எல்லாம் போச்சா.. அந்த வாரிசு நடிகர் படத்திற்கு எதிர்பார்ப்பே இல்லையாம்?
ஹீரோவாக அறிமுகமாகவுள்ள பிரபல வாரிசு நடிகரின் படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு எதிர்பார்ப்புகள் இல்லாததால், தந்தையும் மகனும் புலம்பி வருகிறார்களாம்.
சென்னை: பிரபல நடிகரின் வாரிசு ஹீரோவாக என்ட்ரி கொடுக்கவுள்ளார். ஏற்கனவே எடுக்கப்பட்ட அந்த ரீமேக் படத்தை டிராப் செய்து விட்டு, மீண்டும் ஒருமுறை அதே படத்தை வேறு ஒரு இயக்குநரை வைத்து இயக்கியுள்ளனர்.
இந்த மாதம் ரிலீசாகவுள்ள அந்த படத்திற்கு ரசிகர்களிடம் போதிய எதிர்பார்ப்பு இல்லாததை அறிந்த அப்பாவும் மகனும் வீட்டில் புலம்பி வருகிறார்களாம்.
இதற்கெல்லாம் காரணம் அந்த இயக்குநர் குடும்பம் விட்ட சாபம் தான் என்ற பேச்சுக்களும் அடிபட்டு வருகிறது.

முதல் கோணல்
தன்னைப் போலவே தனது மகனுக்கும் சினிமாவில் வெற்றி கிடைக்க வேண்டும் என்று எண்ணிய அந்த பிரபல நடிகர், தனக்கு வாழ்க்கை அளித்தவரை வைத்து வேறு மொழியில் வெற்றி பெற்ற ரீமேக் படத்தை இயக்க வைத்தார். அந்த இயக்குநரும், அவருக்கு தெரிந்த பாணியில் அந்த படத்தை எந்த அளவுக்கு கொத்த முடியுமோ அந்த அளவுக்கு கொத்தி கொடுத்தார். இதனால், மகனுக்கு அந்த படம் புடிக்காததை தெரிந்த அப்பா, அந்த இயக்குநரை மாற்றிவிட்டு புதிய இயக்குநரை வைத்து அதே படத்தை எடுத்துள்ளார்.

எத்தனை கிஸ்
முதல் படத்தில் நடித்த நாயகியை அத்தனை முறை உதட்டில் கிஸ் அடித்த வாரிசு நடிகர், இரண்டாவது முறையாக நடிக்கும் போது, அந்த நாயகி போர் அடித்துவிட்டதால், இன்னொரு நாயகியை வைத்து முத்தமழை பொழிந்துள்ளார். எனக்கு கொடுத்த உம்மா எல்லாம் சும்மா தானா என தன்னை கழட்டி விடும் போதே கதறியுள்ளார் அந்த நடிகை.

நல்லா இல்லையே
இரண்டாவது முறை எடுக்கப்பட்ட அந்த படம் வேறு மொழிகளில் வந்த அளவுக்கு எடுக்கப்பட்டிருந்தாலும், பாலிவுட்டில் இருந்து இறக்கப்பட்ட நாயகி பார்க்க நல்லா இல்லையே என ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். மறுபடியும் இன்னொரு நாயகியை போட்டு அவருக்கும் முத்தம் கொடுத்து படத்தை இனிமேலும் எடுக்க முடியாது என்று அந்த விஷயத்தை படக்குழு கண்டு கொள்ளாத மாதிரி கடந்து வருகிறது.

புலம்பல்
இந்த மாதம் எப்படியாவது தன்னுடைய மகனை அறிமுகம் செய்து விட வேண்டியது தான் என்ற முயற்சியில் இறங்கியுள்ள அந்த அப்பாவுக்கு, தியேட்டர் உரிமையாளர்கள் படத்தை வாங்க முன் வரவில்லையாம். ஏனென்றால், படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் கூட எதிர்பார்ப்பு இல்லாமல் இருப்பதே அதற்கு காரணமாம். இதனால், அப்பாவும், மகனும் புலம்பி வருகிறார்களாம். இதற்கெல்லாம் அந்த இயக்குநர் கொடுத்த சாபம் தான் என கோலிவுட்டில் பேசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











