டூர் கிளம்பிய வாரிசு நடிகர்.. அடுத்த படத்தை விட லவ்வுதான் முக்கியமாம்?
சென்னை: ஒரு படத்துக்காக 2 வருடத்துக்கு மேல் கஷ்டப்பட்டு உழைத்து வெற்றியை பெற்ற அந்த வாரிசு நடிகர் தற்போது காதலில் விழுந்து காதலியே கதியென கிடப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. நடிகரின் மேனேஜரை தொடர்பு கொண்டு அடுத்த படத்தை ஆரம்பிக்க தயாரிப்பாளர்கள் போட்டிப் போட்டு வரும் நிலையில், மேனேஜர் என்ன சொல்வதென்றே தெரியாமல் திணறி வருகிறாராம்.
சினிமா பிரபலங்களின் வாரிசுகளுக்கு முதல் படம் மட்டுமில்லை, எத்தனை படங்கள் ஃபிளாப் கொடுத்தாலும், அடுத்தடுத்து அவர்களை தூக்கி நிறுத்த சினிமா துறையில் பலர் காத்துக்கிடக்கின்றனர்.

ஆரம்பத்தில் இருந்தே கிடைத்த வாய்ப்பை எல்லாம் வீணடித்து வந்த நடிகருக்கு கடைசி வாய்ப்பாக வாரிசுகளை வளர்த்துவிடும் டைரக்டர் சிக்க அவரும் தரமான படத்தை வாரிசுக்கு கொடுத்துவிட்டார். அதுமட்டுமின்றி வாரிசுக்கு ஏத்த ஜோடி ஒன்றையும் செட் பண்ணி விட்டது தான் இப்போ சிக்கலாக மாறியுள்ளது.
நடிகையுடன் வாரிசு நடிகருக்கு காதல்: வாரிசு நடிகரை விட அந்த நடிகை கொஞ்சம் வயது மூப்பானவர் என்று சொல்லப்பட்டாலும், ஜோடியாக நடித்த போதே இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி, பயோலஜி எல்லாம் பக்காவாக பற்றிக் கொண்டது எனக் கூறுகின்றனர். படப்பிடிப்பிலேயே தாமதம் ஏற்பட காரணமே இருவரும் சில வாரங்கள் ஷூட்டிங்கிற்கு லீவு விட்டு எஸ்கேப் ஆகிவிட்டனர் என்றும் கூறப்பட்டது.

தீவில் ஜாலி டூர்: சம்மர் வெயிலை சமாளிக்க முடியாமல் இருந்த நடிகை ஜாலியாக தீவு ஒன்றுக்கு சுற்றுலா செல்கிறேன், நீயும் வரியா என நடிகரை கேட்க, உடனடியாக ஓகே சொல்லிவிட்டு டிக்கெட் போட்டு பறந்துவிட்டார் என்கின்றனர். நடிகையுடன் டேட்டிங் சென்று வந்த வாரிசு நடிகர் இப்போ திருமணத்துக்கு முன்பாகவே ஹனிமூனுக்கு சென்றுவிட்டாரே என்றும் கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கத் தொடங்கி விட்டனர்.
அடுத்த படம் எப்போ?: தொடர்ந்து வெற்றி கிடைக்காமல் அவதிப்பட்ட நடிகருக்கு ஒரு பெரிய வெற்றிக் கிடைத்த நிலையில், சினிமாவில் அடுத்தக் கட்டத்துக்கு உயர்வார் என பார்த்தால், நடிகையுடன் ஜாலியாக டூர் அடிக்க கிளம்பிட்டாரே என நடிகரின் மேனேஜரே டென்ஷன் ஆகும் அளவுக்கு நடிகரின் செயல் உள்ளதாம். இப்போதைக்கு ரெஸ்ட் வேண்டும் என்றும் லைஃபை என்ஜாய் பண்ணிட்டு வரேன், அதன் பிறகு அடுத்த படம் பற்றி பேசலாம் என்று சொல்லிவிட்டாராம்.


Click it and Unblock the Notifications