மாஸ் நடிகர் மகனுக்கு உதவியது டாப் நடிகர் தானாம்.. அப்போ மனைவியை நடிகர் நிஜமாவே பிரிஞ்சிட்டாரா?

By Staff

சென்னை: மாஸ் நடிகர் மகனுக்கு அந்த பெரிய நிறுவனத்தில் பட வாய்ப்பு கிடைக்க காரணமே டாப் நடிகர் தான் என்கிற பரபரப்பு தகவல் கோடம்பாக்கத்தில் புயலை கிளப்பி உள்ளது.

தமாஸ் நடிகர் படத்தை பார்க்க சென்னை வந்ததில் இருந்தே மாஸ் நடிகரின் மனைவி பல பிரபலங்களை சந்தித்து தனது மகனுக்காக ஏகப்பட்ட வேலைகளை தனியாளாக செய்து வந்ததாகவும் எதிலுமே அப்பாவின் நிழல் வந்து விடக் கூடாது என்றும் அவருடைய உதவியால் தான் தனது மகனுக்கு வாய்ப்பு கிடைத்தது என இருக்கக் கூடாது என்பதில் நடிகரின் மனைவி தெளிவாக இருந்துள்ளார் என்கின்றனர்.

Popular actor son gets help from dads competive star actor?

தமாஸ் நடிகரை வைத்து படம் இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று அது சரியாக அமையாத நிலையில், இன்னொரு பிரபல நடிகர் மாஸ் நடிகர் மகன் படத்தில் நடிக்க சம்மதித்து விட்டார் என்றும் கூறுகின்றனர்.

டாப் நடிகர் செஞ்ச உதவி: அந்த தயாரிப்பு நிறுவனத்தில் அடுத்து நடிக்க உள்ள டாப் நடிகரிடம் மாஸ் நடிகரின் மனைவி நட்பு ரீதியாக உதவி கேட்ட நிலையில், அனைத்தையும் தனது மேனேஜர் மூலமாகவே வைத்து செய்ய சொல்லியதே டாப் நடிகர் தான் என்கின்றனர்.

இதன் மூலமாகவே மாஸ் நடிகரை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்றது வதந்தி அல்ல நிஜமான செய்தியாகவே இருக்குமா? என்கிற கேள்வி தான் தற்போது கோடம்பாக்கத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் மாஸ் நடிகர் வரவில்லை என்றாலும், அவரது லெஃப்ட் ஹேண்ட் அல்லது ரைட் ஹேண்ட் என யாராவது வந்திருப்பார்கள். ஆனால், யாருமே இல்லாமல் சோலோவாக நடிகரின் வாரிசு இப்படி அதிரடி என்ட்ரி கொடுத்திருப்பதற்கு பின்னால் பெரிய சண்டையே நடந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

மாஸ் நடிகர் கடும் அப்செட்: தனது போட்டி நடிகரின் உதவி வைத்து தனது மனைவி தன்னை ரொம்பவே அசிங்கப்படுத்தி விட்டார் என மாஸ் நடிகர் கடும் அப்செட்டாக இருப்பதால் தான் சோஷியல் மீடியாவில் கூட ஒரு வார்த்தைக் கூட வாழ்த்து தெரிவிக்கவில்லை என்கின்றனர்.

சின்ன நம்பர் நடிகையுடன் தான் மாஸ் நடிகர் சுற்றி வருகிறார் என்றும் நடிகருக்கும் மனைவிக்கும் இடையே விரிசல் பெரிதாக விழுந்து விட்டது என்பதெல்லாம் வதந்தி அல்ல என்றும் நெருங்கிய வட்டாரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக புகைய விட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X